காரைக்குடி மீன் குழம்பு
Page 1 of 1
காரைக்குடி மீன் குழம்பு
மீன்-1/2 கிலோ,
தேங்காய்பால்-1/2 மூடி
புளி-எலுமிச்சை பழ அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-2டீஸ்பூன்
தனியாத்தூள்-3டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1/2டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
வெங்காயம்-100கிராம்
தக்காளி-100கிராம்
மிளகு-1டீஸ்பூன்
கொத்தமல்லி தழை-1/2கட்டு
எண்ணெய்-1குழிக்கரண்டி
எலுமிச்சைபழம்-1
கடுகு-1டீஸ்பூன்
வெந்தயம்-1டீஸ்பூன்
பச்சை மிளகாய்-4
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு
புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கடாயில் என்னை ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum