தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதியில் இன்று கருட சேவை

Go down

திருப்பதியில் இன்று கருட சேவை Empty திருப்பதியில் இன்று கருட சேவை

Post  amma Mon Jan 14, 2013 1:16 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவை யொட்டி இன்று (சனிக்கிழமை) கருட சேவை நடக்கிறது. பிரம்மோற்சவத்தில் ஊஞ்சல் சேவையை காண் போருக்கு இம்மையிலும் மறுமையிலும் கோடானுகோடி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். காலையில் மோகினி அவதார உற்சவம் நடை பெறும்.

இரவு உற்சவரான எம்பெருமான், கருடாழ்வார் மீது திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கருட வாகனத்திற்கு வெண்பட்டு குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆறு பெரிய குடைகளும், நான்கு சிறிய குடைகளும் சமர்ப்பிக்கப்படும். இந்த குடைகள் சென்னையில் இருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கருட சேவை தினத்தன்று மூலவருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த பட்டாடைகள் தயாரித்து ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்வது வழக்கத்தில் உள்ளது.

கருடாழ்வார்......

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. கிருதயுகத்தில் அஹோ பிலததை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன.

பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வர வேண்டியதாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார்.

பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும் படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியர்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார்.

மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.

கருடனை வணங்குவது எப்படி?

கருடனை வணங்கும் பொழுது இரு கைகளை கூப்பி வணங்குவதோ, ஒரு கையால் கன்னத்தில் கையை வைத்து வணங்குவதோ கூடாது. கருடன் ஆகாயத்தில் பறந்து செல்லும் பொழுது, மகா விஷ்ணுவை தாங்கி ஏதோ அவசர காரியமாக ஏதோ ஒரு பக்தனை காப்பாற்ற போகிறான் என்று கருதப்படுகிறது.

எனவே நாம் கருடனை வணங்கி அவர் கவனத்தை திசை திருப்பினால் அவர் செல்லும் வேகம் குறைந்துவிடும். அதனால் பகவான் செல்லும் காரியம் தாமதமாகும் என்பதால் நாம ëகருடனை மனதால் வணங்குவது தான் நல்லது.

சிவப்புபட்டு வேஷ்டி.......

கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மறிக்கொழுந்து, கதிர்ப்பச்சை சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது. `யுவதி ஜனப்ரியாய நம' என கருடனை துதிப்பதால் பெண்களும் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

கருட சக்திகள்..........

பத்ம புராணப்படி கருடனுக்கு கீழ்க்கண்ட அபூர்வ சக்திகள் உண்டு.

1) பிறரை வசியம் செய்வது,

2) பகைவர்களை அடக்குவது,

3) உணர்வை வற்ற வைப்பது,

4) மயங்க வைத்தல்,

5) வானத்தில் உலாவுவது,

6) காற்று, நீர், நெருப்புகளில் அச்சமின்றி புகுவது,

7) இந்திரஜாலம் காட்டுவது,

Cool படிப்பில் தேர்ச்சி, நல்ல ஞாபக சக்தி,

9) வாதத்திலும் போரிலும் வெற்றி பெறுதல்.

முதல் வணக்கம்............

ஒவ்வொரு வைணவ கோவில்களிலும் கருட பகவான் தனிச் சன்னதியில் அமர்ந்து தரிசனம் அளிக்கிறார். மகா விஷ்ணுவின் `சங்கர்சண' அம்சமாக கருடனை கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்கி அவர் அருளைப் பெற்ற பிறகு தான் மூல மூர்த்திகளை வணங்க வேண்டும்.

காஞ்சீபுரம் கருடசேவை........

கருட சேவை என்றால் காஞ்சீபுரத்தில் நடக்கும் கருட உற்சவம் தான் பூலோ கத்தில் மிகவும் மேன்மையானது. பத்து நாட்கள் பிரம்மா நேரில் வந்து இந்த உற்சவங்களை நடத்துவ தால் பிரம்மோற்சவம் என்பது காஞ்சீபுரத்திற்குத்தான் பொருந்தும்.

கருட தரிசன பலன்கள்..........

கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும். திங்கட்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும். செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.

புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும். வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட அயுளும், செல்வங்களும் வாய்க்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கருடனின் குணங்கள்...........

நாம் வெளியில் செல்லும் போது கருட பகவான் வலமிருந்து இடம் போனால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. இடமிருந்து வலம் போனால் வருத்தம் உண்டாகும். கருடன் வட்டமிடுவது நலத்தையும், நன்மைகளையும் கொடுக்கும்.

கருடன் இரையைத் கவ்வியபடி வலமிருந்து இடம் போனால் ஆதாயம், வெற்றி உண்டாகும். அத்துடன் பகைகள் அழியும். கருடனை நாம் எந்தத் திசையில் காண்கி றோமோ அந்தத் திசையில் இருந்து லாபம் ஏற்படும்.

நல்ல கணவர் கிடைப்பார்........

ஆடி சுக்கில பஞ்சமி திதியில் கருடனை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல பிள்ளை பிறக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிடைப்பார். நரசிம்ம பகவான், கருடன், கடல் முத்து மூவரும் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றியவர்கள். சுவாதி நட்சத்திரத்தில் கருடனை வணங்கினால் பல நன்மைகள் பெறலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum