தமிழக கோவில்களில் நந்தி
Page 1 of 1
தமிழக கோவில்களில் நந்தி
திருவையாற்றிலும், திருமழபாடியிலும் அழகிய நந்திகேசுவரரின் செப்புத் திருவுருக்கள் உள்ளன. சென்னைக்கு அருகில் உள்ள ஆதம்பாக்கத்தில் நந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு நந்தியின் திருவுருவம் உள்ளது. நந்திகேசுவரர் சிவனை வழிபட்ட தலம் இது. திருமழபாடியில் அதிகார நந்திக்கும் சுயம்பிரபைக்கும் செப்புத் திருவுருவங்கள் உள்ளன. இங்கு நந்திக்கு மனித முகமே உள்ளது.
திருவாரூரில் அதிகார நந்தியை நின்ற நிலையில் அஞ்சலி ஹஸ்தராகத் தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் மூன்றாம் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் இவைகளைச் தாண்டி உள்ளே சென்றால் அதிகார நந்தீஸ்வரரைத் தரிசிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய நந்திகளுள் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தியும் ஒன்று.
இது கல் நந்தி. இதன் உயரம் 12 அடி. நீளம் 12.5 அடி. 8.25 அடி அகலம் கொண்ட இதன் எடை 25 டன்கள். இந்த நந்திக்கு மிளகு தண்ணீர் அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உண்டு. இதுபோன்று நந்திகள் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் உள்ளன.
கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம், திருவிடைமருதூர், திருவாவடுதுறை போன்ற இடங்களில் உள்ளன. கும்பகோணத்திற்கு அருகில் கொருக்கை என்ற ஊரில் உள்ள புஷ்பவல்லி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவசக்தி சன்னதியின் முன் இரண்டு நந்திகள் உள்ளன.
பிரதோஷ நாளில் இரு நந்திகளுக்கும் சேர்ந்தாற்போல் நிலக்கடலை, முந்திரி பருப்பு ஆகியவற்றாலான மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மழை பெய்விக்கும் சக்தி கொண்ட நந்தி திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் கிழக்கு கோபுரவாசல் வழியாக உள்ளே காணப்படும் பிரம்மநந்தி.
இந்நந்தியைச் சுற்றி நீர் நிரப்பி வைத்தால் மழை வரும் என்ற நம்பிக்கை உள்ளது. திருக்கள்ளம் என்ற ஊருக்கு நந்திக்கிராமம் என்ற பெயர் உண்டு. இங்கு தினசரி பிரதோஷ தரிசனம் நடைபெறுகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில் உள்ள கோயிலில் கைலாசநாதர் மீது படும் சூரிய கதிர்கள் நந்தியின் இரு கொம்புகலுக்கிடையே பாய்ந்து விழுகிறது.
சில ஆலயங்களில் நந்தி இறைவனை நோக்கி இராமல் ஆலய வாசலைப் பார்த்து இருக்கின்றன. திருவலம் என்னுமிடத்தில் உள்ள கோவிலில் நந்தி வாசலை நோக்கியே உள்ளது. கஞ்சாரன் என்ற அசுரணை இறைவன் ஆணையால் நந்திதேவர் துரத்திச் சென்று பின் திரும்பாமல் அப்படியே இருந்துவிட்டதாக ஐதீகம்.
வடதிருமுல்லைவாயிலிலும் நந்தி வாசலை நோக்கியே உள்ளது. உலகாயத வாழ்க்கையில் விருப்பம் உள்ளவர்கள் இறைவனிடத்தில் இருந்து விலகி ஓடுகிறார்கள். ஆனால் கருணா தயாபதியான இறைவன் அம்மக்களை அருள் புரிய துரத்தி வருகிறான். திருவைகாவூரில் இருக்கும் நந்தி இத்தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கோவில்களில் விக்கிரகங்களை தொட்டு கும்பிடலாமா????

» கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது...
» கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது...
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum