ஃபிரெண்ட்ஷிப் பரோட்டா
Page 1 of 1
ஃபிரெண்ட்ஷிப் பரோட்டா
என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு:
கோதுமை மாவு - 2 கப்,
நெய் - கால் கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
முதல் பூரணத்துக்கு:
வேக வைத்த பச்சை பட்டாணி - அரை கப்,
பச்சை மிளகாய் - 1,
இஞ்சி - 1 சிறிய துண்டு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - சிறிது.
வெண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாக அரைத்து, சிறிது வெண்ணெயில் பச்சை வாசனை போக வதக்கி, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இரண்டாவது பூரணத்துக்கு:
கேரட் துருவல் - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 1,
இஞ்சி - 1 சிறிய துண்டு,
பூண்டு -1 பல்,
உப்பு - தேவைக்கேற்ப,
சீரகம் - அரை டீஸ்பூன்,
வெண்ணெய் - சிறிது.
கேரட் முதல் சீரகம் வரையிலான எல்லாவற்றையும் அரைத்து, வெண்ணெயில் வதக்கி உருட்டி வைக்கவும்.
எப்படிச் செய்வது?
கோதுமை மாவில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவாகப் பிசைந்து கொள்ளவும். மாவிலிருந்து பெரிய உருண்டையை எடுத்து, கனமான பூரியாகத் திரட்டி, அதன் நடுவில் முதல் பூரணத்தில் ஒன்று, இரண்டாவது பூரணத்தில் ஒன்றுமாக இரண்டு உருண்டைகளை வைத்து, எல்லா பக்கங்களையும் இழுத்து மூடி, மெதுவாக, பூரணம் வெளியே வராதபடி, மறுபடி தேய்க்கவும். சூடான தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு, மிதமான தீயில் இரண்டு பக்கங்களும் வேக விட்டு, எடுத்து தயிர் அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராஜ்மா பரோட்டா
» ஆலு மட்டர் பரோட்டா
» சுவையான... ஆலு பரோட்டா
» பன்னீர் பரோட்டா
» பரோட்டா சிக்கன் குருமா
» ஆலு மட்டர் பரோட்டா
» சுவையான... ஆலு பரோட்டா
» பன்னீர் பரோட்டா
» பரோட்டா சிக்கன் குருமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum