தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மசாஜ் செய்வதால் சருமம் பொலிவு பெரும்

Go down

மசாஜ் செய்வதால் சருமம் பொலிவு பெரும் Empty மசாஜ் செய்வதால் சருமம் பொலிவு பெரும்

Post  ishwarya Sat Feb 23, 2013 11:55 am

மசாஜ் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால். மசாஜ் கிளப்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. அப்படியென்ன மாயாஜாலத்தை நிகழ்த்துகிறது மசாஜ் என பலருக்கு கேள்வி எழக் கூடும். ஆனால் மசாஜ் தரும் பலன்கள் அதிகம் என்கிறார்கள், உடலியக்க நிபுணர்கள். அதன் பலன்களை பார்க்கலாம்...

1. சருமம்:

மசாஜால் சருமம் பெறும் பலன்கள் இணையற்றவை. சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

2. தசைகள்:

தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு, தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளில் இருந்து அந்த லக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன்மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

3. இரத்த ஓட்டம்:

மசாஜ் செய்யப்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதனால் அங்கு அதிகமான சத்துகள் எடுத்துச் செல்லப்பட்டு, குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இரத்த ஓட்ட வேகம் அதிகரிப்பது, வீக்கத்தைக் குறைக்கிறது. ஒட்சிசனை எடுத்துச் செல்லும் இரத்தத்தின் திறன் அதிகரித்து, அதன் பயன் கூடுகிறது.

4. நரம்புகள்:

இலேசான அழுத்தத்துடன் கூடிய மெதுவான, மென் மையான மசாஜ், நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, அவற்றுக்கு இதமளிக்கும். சற்றுக் கடுமையான மசாஜ், தளர்வான நரம்புகளைத் தூண்டி, அவற்றின் திறனை அதிகரிக்கிறது.

5. ஜீரண மண்டலம்:

கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வது, ஜீரண மண்டலத் தைத் தூண்டி, கழிவுகளை நன்றாக வெளியேற்ற வைக்கிறது. கல்லீரலின் திறன் அதிகரிப்பதால் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் வலுப்படுத்தப்படுகிறது.

6.சிறுநீரக மண்டலம்:

சிறுநீரக மண்டலத்தை மசாஜ் தூண்டுவதால் சிறுநீர் சேர்மானம் அதிகமாகிறது. எனவே உடலிலிருந்து நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.

7. இதயம்:

முறையான மசாஜ், இதயத்தின் சுமையைக் குறைக்கிறது. அதன்மூலம் இதயத்தின் திறனையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக உலர்வான கைகளாலேயே மசாஜ் செய்யப்படுகிறது. ஆனால் சருமம் அதிக உலர்வாகவோ, மிகவும் பலவீனமாகவோ இருந்தால் ஈரமான துணி அல்லது மென்மையான எண்ணெய் மசாஜுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய் மசாஜுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. மசாஜ் செய்யும்போது உராய்வைக் குறைப்பதற்காக சிலர் முகப் பவுடரை பயன்படுத்துவார்கள். அது தவறு. சருமத்தின் துளைகளை அது அடைத்துக் கொள்ளும்.

மசாஜ் செய்யும் முறை:

கை, கால்களில் இருந்து மசாஜை தொடங்க வேண்டும். அடுத்து, நெஞ்சு, கீழ்வயிறு, பின் புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். முகம் அல்லது தலையில் வந்து முடிக்க வேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்வதற்கு துணியைப் பயன்படுத்தலாம். முடிந்தவரை நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்ளலாம். அப்போது அது ஒரு நல்ல உடற் பயிற்சி யாகவும் அமையும். சுயமாக மசாஜ் செய்து கொள்ள முடியாத அளவு பலவீனமானவர்கள் மற்றவர்களின் உதவியை நாடலாம். மசாஜூக்குப் பின் குளிக்கலாம், அல்லது வெதுவெதுப் பான தண்ணீரில் நனைத்த துணியால் உடம்பைத் துடைக் கலாம்.

உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்க வேண்டும். தவிர்க்க வேண்டியவை

·காய்ச்சலடித்தால் எந்தவகை மசாஜும் செய்யக் கூடாது. ·கர்ப்பிணிகளுக்கு கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யக் கூடாது. ·வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சினை, கட்டிகள் இருந்தாலும் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. ·சரும வியாதிகள் உள்ளவர்களுக்கு மசாஜ் ஏற்றதல்ல.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum