செட்டி புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர்
Page 1 of 1
செட்டி புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர்
தாம்பரம் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவில் அருகே மகேந்திரா சிட்டி பஸ் நிறுத்தத்திலிருந்து 3 கிலோ மீட்டர் மேற்கில் அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு:
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அமைத்துள்ளது. செட்டி புண்ணியம் கிராமம். இங்கு 350 ஆண்டுகளுக்கு முன்பு பழமைவாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் நிர்மாணிக்கப்பட்டது. பிறகு சிரஸ்தார் ராவ்சாஹிப் ரங்காச்சார் சுவாமி ப்ரயத்தனத்தில் கடலூர் அருகே உள்ள திருவேந்திரபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதிசுந்தரமான பிரயோக சக்கரத்துடன் சேவை தரும் திவ்யமங்கள விக்ரகத்தை எடுத்து வந்து தம் கிராமமாகிய செட்டிப்புண்ணியம் கிராமத்தில் கீலக வருடம் வைகாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் எழுந்தருள வைத்தார்.
இப்பெருமாள் நித்ய ஆராதனத்துடன் 1848-ம் ஆண்டு வைகாசி மாதம் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அவ்வூருக்கு எழுந்தருளினார். அவருடன் ஸ்ரீயோக ஹயக்ரீவரும் எடுத்து வரப்பட்டார். இதுகுறித்த தகவல் அப்போதைய தெற்கு ஆற்காடு அரசு கெஜெட்டில் வெளிவந்தது தெரிகிறது. அதன்பின் இக்கோவிலில் தாயார் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீஅண்டாள் அகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள்பாளிக்கின்றனர்.
ராமஸ்வாமி ஐயங்கார் தனது முயற்சியால் தஞ்சாவூர் சமஸ்தானத்திலிருந்து ஸ்ரீராமன், சீதை, லஷ்மணன் ஹனுமன் சுவாமிகளை 1868-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி வண்டலூருக்கு எடுத்து வந்தார். அதன்பின் ராமசுவாமி ஐயங்கார் பெங்களூர் செல்வதற்கு முன் ஸ்ரீராமன், சீதை லஷ்மணன், ஹனுமமன் சுவாமிகளை தனது சொந்த கிராமமான செட்டிபுண்ணியத்திற்கு கொண்டு வந்தார். தற்போது வரதராஜசுவாமி கோவிலில் தனி சன்னதியுடன் ஸ்ரீராமன், சீதை, லஷ்மணன், ஹனுமன், சுவாமிகள் அருள்பாளிக்கின்றனர்.
மூலம்:
ஸ்ரீவரதராஜப் பெருமாள்
உற்சவர்: ஸ்ரீதேவநாத
சுவாமி தாயார்: ஸ்ரீஹேமாப்ஜவல்லி
தாயார் ஆகமம்: ஸ்ரீவைகாணசம்
தீர்த்தம்: காஞ்சீபுரம் தாத்தாச்சார்யர்கள்
மேலும் விபரங்களுக்கு போன்: 044-27400836, 27401636.
கோவில் திருவிழாக்கள்: இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை கிராம பொதுமக்களால் திருப்பார்வேட்டை உற்சாவம் நடத்தப்படுகிறது. தைவெள்ளி, ஸ்ரீஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ தேசிகன் சாத்துமுறை, பெருமாள் அவதார உற்சவம், விஜயதசமி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், உடையவர் சாத்துமுறை, ஸ்ரீராமநவமி உற்சவங்கள் உபயதாரர்கள் மூலம் நடந்து வருகிறது. ஆவணி திருவோன நட்சத்திரத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவித்யா தோஷ நிவர்த்தி
சங்கல்ப அர்ச்சனை: மாணவ-மாணவிகளை தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவதற்காக இக்கோவிலில் கல்விக்கடவுளாக விளங்கும் ஸ்ரீவேதாந்த தேசிகர் பூஜைசெய்த ஸ்ரீயோக ஹயக்ரீவர் சுவாமிக்கு ஆண்டுதோறும் ஸ்ரீவித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்காண மாணவர்கள் சிறப்பு அர்ச்சனையில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். .
செட்டிபுண்ணியத்துக்கு எப்படி, எப்போது செல்ல வேண்டும்?
சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு தெற்கே மகேந்திராசிட்டி ஸ்டாப்பிற்கு எதிரில் (லைட் ரூபிங் பேக்டரி) மேற்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் செட்டிப்புண்ணியம் கோவில் உள்ளது. இங்கு செல்லும் பஸ் (60சி) தாம்பரத்தில் இருந்து `வடகால்' என்ற பெயர் பலகையுடன் காலை 10 மணி, மதியம் 1.40 மணி, மாலை 6.20 மணி, இரவு 9.10 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு புறப்படும். செட்டிப்புண்ணியத்திலிருந்து தாம்பரத்திற்கு காலை 6.40 மணி, மதியம் 11.20 மணி, மாலை 2.55 மணி, இரவு 7.40 மணி. காலை 9 மணி, மாலை 5 மணிக்கு பஸ் புறப்படும். தாம்பரம்-செங்கல்பட்டு பஸ்சில் சிங்கப்பெருமாள் கோவிலில் இறங்கி ஆட்டோ வைத்துக் கொள்ளலாம்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.
புதன், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கோயில் அதிக நேரம் திறந்திருக்கும்.
மாணவர்களுக்காக சிறப்பு அர்ச்சனை:
செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவிலில் மாணவ-மாணவிகளுக்காக பிப்ரவரி மாதம் சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை என்றழைக்கப்படும் இந்த பூஜை மிகவும் விசேஷமானது. மாணவர்களுக்கு தேர்வில் ஏற்படும் பயத்தை போக்கவும், ஞாபகம் மறதி இல்லாமல் இருக்கவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் இந்த பூஜை செய்யப்படுகிறது.
பூஜையின் போது பேனா, பென்சில் வைத்து அர்ச்சனை செய்யப்படும். அதன் பிறகு தரப்படும் ரட்சையை கையில் கட்டிக்கொண்டால் கல்வியில் மேம்பாடு உண்டாகும். வரும் பிப்ரவரி மாதமும் இந்த சிறப்பு அர்ச்சனை பூஜை நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகள் இந்த பூஜையில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம். மாணவர்களின் பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை பதிவு செய்தால் அவற்றை சிறப்பு பூஜை தினத்தன்று பயன்படுத்தி அர்ச்சனை செய்வார்கள்.
இதனால் மாணவர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். டிசம்பர் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இந்த பூஜையை யோக ஹயக்ரீவர் டிரஸ்டியும், கோவில் நிர்வாகமும் ஒருங்கிணைந்து நடத்துகிறார்கள். இது தொடர்பான மேலும் தகவல் அறிய டிரஸ்டை 28172 303, 28172 2634 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செட்டி புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்

» செட்டி நாட்டு சைவ சமையல்
» செட்டி நாட்டு புளியோதரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum