தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

Go down

நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள் Empty நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

Post  amma Mon Feb 18, 2013 12:50 pm

“தாக்குண்டால் புழு கூட தரை விட்டு தீ துள்ளும். கழுகு தூக்கினும் குஞ்சுக்காக துடித்து எழும் கோழி. சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட திருப்பித்தாக்கும். சாக்கடை புழுக்களல்ல நீங்கள். சரித்திரத்தின் சக்கரங்கள்” என்று முழங்கிய இந்திய சுதந்திர போராட்டத்தின் விடிவெள்ளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது பிறந்த நாள் இன்று.

‘ஜெய் ஹிந்த்’ என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய் சிலிர்த்துவிடும். அந்த முழக்கத்தை நாட்டிற்கு அளித்த மிகப்பெரும் புரட்சியாளரான சுபாஷ் சந்திர போஸ் பற்றி நினைத்தாலோ ஒவ்வொரு இந்தியனின் உடல் முறுக்கேறி இதயம் வீரத்தாலும் நாட்டுப்பற்றாலும் இந்த உலகையே வெல்லும் உறுதி படைத்ததாகிவிடும்.

‘எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன். நமக்கு முன்னால் ஒரு நீண்ட போராட்டம் இன்னும் இருக்கிறது. இந்தியாவை வாழ வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரே ஒரு விருப்பம் மட்டும் தான் இருக்க வேண்டும். அது நாட்டிற்காக நம் உயிரையே விடுவது தான் ‘ என்று எந்த வித போலித்தனமும் அரசியல் உள்நோக்கமும் தன்னலமும் இல்லாமல் நாட்டின் விடுதலையே குறிக்கோளாகக் கொண்டு அறைகூவல் விடுத்து மக்களை தட்டி எழுப்பியவர் அவர்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு நம் தளம் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்த விரும்பிய நாம் முடிவுசெய்த போது எனக்கு மனதில் சட்டென்று தோன்றியவர் தான் பெரியவர் முத்தப்பா அவர்கள். திரு.முத்தப்பா அவர்களை கடந்த மூன்றாண்டுகளாக நான் அறிவேன்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் படையில் மூன்றாண்டுகளுக்கும் மேல் இருந்த வீரர் இவர். அவரின் வீரம் செறிந்த உரைகளை கேட்டு கேட்டு தன்னை முருகேற்றியவர். சுதந்திர போராட்ட தியாகி. நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு கௌரவிக்க இவரை விட பொருத்தமானவர்கள் கிடைப்பார்களா?

சுதந்திரத்துக்கு (1947) முன்பு பர்மாவிலிருந்து அகதியாக இங்கே வந்தவர் இவர். பின்னர் காமராஜருடன் தொடர்பு கிடைத்து அவர் மூலம் வசிக்க இடம் கிடைத்தது. பின்னர் ஏ.வி.எம். நிறுவனத்தில் மேக்கப் மேனாக பணியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கும் மேல் மேக்கப்-மேனாக பணியாற்றியிருக்கிறார். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என இவருக்கு தெரியாத & இவரைத் தெரியாத தலைவர்களே இருக்க முடியாது! எளிமையின் சிகரம். குணத்தில் இமயம். நம் நெருங்கிய நண்பர்.



இன்று காலை திரு.முத்தப்பா அவர்களை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து நாம தளம் சார்பாக நினைவுப்பரிசு வழங்கினோம். நம்முடன் நண்பர்கள் ராஜா மற்றும் மாரீஸ் கண்ணன் ஆகியோரும் வந்திருந்தனர்.

நேதாஜியின் தியாகங்களை அவரது வீரம் செறிந்த வாழ்க்கைமுறையை அவரது ஆன்மீகத் தேடலை பற்றி பேசச் சொல்லி கேட்டோம்.

திரு.முத்தப்பா நேதாஜியின் தியாகங்களை சொல்ல சொல்ல “தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ” என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape’ என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!

நேதாஜி பிரிட்டிஷ் அரசாங்கத்தை கிடுகிடுக்க வைத்தது முதல், சிங்கப்பூரில் நேதாஜிக்காக பிரிட்டிஷ் போர்க்கப்பலை மனித குண்டாகி தகர்த்த சிங்கப்பூர் இளைஞர் சோனா வரை இவர் கூறு ஒவ்வொரு தகவலும் சிலிர்ப்பூட்டுபவை.

(*முத்தப்பா ஐயா மேலே உட்கார்ந்திருக்க கீழே உட்கார்ந்து சாப்பிடுறது யார் தெரியுதா? இவர் பேரை ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்! இந்த ஒரு ஃபோட்டோவிலிருந்தே தெரிஞ்சிருக்குமே முத்தப்பா எவ்ளோ பெரிய ஆள்னு…!”)

அடுத்த பாகத்தில் விரிவாக பார்க்கலாம்….
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum