தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதட்டுச் சாயம்

Go down

உதட்டுச் சாயம்                                                    Empty உதட்டுச் சாயம்

Post  ishwarya Sat Feb 23, 2013 1:46 pm

உதட்டுச் சாயம் போட்டு முடிந்தவுடன் உதட்டுக்குக் கீழும் மேலும் சிந்திச் சிதறியிருக்கும் சாயக் கறையை மெல்லிய துணியைக்கொண்டு அகற்றி எடுத்துவிட வேண்டும்,உதட்டுச் சாயத்தை நமது நாட்டுப்பெண்கள் நாள் தோறும் பூசுவதைவிட ஏதாவது விசேஷ சந்தப்பத்தில் மட்டுமே பூசிக்கொண்டால் பாராட்டும் விதமாக இருக்கும், அடிக்கடி வெற்றிலைப் போட்டுக் கொண்டு உதடுகளைச் சிவப்பு நிறமாக்கிக் கொள்ளலாம்,

குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் முகத்தில் அழகான அம்சங்கள் இல்லாதவர்கள் கண்களில் குளிர்ச்சிக் கண்ணாடி அணியலாம்,நவீன காலத்து ஒப்பனைச் சாதனங்களைக் கண்களிலோ, கண்களுக்கு அருகிலோ அடிக்கடி உபயோகிக்கக் கூடாது, அவற்றில் கலந்துள்ள ரசாயனப்பொருட்கள் கண் பார்வையையே கெடுத்துவிடக்கூடும்,முகப்பூச்சு பவுடர்களைப் பயன்படுத்தும்போது ஒரே நிற பவுடரை உபயோகிப்பதற்கு பதில் இரண்டு மூன்று வகை நிறப் பவுடர்களை வாங்கி வைத்திருந்து சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒன்றுடன் ஒன்று கலந்து பூசினால் முகம் வசீகரமாக இருக்கும்,
முகத்துக்கு பவுடர் போட்டு முடித்தவுடன் ஒப்பனை கவர்ச்சியளிப்பதற்கென ரோஜ் என்ற ஒருவகை பவுடர் விற்கப்படுகிறது, தேவையான இடங்களில் இந்த பவுடரை இலேசாகத் தடவிவிட்டால் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் சாதரணமாக கன்னங்களில் இதனைத் தடவினால் முகத்தில் இளமைக்களை ததும்பும்.

நல்ல சிவந்த அல்லது வெண்மையான உடல் நிறத்தைப் பெற்றவர்கள்தான் ரோஜ் பவுடர் பூச்சு செய்து கொள்ள வேண்டும், மாநிறமான அல்லது கருமைநிறமுடைய பெண்கள் இந்தப் பவுடரைப் பயன்படுத்தினால் அழகு கெட்டுவிடும்,குளிப்பதற்கு முன்னால் வெள்ளரிக்காயை அரைத்து உடல் முழுவதும் பூசி வைத்திருந்து குளித்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு சருமமும் பட்டுப் போல மிருதுவாகும்.

கோழி முட்டையின் வெள்ளைக் கருவைக் கருவை எடுத்து அதனுடன் பாதாம் பருப்பை அரைத்து சேர்த்து, சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி கால்மணி நேரங்கழித்து சோப்பு போட்டு முகத்தைக் கழுவ வேண்டும்-. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பெண்களின் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் அகன்று முகத்தில் இளமைச் சாயல் படியும்.கடைகளில் விற்கும் ஐஸ் கட்டியைத் தூள் செய்து, ஒரு மெல்லிய துணியிலிட்டு முகத்தில் ஒத்தடம் கொடுப்பது போல தேய்த்து வந்தால் முகம் நல்ல நிறம் பெறும். கோடை வெய்யில் காரணமாக முக சருமத்தில் தோன்றும் வறட்சி அகலும். மஞ்சளைப் பன்னீர் விட்டு நைய அரைத்துப் பூசிக் குளித்து வந்தால் வேண்டாத இடங்களில் உள்ள ரோமங்கள் அகன்று அந்த இடங்களில் சருமம் மென்மையாக ஆகும்.

கண்களை இலேசாக மூடிக்கொன்டு கண் இமைகளில் பன்னீரை ஒரு பஞ்சினால் தொட்டு அடிக்கடி தேய்த்து விட்டால் கண் இமைகள் கவர்ச்சிகரமான நிறங்களைப் பெற்று அழகாக இருக்கும்.

தாமரை, ரோஐ, தாழம்பூ, நந்தியாவட்டை ஆகிய மலர்களில் ஒன்றை அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டாலும் கண் இமைகள் அழகுடன்
காட்சியளிக்கும்.

அதிகமாக தேன் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் என்ற விஷயம் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் தேனை எப்படி சாப்பிட வேண்டும்
என்பது பலருக்குப் புரியாது. உடல் பருமன் குறைய வேண்டுமானால் தேனை குளிர்ந்த நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து காலையிலும் இரவிலும் சாப்பிட்டு வரவேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum