தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்ன எடை அழகே!

Go down

என்ன எடை அழகே! Empty என்ன எடை அழகே!

Post  ishwarya Fri Feb 22, 2013 2:01 pm

நடிகை கஸ்தூரி இப்போது ஷோபினி, சங்கல்ப் என இரண்டு குழந்தைகளுக்கு அம்மா! மகளுக்கு 6 வயது. மகனுக்கு 6 மாதம். கடமைகளை முடித்த திருப்தியுடன் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸுக்கு தயாராகிறார் என்பதை ‘சிக்’கென்ற அவரது உடல் கட்டே காட்டிக் கொடுக்கிறது!

‘‘முதல் குழந்தை பிறந்தப்ப நான் ரொம்ப ஆக்டிவா இருந்தேன். வெயிட் போடலை. என் உடம்புல பெரிசா எந்த மாற்றத்தையும் ஃபீல் பண்ணலை. 6 வருஷங்களுக்கு அப்புறம் இதோ பையன் பிறந்திருக்கான். அவன் வயித்துல இருந்தப்பவே, சில காரணங்களுக்காக டாக்டர்ஸ் என்னை ரெஸ்ட்டுல இருக்கச் சொல்லிட்டாங்க. அதோட விளைவு... 17 கிலோ எடை அதிகமாச்சு. என்னோட உடல் வடிவமே மாறிப் போச்சு.

முதல் குழந்தை பிறந்தப்ப இல்லாத இந்த மாற்றம் எனக்குக் கவலையைக் கொடுத்தது. ‘இது நான் இல்லை’ன்னு உணர்ந்தேன். உடனடியா ஸ்விம்மிங் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஸ்விம்மிங் எப்போதுமே எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு எக்சர்சைஸ். குழந்தை பிறந்து ஒரு வருஷத்துக்கு தசைகள் எல்லாம் வலுவிழந்து, பலவீனமா இருக்கும். சரியான ஆலோசனை இல்லாம கொஞ்சம் கடுமையான பயிற்சிகளைச் செய்தா, தசைகளுக்கு ஆபத்து. ஆனா, ஸ்விம்மிங் அப்படியில்லை. ஒட்டுமொத்த உடம்புக்கும் ஏத்த அருமையான பயிற்சி.

வாரத்துல 3 நாள், ஒன்றரை மணி நேரம் நான் பண்ற ஸ்விம்மிங்தான், எக்குத்தப்பா எகிறிப் போன என்னோட எடையைக் கட்டுக்குள்ள கொண்டு வந்திட்டிருக்கு...’’ என்கிறவர் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் இரண்டு விஷயங்களைச் செய்யத் தவறுவதில்லையாம்... ஒன்று குட்டிக் குட்டித் தூக்கம். இன்னொன்று சின்னச் சின்னதாக உடற்பயிற்சி!

‘‘குழந்தை பெத்த பெண்களுக்கு எடை அதிகரிக்கிறது சகஜம். கொஞ்சம் சுதாரிச்சுக்கலைன்னா, அப்புறம் அந்த எக்ஸ்ட்ரா கிலோக்களை என்ன பாடு பட்டும் குறைக்க முடியாது. ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன்... உங்க குழந்தைக்கு எவ்ளோ மாசம் தாய்ப்பால் கொடுக்க முடியுமோ கொடுங்க. தாய்ப்பால் கொடுத்தா அழகு போயிடும்னு யார் சொன்னது? கர்ப்பமா இருந்த போதும், குழந்தை பெத்த உடனேயும் உங்க உடம்புல சேர்ந்த அத்தனை எக்ஸ்ட்ரா எடையையும் வந்த வேகத்துல சரசரன்னு இறங்கி, உங்க பழைய உடல்வாகு திரும்பறதை உணர்வீங்க.

நான் அப்படித் தான்... என் குழந்தையும் நானும் நினைச்ச போ தெல்லாம் தூங்கறோம். நல்லா ரெஸ்ட் எடுக்கறோம். ரெண்டு பேருமே பசியோட எழுந்திருக்கிறோம். நான் நல்லா சாப்பிடறேன். பால் கொடுக்கறேன். இன்னிக்கு பழைய கஸ்தூரியா உங்க முன்னாடி நிக்கறேன்னா இதுதான்
முக்கியக் காரணம்!

சாப்பாட்டு விஷயத்துல நான் 101 சதவிகித சைவம். முட்டைகூடத் தொட மாட்டேன். அதனால உண்டாகிற புரோட்டீன் இழப்பை ஈடுகட்டியாகணுமே... துவரம் பருப்பு, பயத்தம்பருப்புல தொடங்கி, வேர்க்கடலை வரைக்கும் எந்த பருப்பு வகையையும் விட்டு வைக்க மாட்டேன். பருப்புல கிடைக்காத புரோட்டீனா, அசைவத்துல கிடைச்சிடப் போகுது? இன்னும் சொல்லப் போனா பருப்பு சாதம் சாப்பிடறது என்னைப் பொறுத்த வரை தங்க பஸ்பம் சாப்பிடறதுக்கு சமமானது.

உணர்வுல மட்டுமில்லீங்க... உணவுலயும் தமிழ் கலாசாரம்தான் என் சாய்ஸ். பூசணிக்காய், கொத்தவரங்காய், கோவைக்காய்னு தமிழ் காய்கறிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். விதம் விதமான கீரைகள் நமக்குக் கிடைச்சிருக்கிற பெரிய வரம். காய்கறிகளும் கீரையும் இல்லாம என்னோட நாள் எதுவும் நகராது. கல்யாணத்துக்குப் பிறகு சில வருஷங்கள் அமெரிக்கால இருந்தேன். அங்கே கிடைக்கிற பிராக்கோலி, அஸ்பகரஸ்னு எல்லா காய்கறிகளையும் நம்மூர் ஸ்டைல்ல பொரியல் பண்ணக் கத்துக்கிட்டேன்.

வெளியூரோ, வெளிநாடோ, ஷூட்டிங் ஸ்பாட்டோ... எந்த இடமா இருந்தாலும் கொஞ்சம் வேக வச்ச காய்கறி, ஒரு கப் தயிர், ரெண்டு சப்பாத்தி இருந்தாலே போதும் எனக்கு. நம்ம ஆரோக்கியத்துக்கு சாப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தூக்கமும் அவசியம். குழந்தை பிறந்திருக்கிறதால, என்னால ராத்திரி சரியான நேரத்துக்குத் தூங்க முடியறதில்லை. அதை ஈடுகட்ட, மதியம் சாப்பிட்டதும், அரை மணி நேரம் பூனைத் தூக்கம் போட்டாகணும் எனக்கு.

இத்தனை தெளிவா பேசற, செயல்படற எனக்கு ஒரு விஷயம் மட்டும் இப்பவும் பெரிய சேலன்ஜாவே இருக்கு. நைட் ஷோ படம் பார்க்க தியேட்டருக்கு போனா, ஐஸ்கிரீமோ, பாப்கார்னோ இல்லாம என்னால படத்துல ஒன்ற முடியாது. 3 மணி நேரம் கொறிக்கிற பாப்கார்ன் ரூபத்துல உள்ளுக்குள்ள போகற கொழுப்பைக் கரைக்க, அடுத்தடுத்த நாள்கள்ல கூடுதலா ஒரு மணி நேரம் எக்சர்சைஸ் பண்ணி, சரிகட்டிடுவேன். ஏன்னா... ஐ லவ் மை செல்ஃப்!’’

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum