தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேவதைகளை உருவாக்கும் ஸ்பா

Go down

தேவதைகளை உருவாக்கும் ஸ்பா Empty தேவதைகளை உருவாக்கும் ஸ்பா

Post  ishwarya Fri Feb 22, 2013 2:38 pm

ஷூட்டிங் இல்லாத நாள்களிலும் அடுத்த படத்துக்குத் தயாராவதற்கான இடைவெளியிலும் கேரளாவுக்கோ, இமயமலைக்கோ ஓய்வெடுக்க விசிட் அடிக்கிற நட்சத்திரங்களில் ரஜினி, விக்ரம், த்ரிஷா எனப் பலரைப் பட்டியலிடலாம். ஓய்வு என்கிற பெயரில் அவர்கள் அங்கே எடுத்துக் கொள்வது ‘ஸ்பா’ சிகிச்சை!

அதென்ன ‘ஸ்பா’ என்கிறவர்களுக்கு சின்னதாக ஒரு விளக்கம்...என்பதன் சுருக்கமே ஸ்பா. அக்வா என்றால் தண்ணீர். தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிற அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சையே ஸ்பா! இன்னும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமா? கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்ததையும், அந்தப்புர ராணிகள் பாலும், தேனும் கலந்து குளித்ததையும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த ஆடம்பரக் குளியல்களின் அதிநவீன வடிவமே ஸ்பா!

உலகம் முழுக்க பிரபலமான ஸ்பா சிகிச்சைக்கு, சமீப காலமாக இந்தியாவில், குறிப்பாக சென்னையில் செம மவுசு! அப்படி என்னதான் நடக்கிறது ஸ்பா சிகிச்சையில்? ஆர்வம் மேலிட நாம் ஆஜரான இடம் சென்னையில் உள்ள ‘ஒரைஸா’ ஸ்பா மையம். மனதை வருடும் நறுமணம், ரம்யமான, அமைதியான, சுத்தமான சூழல்... பூலோக சொர்க்கம் என்று சொல்லலாம். ஸ்பா சிகிச்சை செய்யப்படுகிற சூழல் அப்படித்தான் நினைக்க வைக்கிறது.
‘‘வெளிநாடுகள்ல வாரத்துல 5 நாள் ஓடி, ஓடி உழைப்பாங்க.

வார இறுதி நாள்களை அவங்களுக்காக மட்டுமே, அவங்களுக்குப் பிடிச்ச விஷயங்களுக்காக மட்டுமே செலவழிப்பாங்க. அந்த விஷயங்கள்ல ஸ்பா நிச்சயம் இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்த்த பிறகு, களைப்பு நீங்க, யாராவது உடம்பைப் பிடிச்சு விட மாட்டாங்களான்னு தோணுமில்லையா... கை, காலை அமுக்கி விட்டா நல்லாருக்கும்னு நினைப்போமில்லையா?

அந்த அனுபவத்துக்கான சரியான சாய்ஸ் ஸ்பா மட்டும்தான். ஒரு காலத்துல வெளிநாட்டுக்காரங்க பண்ணிக்கிற விஷயமா இருந்த ஸ்பா, இப்ப யார் வேணாலும், எப்ப வேணாலும் பண்ணிக்கற அவசியமான சிகிச்சையா மாறியிருக்கு. கல்யாணம் மாதிரி வீட்ல ஏதோ பெரிய விசேஷம்னு வச்சுப்போம். மாசக்கணக்குல ஓடியாடி வேலை பார்க்க வேண்டியிருக்கும்.

ஷாப்பிங், அலைச்சல்னு எல்லாம் முடிஞ்சதும், மனசுக்கும் உடம்புக்கும் ரெஸ்ட் தேடி எங்கயாவது போக மாட்டோமானு நினைப்போம். உடம்புல உள்ள களைப்பை நீக்கி, மனசையும் புத்துணர்வாக்கற மேஜிக்தான் ஸ்பா...’’ - நீண்ட விளக்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார் ‘ஒரைஸா’ ஸ்பா சென்டரின் உரிமையாளர் லதா மோகன்.

‘‘ஃபேஷியல்ல தொடங்கி, தலைக்கான மசாஜ், கை, கால்களுக்கான மசாஜ், உடம்புக்கான மசாஜ், முதுகுக்கான மசாஜ்னு ஸ்பால நிறைய வகைகள் இருக்கு. சாதாரண ஃபேஷியல், மசாஜுக்கும், ஸ்பா-வுக்கும் அப்படி என்னதான் வித்தியாசம்னு நிறைய பேர் கேட்கறாங்க. ஸ்பாவுக்காக உபயோகிக்கிற பொருள்கள் எல்லாமே இயற்கையான முறையில தயாரிக்கப்படுது. கெமிக்கல் கிடையாது.

பொத்தாம் பொதுவா ஒரே கிரீம்... எல்லாருக்கும் அதையே வச்சு மசாஜ் பண்ற கதையெல்லாம் இதுல கிடையாது. ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஏத்தபடி பிரத்யேக கிரீம், எண்ணெய், பேக்னு எல்லாம் உண்டு. உடம்பு வலியைப் போக்கற ஸ்பெஷல் சிகிச்சைகளும் ஸ்பால இருக்கு!’’
‘ஐயையே... பாடி மசாஜா... அதெப்படி

இன்னொருத்தர்கிட்ட உடம்பைக் கொடுக்கறது?’ எனக் கூச்சப்படுகிறவர்களுக்கு அந்த சங்கோஜத்தையும் சங்கடத்தையும் போக்குகிறது ஸ்பா.
யெஸ்... இதில் இரண்டு விதமான மசாஜ் உண்டு. உடையோடு செய்யக் கூடிய தாய் மசாஜ். டைட்டான உடம்பைத் தளர்த்தி, இழுத்து, மடக்கிச் செய்கிற இந்த மசாஜுக்கு பிறகு சில கிலோ எடை குறைந்த மாதிரி உணரலாம். உடலிலுள்ள கழிவு நீர் மொத்தமும் வெளியேறி, உடல் லேசாகும்.
குறைந்த உடைகளுடன் செய்யப் படுகிற மற்ற மசாஜ் வகையறாக்களிலும், உடம்பைப் பற்றிய கூச்சம் இல்லாமல் செய்வதுதான் ஸ்பாவின் சிறப்பே!

‘‘தலை முதல் கால் வரையிலான ஸ்பாவுக்கு 5 மணி நேரம் வேணும். அவ்ளோ நேரம் செலவிட முடியாதவங்க, கால்களுக்கான ஃபுட் ஸ்பா மட்டும் எடுத்துக்கிட்டாலே போதும். இன்னிக்கு ஐ.டிலயும், சாஃப்ட்வேர்லயும் வேலை பார்க்கிற பலரும், வாரத்துல ஒருநாளோ, ரெண்டு நாளோ ஃபுட் ஸ்பா எடுத்துக்கிறதை விரும்பறாங்க. உடம்போட அத்தனை நரம்பு முனைகளும் முடியற இடம் கால்கள்.

அதனால கால்களுக்குச் செய்யற ஸ்பா, ஒட்டுமொத்த உடம்பையும் ரிலாக்ஸ் செய்யும்’’ என்கிற லதா மணப்பெண்களுக்கான பிரைடல் ஸ்பா பற்றிச் சொல்கிற தகவல்கள் ரொம்பவே ஸ்பெஷல்! ‘‘எல்லா வேலைகளும் முடிஞ்சு, கல்யாணத்துக்கு ரெண்டுநாள் முன்னாடி வந்தாங்கன்னா போதும். தலைலேருந்து, கால் வரைக்குமான ஸ்பா செய்த பிறகு, சந்தனம், மஞ்சள், அரிசி, ரோஜா, ஜாஸ்மின் ஆயில் எல்லாம் கலந்த பேக் போட்டு, ரோஜாவும் பாலும் கலந்த தண்ணீர்ல ஊறி, ஒரு குளியலும் போட்டாங்கன்னா, தேவதை மாதிரி ஆயிடுவாங்க...’’ - எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது லதாவின் பேச்சு. அட... தேவதைகள் உருவாகிறார்கள்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum