தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்டஃப்டு பப்பட்

Go down

ஸ்டஃப்டு பப்பட் Empty ஸ்டஃப்டு பப்பட்

Post  ishwarya Wed Feb 20, 2013 12:28 pm

என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு (பெரியது) - 1,
துருவிய பனீர் - 50 கிராம்,
பச்சை மிளகாய் விழுது - தேவைக்கேற்ப,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
கரம் மசாலா தூள் - 1 சிட்டிகை,
எலுமிச்சைச்சாறு - சிறிது,
மசாலா அப்பளம் - 8 முதல் 10.


எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும். அத்துடன் உப்பு, துருவிய பனீர், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலா, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும். ஒவ்வொரு அப்பளத்தையும் தண்ணீரில் நனைத்து, உடனே எடுத்து, ஒரு துணியால் ஒற்றியெடுக்கவும். மசாலா கலவையில் சிறிதை எடுத்து, அப்பளத்தின் ஒரு பக்கத்தில் வைத்து, மெதுவாக உருட்டி, தண்ணீர் தொட்டு, ஓரங்களை அழுத்தி ஒட்டவும். இதே போல எல்லா அப்பளங்களையும் செய்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum