தினம் ஒரு நகை!
Page 1 of 1
தினம் ஒரு நகை!
ரம்யா நாயக் ஃபேன்ஸி ஜுவல்லரி டிசைனர் ‘‘காக்க காக்க’ படத்துல ஜோதிகா சிம்பிளா நகை போட்டிருப்பாங்க! அதைப் பார்க்கவே பிரமிப்பா இருந்தது. எளிமையான நகைகள் இவ்வளவு அழகா? நகைகள் மீதான என்னோட முதல் இன்ஸ்பிரேஷன் அதுதான். இப்போ நானே அது மாதிரியான கலர்ஃபுல் நகைகளை செய்ற அளவுக்கு முன்னேறியிருக்கேன்...’’ - விழிகள் படபடக்கப் பேசுகிறார் ரம்யா நாயக். ஃபேன்ஸி நகைகள் செய்வதை முழுநேரத் தொழிலாகவே செய்தால் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துக் காட்டியிருப்பவர் ரம்யா!
‘‘சொந்த ஊர் மங்களூரு. சென்னையில செட்டில் ஆயிட்டோம். அப்பா ஸ்ரீனிவாஸ், கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்ல இருக்கார். அம்மா பத்மா பேக்கரி நடத்துறாங்க. படிக்கிற காலத்துலயே, சினிமாவுல நடிகைகள் போட்டுட்டு வர்ற நகைகள் எங்கே கிடைக்கும்னு தேடி அலைவேன். ஒரு நாள் போட்ட கம்மலை அடுத்த நாள் போட மாட்டேன். கிராண்டா இருக்குறதை விட சிம்பிளா போட்டாலும் வித்தியாசமா இருக்கணும்னு நினைப்பேன். அதனாலேயே ஸ்கூல்ல டீச்சர்ஸ்கூட நான் போட்டுட்டு வர்ற ஃபேன்ஸி நகைகளை கவனிக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா நகை மேல ஏற்பட்டிருந்த ஆர்வத்தை விட அதை உருவாக்குறதுல ஆர்வம் அதிகமாச்சு. டிசைனிங், பெயின்டிங்ல இயல்பாவே எனக்கு ரொம்ப ஆர்வம்.
அது எனக்குக் கை கொடுத்துச்சு. நானே சின்னச் சின்னதா மணிகள் கோர்த்து கம்மல், செயின் செஞ்சு போட்டுகிட்டு ஸ்கூலுக்குப் போனேன். ‘இதை எங்கே வாங்கினே’ன்னு கேட்ட ஃபிரெண்ட்ஸுகிட்ட, ‘நானே செஞ்சது’ன்னு சொன்னேன். அப்பப்போ அவங்களுக்கும் அது மாதிரி செஞ்சு கொடுத்து அசத்தினேன். நான் செய்ற டிசைன்ஸ் எல்லாமே வித்தியாசமா இருக்கும். அதனாலேயே எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. இப்படித்தான் நகைகள் செய்யறது விளையாட்டா ஆரம்பிச்சுது. இதையே ஏன் ஒரு தொழிலா செய்யக் கூடாதுன்னு யோசனை வந்துச்சு. ப்ளஸ் டூ முடிச்சதும் ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல பி.ஏ. ஹிஸ்டரி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் கோர்ஸ்ல சேர்ந்தேன். மூணு வருஷ படிப்பு.
‘ஸ்கேல் இல்லாம நேர்க்கோடு எப்படி வரையறது?’ - இதைத்தான் முதல் நாள் கிளாஸ்ல சொல்லிக் கொடுத்தாங்க. பழங்கால ஓவியங்களை பராமரிக்கிறது, துணிகள்ல வரையறது, பானையில வரையறது, மாடர்ன் ஆர்ட்... எல்லாத்தையும் கத்துக் கொடுத்தாங்க. செகண்ட் இயர்ல ஜுவல்லரி டிசைனிங், டெரகோட்டாவுல நகைகள் செய்றது, கற்களைக் கொண்டு நகை செய்றது, சணல், பேப்பர் நகைகள்... இப்பிடி வெரைட்டியா கத்துக் கொடுத்தாங்க. ‘உன்னோட டிசைன்ஸ் எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கு. தங்க நகைகளைவிட நீ செய்ற இந்த டிசைன்ஸ் அற்புதமா இருக்கு. நீ மட்டும் கடை ஆரம்பிச்சேன்னா பெரிய லெவல்ல வருவே பாரு’ன்னு சொல்லி உற்சாகப்படுத்துவாங்க ஃப்ரெண்ட்ஸ். அவங்க சொன்னது இப்போ பலிச்சிடுச்சு!
நகைகள் செஞ்சு, மார்க்கெட்டுக்கு எப்படி சக்ஸஸா கொண்டு போகலாங்கிறதை உடுப்பிக்குப் போய் டிரெயினிங் எடுத்துக்கிட்டேன். அம்மா, அவங்களோட பேக்கரியில ஒரு பகுதியை என் கடைக்காக ஒதுக்கிக் கொடுத்தாங்க. ஆரம்பத்துல சின்ன சின்ன கம்மல், பிரேஸ்லெட், கொலுசு, செயின் செஞ்சு அக்கம்பக்கத்துல இருக்குறவங்களுக்கு கொடுத்தேன். என் தொழிலைப்பத்தி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லி, பேசி இன்னிக்கு நானே சொந்தமா கடை வைக்கிற அளவுக்கு பிஸினஸ் பிக் அப் ஆயிடுச்சு. ரெண்டு வருஷத்துல ஆயிரம் டிசைனுக்கு மேல பண்ணிட்டேன். பேப்பர், நூல் ரெண்டை மட்டும் வச்சும் நகை பண்ணியிருக்கேன்.
பொண்ணுங்களுக்கு நகை பிடிக்கிற அளவுக்கு வெரைட்டியா போடுறதும் பிடிக்கும். இன்னிக்கு தங்கம் விக்கிற விலையில அதை வாங்க முடியாதவங்களுக்கெல்லாம் ஃபேன்ஸி ஜுவல்ஸ்தான் பெஸ்ட் சாய்ஸ்! அதனால இந்த வேலை எப்பயும் இருந்துட்டே இருக்கும். சல்வாருக்கு போடுற மாதிரி சிம்பிள் செயின், காட்டன் புடவைகளுக்கு ஏத்த மாதிரியான பெரிய சைஸ் டாலர் செயின்னு வெரைட்டியா செய்றேன். நல்ல கலர் காம்பினேஷன், கிரியேட்டிவிட்டி இருந்தா போதும் அற்புதமான டிசைன்களை உருவாக்கலாம். ஒரு பீஸுக்கு குறைஞ்சது 100 ரூபா லாபம் வச்சு வித்தாக்கூடப் போதும்... பிசினஸ்ல நமக்குன்னு ஒரு இடத்தைப் பிடிச்சிடலாம். சீக்கிரமே பெரிய அளவுல என் கடையை விரிவுபடுத்தப் போறேன். ஆன்லைன்ல பர்ச்சேஸுக்காக வெப்சைட் தொடங்கவும் பிளான் பண்ணியிருக்கேன். என் படிப்பும் உழைப்பும் என்னை நல்லா பக்குவப்படுத்தியிருக்கு...’’ - வெகு இயல்பாக, சாதாரண குரலில் ஃபேன்ஸி நகைகளின் பிரமாதமான எதிர்காலத்தைச் சொல்கிறார் ரம்யா நாயக்!
விளக்குகிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி...
சில பல்கலைக்கழகங்களில் இந்தப் படிப்பு ‘பேச்சலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ்’ என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. இளங்கலைப் பிரிவில் 3 ஆண்டு படிப்பு. பி.எஸ்சி., பி.எஃப்.ஏ. ஆகிய பெயர்களில் இருக்கிறது. ஓவியம், இன்டீரியர் டிசைனிங், ஜுவல்லரி மேக்கிங் எல்லாம் கற்றுத் தருகிறார்கள். ஒரு செமஸ்டருக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.14 ஆயிரம் வரை செலவாகும். வேலைக்காகக் காத்திருக்காமல், சுயதொழில் தொடங்கினால் பெரிய அளவில் சாதிக்கலாம். மார்க்கெட்டிங் டெக்னிக் கற்று வைத்திருப்பது நல்லது. பெரிய வீடுகள், ஹோட்டல்களில் கண்ணாடி சுவரில் பெயின்டிங், டிசைன் பண்ணித்தரலாம். நல்ல வருமானம் கிடைக்கும். கலைத்திறனும் ரசனையும் கூடவே பொறுமையும் மிக அவசியம். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, எழும்பூரில் உள்ள காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் படிக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தினம் தினம் திருநாளே பாகம்-2
» தினம், தினம் திருமணம்
» தினம் தினம் திருநாளே
» தினம், தினம் திருமணம்
» தினம் தினம் கருடசேவை
» தினம், தினம் திருமணம்
» தினம் தினம் திருநாளே
» தினம், தினம் திருமணம்
» தினம் தினம் கருடசேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum