ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
Page 1 of 1
ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
சாதத்துக்கு...
பொன்னி பச்சரிசி - 2 கப்,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - சிறிது,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.
பொடிப்பதற்கு...
காய்ந்த மிளகாய் - 4,
தனியா, கடலைப் பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன்,
சுத்தமான கருப்பு எள் - 2 டீஸ்பூன்,
கொப்பரைத் தேங்காய் - கால் மூடி.
புளிக் கரைசலுக்கு...
கருப்பு புளி - ஒரு பெரிய ஆரஞ்சு பழ அளவு,
வெல்லம் - எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்.
தாளிக்க...
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப,
கடுகு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுந்து - தலா 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8,
வேர்க்கடலை - அரை கப்,
கறிவேப்பிலை சிறிது.
பொடிப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். எள்ளையும், தேங்காய் கொப்பரையையும் கடைசியில் சேர்த்துப் பொடிக்கவும். இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் 2 சுற்று சுற்றி எடுக்கவும். புளி, வெல்லம் இரண்டையும் சுத்தம் செய்து புளியை நன்கு ஊற வைத்துக் கரைத்து அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அதைக் கொதிக்க வைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும். அரிசியை உதிரி, உதிரியான சாதமாக வடிக்கவும். பின் அதை ஒரு தட்டில் கொட்டிப் பரப்பி, சிறிது உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஆற விடவும். எண்ணெயைக் காய வைத்து தேவையான அளவு கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து, புளிக் கரைசலுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது சாதத்தில் கொஞ்சம் தாளித்த புளிக் கரைசல் சேர்த்துக் கலந்து, அதற்கு மேல் பொடியைத் தூவிக் கிளறவும். உப்பு, புளி, காரம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்து, அதற்கு மேல் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலையை இன்னும் கொஞ்சம் தூவி அலங்கரித்து, ஆறியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை 2-3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். கை படாமல் வைத்திருக்க வேண்டும்.
கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும். காரமான உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் வறுவலுடன் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum