முகப்பரு
Page 1 of 1
முகப்பரு
நம்முடைய தோலில் மிக நுண்மையான மயிர்ப்பை நெய்மச்சுரப்பிகள் உள்ளன. இச்சுரப்பிகளிலிருந்து அவ்வப்போது சுரக்கும் எண்ணெய்ப்பசை வெளியேற முடியாமல் போகும்பொழுது அழுத்தம் உண்டாகிறது. அப்போது அதன் மேற்பகுதிகள் வீக்கமடைகின்றன, பருக்கள் உண்டாகின்றன.
சருமத்தை சுத்தமாக வைத்திருங்கள் சருமத்திலுள்ள துளைகள் அடைத்துக்கொள்வதன் காரணமாகப் பருக்கள் வருவதால், சருமத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் பருக்கள் வராமல் தடுக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு தடவை முகத்தை சோப்புப்போட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.முகத்தை அழுத்தித் தேய்க்காதீர்கள். இதமாகத் தேய்த்தாலே போதும். துளைகளிலுள்ள அடைப்புப் போய்விடும்.மோசமான சோப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. கடுமையாகத் தேய்க்கக்கூடாது. அதனால் முகத்தில் எரிச்சல் உண்டாகும்.
நேரடி நடவடிக்கை எடுங்கள் மிதமான பருக்களுக்கு 'பென்ஸாயில் பெராக்ஸைடு' நல்ல பயன் தரும். இது பருக்களின் மேல் தோலை நீக்கி எண்ணெய்ப் பசை மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றி எரிச்சலைத் தணிக்கும்.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
விட்டுவிட்டுத் தொடர்ந்து பருக்கள் வந்தாலோ, ஹார்மோன் அளவு குறைவதனால் பருக்கள் வருவதாக நீங்கள் நினைத்தாலோ,தொற்றினால் வந்தாகக் கருதினாலோ, வலி இருந்தாலோ, எளிதில் குணமாகவில்லை என்றாலோ நீங்கள் உடனே சருமநோய் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
அழகு சாதனங்களைக் குறைவாகப் பயன்படுத்துங்கள்
ஏராளமான அழகு சாதனப் பொருட்களை முகத்தில் பூசிக் கொண்டால் அவை தோலிலுள்ள துவாரங்களை அடைத்து, எண்ணெய்ப்பசை வெளியேற விடாமல் தடுத்து, பருக்கள் வரச் செய்யும். தோலிலுள்ள துவாரங்கள் அடைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு, அழகு சாதனப்
பொருட்களைக் குறைவாகப் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும். தண்ணீர் கலந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினால், முகத்தை
கழுவும்பொழுது அவை எளிதில் போய்விடும். எனவே அப்படிப்பட்ட பொருட்களையே பயன்படுத்துங்கள்.
இயல்பாகக் குணமாகட்டும்
பருக்கள் தாமகவே போய்விடும் என்றபோதிலும், நாம் பொறுமை இழந்து அவற்றைக் கிள்ளிவிடுகின்றோம். இவ்வாறு செய்வதனால் நமது தோலில் ஆழமான காயம் ஏற்பட்டுத் தொற்றுக்களுக்கு வழிவகுக்கும்,எரிச்சல் உண்டாகும், வடுக்கள் தோன்றும். அதனால்தான் மருத்துவர்கள் பருக்களில் கை வைக்காதீர்கள் என்று அறிவுறுத்துகின்றனர்.
மன அழுத்தத்தினைத் தவிருங்கள்
பருக்கள் வருவதற்கு மன அழுத்ததும் ஒரு காரணம் என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. உதாரணமாக, திருமணம் செய்துகொள்ளும் சமயம் அல்லது பணிக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்பொழுது பலருக்குப் பருக்கள் வருகின்றன. மன அழுத்தத்தினை முற்றிலும் தவிர்க்க இயலாது. எனினும், அது உங்கள் சருமத்தைப் பாதிக்காத வண்ணம் அதனைத் தவிர்ப்பதற்குச் சில வழிகள் இருக்கின்றன. உடற்பயிற்சி, தியானம், பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தினை ஓரளவு தவிர்த்து உங்கள் உடலையும், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
நன்கு சாப்பிடுங்கள்
சாக்லெட், பொரித்த பதார்த்தங்கள், கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களினால் பருக்கள் வருகின்றன. அயோடின் நிறைந்த மீன் போன்ற உணவுப் பொருட்களினால் பருக்கள் வருவதாகவும் கூறுகின்றனர். பருக்களைத் தடுக்க உங்கள் உணவுப் பழக்கத்தை நீங்கள் முற்றிலுமாக மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. எனினும் உப்பு, கொழுப்பு மிக்க உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்ற எளிமையான, ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். நார்ச்சத்து மிக்க உணவுப் பொருட்களை உண்ணுங்கள். அவை உங்கள் உடலிலுள்ள ஹார்மோன் அளவை அதிகரித்து உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum