காரட் பொங்கல்
Page 1 of 1
காரட் பொங்கல்
பச்சரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - அரை கப்
பொடியாக அரிந்த தக்காளி - ஒரு கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
புதினா இலைகள் - கால் கப்
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
காரட் துருவல் - 2 கப்
பச்சை பட்டாணி - அரை கப்
கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
* அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து, அது சூடானதும் கடுகைச் சேர்க்கவும்.
* கடுகு வெடித்ததும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து, அதன் பிறகு அரிந்த தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
* பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, புதினாவை நன்கு அரைத்து, சேர்த்து நன்கு வதக்கவும்.
* அதன் பின் காரட் துருவல், பட்டாணி, மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.
* ஊற வைத்துள்ள அரிசி, பருப்பினை நீரை வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு, அத்துடன் வதக்கின கலவையைச் சேர்த்து, தேவையான உப்பு, நீர், தேங்காய் பால் சேர்த்து கிளறி, குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
* அரிசி நன்கு வேகும் வரை வைத்திருந்து (விரும்பினால் சற்றுக் குழைய விட்டு கொள்ளலாம்) பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum