டோக்ளா
Page 1 of 1
டோக்ளா
கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - கால் கப்,
மிளகாய் தூள் - அரை டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
பருப்புக்கு:
துவரம் பருப்பு - 1 கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 3,
பொடியாக நறுக்கிய தக்காளி - 1,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது,
சர்க்கரை (விருப்பப்பட்டால்) - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
டோக்ளாவுக்கு கொடுத்துள்ள பொருள்களை நன்கு கலந்து, தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு மாதிரிப் பிசைந்து, 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அதில் 5 - 6 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு கொதி
வந்ததும், தூள் வகைகளைச் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, சீரகம், வேர்க்கடலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். உப்புச் சேர்க்கவும். தாளித்ததை கொதிக்கும் பருப்புடன் சேர்க்கவும். டோக்ளா மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, கத்தியால் டைமன்ட் வடிவத்தில் வெட்டவும். பின்பு பொரித்துக்கொள்ளவும். பருப்பு கொதிக்கும் போது, இந்தத் துண்டுகளை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.
பருப்பை மெதுவாகக் கலக்கிக் கொண்டே சேர்த்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாது.7 - 8 நிமிடங்கள் தணிந்த தணலில் வேக விடவும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி, சுற்றிலும் நெய் விட்டு, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum