காய்கறி பழங்களில் ஜடையலங்காரம்
Page 1 of 1
காய்கறி பழங்களில் ஜடையலங்காரம்
*இந்தக் காலத்துப் பெண்களுக்கு தலைவிரி கோலம்தான் விருப்பமான, வசதியான ஹேர் ஸ்டைல்! பின்னல்கூடப் போடத் தெரியாமல் எத்தனையோ பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். ‘‘ஹேர் ஸ்டைல் செய்யக் கத்துக்கிட்டா போதும். கை நிறைய காசு பார்க்கலாம்.
*கல்யாணம், ரிசப்ஷன் மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வெறுமனே ஹேர் ஸ்டைல் மட்டுமே பண்ணிவிட்டுட்டு, ஆயிரக்கணக்குல
சம்பாதிச்சிடலாம்’’ என்கிறார் பிரபல அழகுக் கலை நிபுணர் ஹசீனா சையத். காய்கறிகள், பழங்கள், பொக்கே பூக்கள் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிற வித்தியாசமான ஜடையலங்காரங்கள் சிலவற்றை இங்கே செய்து காட்டுகிறார் அவர்.
*‘‘கிராமத்துப் பக்கங்கள்ல இன்னிக்கும் வளைகாப்பு, சீமந்த நிகழ்ச்சிகள்ல, சாப்பிடற பொருள்களை வச்சுப் பண்ற ஜடையலங்காரம் பிரபலமா இருக்கு. பழங்களையும், காய்கறிகளையும், பாதாம், பிஸ்தானு நட்ஸையும் வச்சுப் பண்ற ஜடையலங்காரம், வழக்கமா நாம செய்யறதைவிட ரொம்ப அழகா இருக்கும்.
*செலவும் கம்மி...’’ என்பவர், முதலில் பழ ஜடையை செய்து காட்டினார்.‘‘முத்து, மணிகளுக்குப் பதிலா, மாதுளம் பழ முத்துக்களை உபயோகிப்போம். ஆரஞ்சுப் பழத்தோட தோலை எடுத்து, நெத்திச்சூட்டி, ராக்கோடி, சந்திரன், சூரியன் மாதிரி வெட்டி வைக்கலாம். ஆரஞ்சுப் பழச் சுளைகள், செவ்வாழை, அன்னாசித் துண்டுகளை எல்லாம் பின்னல்ல வரிசையா அடுக்கலாம்.
*குஞ்சலத்துக்குப் பதில் குட்டிக் குட்டியா 3 ஊட்டி ஆப்பிள்.பச்சை கலர் புடவை கட்டினா, பச்சை திராட்சை, கிரீம் அல்லது வெள்ளை கலர் புடவைக்கு வாழைப்பழம், சிகப்புக்கு ஸ்ட்ராபெர்ரி அல்லது செர்ரி பொருத்தம். ரொம்ப நீர்ச்சத்துள்ள தர்பூசணி, கிர்ணி, நாகப்பழம், கருப்பு திராட்சையெல்லாம் பொருந்தாது.
*அடுத்து காய்கறி ஜடை. இதுல முத்துக்களுக்குப் பதிலா, முளை கட்டின பச்சைப் பயறு. பச்சைப் பட்டாணிகூட அழகா இருக்கும். நெத்திச்சூட்டிக்கு அழகா வெட்டின கேரட். சந்திரன், சூரியனுக்கு வெள்ளை முள்ளங்கி, குடமிளகாய்... பின்னலுக்கு வெள்ளரிக்காய், கேரட், பீட்ரூட்டை அழகா வெட்டி, தனித்தனியாகவோ, அடுக்கடுக்காகவோ வச்சு பின் பண்ணலாம். குஞ்சலத்துக்குப் பதில் எலுமிச்சம் பழம் அல்லது குட்டிக்குட்டி கத்தரிக்காய்.
*மூணாவதா பொக்கே பூக்கள்ல பண்ற ஜடை. சாதாரணமா நாம உபயோகிக்கிற பூக்களைத் தவிர்த்து, சவுக்கு உள்பட, பொக்கேல வைக்கக் கூடிய எல்லாப் பூக்களை வச்சும் பண்றது இது. சம்பங்கிப் பூவோட காம்பைக் கிள்ளிட்டு, பின்னல்ல இடையிடையில வச்சா அழகா இருக்கும்.
*இதே மாதிரி பாதாம், பிஸ்தா, அதோட தோல், முந்திரி, காய்ந்த திராட்சையெல்லாம் வச்சும் ஜடையலங்காரம்
பண்ணலாம். சாட்டின் ரிப்பன், முத்து, சமிக்கி, கண்ணாடி, வெல்வெட் துணி, வளையல்னு வித்தியாசமான பல பொருள்களை வச்சு விதம் விதமான ஜடையலங்காரம் பண்ணலாம்.
*இயற்கையான பொருள்கள்ல பண்றப்ப, வாடாம இருக்க அது மேல ஒருவித ஸ்பிரே அடிக்கணும். அது 8 மணி நேரம் வரைக்கும் அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்’’ என்கிற ஹசீனா, 15 நாள் பயிற்சியில் 50&க்கும் மேலான ஜடை அலங்காரங்களைக் கற்றுக்கொள்ளப் பயிற்சியளிக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பழங்களில் உள்ள சத்துக்கள்
» பழங்களில் உள்ள சத்துகள்
» பழங்களில் உள்ள சத்துக்கள்.
» பழங்களில் உள்ள சத்துகள்
» பழங்களில் என்னென்ன சத்துகள் உள்ளன.
» பழங்களில் உள்ள சத்துகள்
» பழங்களில் உள்ள சத்துக்கள்.
» பழங்களில் உள்ள சத்துகள்
» பழங்களில் என்னென்ன சத்துகள் உள்ளன.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum