ஜனவரி மாத பிரசாதங்கள் : சேமியா சர்க்கரைப் பொங்கல்
Page 1 of 1
ஜனவரி மாத பிரசாதங்கள் : சேமியா சர்க்கரைப் பொங்கல்
நமக்குத் தெரிந்த அபூர்வமான விஷயங்களை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்வது ஆர்வமிக்க மனித இயல்பு. அதிலும் ஏதேனும் ஊருக்கோ அல்லது புதிதாகத் திறக்கப்பட்ட ஓட்டலுக்கோ போய் அங்கே ஏதாவது புது உணவுப் பொருளை சாப்பிட்டு வந்தோமானால், அதை நம் உறவினருக்கும் நண் பர்களுக்கும் தெரிவித்து மகிழ்வோம், அவர்களையும் அதை ருசிக்கச் சொல்லி சிபாரிசு செய்வோம். ஒரு கட்டத்தில் அந்த உணவுப் பொருளை நாமே தயாரிக்கவும் முயற்சி செய்வோம். அதுவே ஆன்மிக உணர்வுடன் செய்வோமானால் அது புதுத் தகவலுக்குத் தகவல்; புது முயற்சிக்கு முயற்சி; கூடவே கடவுளையும் நினைத்துக் கொள்ளும் போனஸ் உணர்வு. அந்த வகையில், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் உணவு வகைகளை இறைவனுக்கான பிரசா தமாகத் தயாரித்து, இறைவனுக்கு அர்ப்பணித்து, பிறகு உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள்.
-சந்திரலேகா ராமமூர்த்தி
சேமியா சர்க்கரைப் பொங்கல்
என்னென்ன தேவை?
சிறிது நெய்யில் வறுத்த சேமியா - 1 கப், வறுத்த பாசிப்பருப்பு - அரை கப், வெல்லம் - ஒன்றரை கப், நெய் - அரை கப், ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன், பால் அரை கப், பல், பல்லாகக் கீறி, நெய்யில் வறுத்த தேங்காய் -சிறிது.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நெய்யில் பாதியைக் காய வைத்து, முந்திரி, திராட்சையை வறுத்து, 2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் சேமியாவைச் சேர்த்து நன்கு வேக விடவும். வெல்லத்தைப் பொடித்து, அரை கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, சேமி யாவில் சேர்க்கவும். அத்துடன் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு சேர்ந்து வரும்வரை மெதுவாகக் கிளறவும். கடைசியில் பால், ஏலக்காய் தூள், வறுத்த தேங்காய், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேமியா பொங்கல்
» சர்க்கரைப் பொங்கல்
» பால் சர்க்கரைப் பொங்கல்
» சமையல்:பால் சர்க்கரைப் பொங்கல்
» சேமியா பொங்கல்
» சர்க்கரைப் பொங்கல்
» பால் சர்க்கரைப் பொங்கல்
» சமையல்:பால் சர்க்கரைப் பொங்கல்
» சேமியா பொங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum