தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிசிபேளா பாத்

Go down

பிசிபேளா பாத் Empty பிசிபேளா பாத்

Post  ishwarya Mon Feb 18, 2013 6:18 pm

பச்சரிசி - 2 கப்,
பெரிய வெங்காயம் - 1 கப்,
மஞ்சள் தூள் - சிறிது,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - சிறிது,
புளி - 1 சிறு உருண்டை,
துவரம் பருப்பு - அரை கப்,
தக்காளி - 4,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 1 டீஸ்பூன்.

ஒன்றாகக் கலந்து நன்கு வறுத்து, அரைக்க:

காய்ந்த மிளகாய் - 6 முதல் 8,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது,
சீரகம் - 1 டீஸ்பூன்.

அரிசியைக் கழுவி, துவரம் பருப்புடன் சேர்த்து, சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கி, அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும்.

அதில் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, அரைத்து வைத்துள்ள பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிட்டு, இறக்கி, சாதத்துடன் சேர்த்து, நெய்யும் விட்டு நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு பிடி பச்சை பட்டாணியை தக்காளியுடன் சேர்த்து வதக்கிச் செய்யலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum