தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலில் வெற்றி பெற & பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர – பரிகாரங்கள் – (உண்மை) காதலர் தின ஸ்பெஷல் 2

Go down

காதலில் வெற்றி பெற & பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர – பரிகாரங்கள் – (உண்மை) காதலர் தின ஸ்பெஷல் 2 Empty காதலில் வெற்றி பெற & பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர – பரிகாரங்கள் – (உண்மை) காதலர் தின ஸ்பெஷல் 2

Post  ishwarya Sat Feb 16, 2013 6:16 pm



என்ன தான் உறுதியாக இருந்தாலும் உண்மையாக காதலித்தாலும் சில காதல்கள் வெற்றியடையாமல் போய்விடுகின்றன. அந்தஸ்து, ஜாதி, மொழி, கௌரவம் என்ன பலப் பல காரணங்களால் சம்பந்தப்பட்ட ஜோடிகள் சேரமுடியாமல் பிரிந்து விடுகின்றனர். அதில் சிலர் தவறான முடிவும் எடுத்து பெறுவதற்கரிய இந்த மானிட பிறவியை முடித்துக் கொள்கின்றனர். இருந்து சாதிப்பதற்கு வழிகள் இருக்க எதற்கு தவறான முடிவு?

காதலை நிறைவேற்றுவதில் நவக்கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் சுக்கிரனின் பங்கு இதில் மகத்தானது. காதலுக்குரிய கிரகம் இவரே.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பது மிக மிக அவசியம். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம் தேவை. சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தால்தான் ஒருவன் பூமியில் சொகுசான வாழ்க்கையை வாழமுடியும். நமக்கு அழகை, வசீகரத்தை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் கிரகமும் இது தான். அதிர்ஷ்டத்தை வழங்குவதும் சுக்கிரனின் பார்வையே. அதை குறிக்கும் வகையில் ‘சுக்ர தசை’ என்ற ஒரு சொல்லே வழக்கில் உண்டு.

சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைவார். அவ்வாறு அமைப்பு பெற்ற ஜாதகர்கள், சுக்கர தசை நடப்பில் உள்ளவர்கள், J,P,V போன்ற எழுத்துக்கள் நடப்பு எழுத்தாக உள்ளவர்கள் சுக்கிரனை வழிபாட்டு தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

பிரம்மாவின் மானசீக புத்திரராக கருதப்படும் பிருகு முனிவருக்கு பிறந்தவர் தான் சுக்கிர பகவான். இவர் காசிக்கு சென்று அங்கு ஒரு சிவலிங்கத்தை படைத்து, நீண்டகாலம் தியானம் செய்ததன் விளைவாக சிவ பெருமானின் அருளால் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை கற்று இறந்தவரை உயிர்பிக்க செய்தார். மேலும் அசுரர்களால் குருவாக போற்றப்பட்டார். சுக்கிரரின் பக்தியால் நெகிழ்ந்த சிவபெருமான் இவரை நவக்கிரகங்களில் ஒருவராக நியமித்தார்.

காதலுக்கு ஏன் கண் இல்லை என்று சொல்கிறார்கள் தெரியுமா?

அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.

வாமன அவதாரத்தில் மஹாபலி சக்கரவர்த்தி தன் யாகத்தை நிறைவு செய்ய தானம் கொடுக்கும் போது, மகா விஷ்ணு வாமனராக உருவம் கொண்டு தானம் பெற வேண்டி வந்திருந்த சமயம், தமது ஞான திருஷ்டியால் வந்திருக்கும் சிறுவன் வேறு யாருமல்ல சாட்ச்சாத் மகாவிஷ்ணுவே என்பதை உணர்ந்துகொண்ட சுக்கிராச்சாரியர் “வேண்டாம் தானம் செய்யக் கூடாது” என மஹாபலியை தடுத்தார். இருந்தும் தானம் கொடுக்க முன்வருகிறார் மஹாபலி.

எனவே அத்தானத்தை தடுக்கும் பொருட்டு – நீரை தாரை வார்த்துக் கொடுக்கும் சமயம் – அந்த கமண்டலத்தின் துவாரத்தை வண்டு உருவில் சுக்கிராச்சாரியார் சென்று அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது வாமனராக உள்ள பகாவன் விஷ்ணு இது சுக்கிராச்சாரியாரின் லீலை என்பதை புரிந்துகொண்டு கமண்டலத்தின் துவாரத்தில் உள்ள அடைப்பை நீக்கும் பொருட்டு தர்பை புல்லினால் குத்தும்போது சுக்கிராச்சாரியார் கண்களில் தரப்பை புல் குத்த சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழக்கிறார்.

கண்ணை இழந்து வாடும் சுக்கிராச்சாரியார் பூலோகத்துக்கு சென்று மாங்காடு எனும் இடத்தில் சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறார். அவரின் கடுந்தவத்திற்க இறங்கி இறைவன் மீண்டும் கண் பார்வையை வழங்குகிறார். சுக்கிராச்சாரியாரின் வேண்டுகோலுக்கிணங்கி இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு வெள்ளீசுவரர் என பெயர் பெற்று அருள்பாலிக்கிறார். எனவே இத்தலம் சுக்கிரனுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது.

காதலுக்குரிய கிரகமான சுக்கிரன் இவ்வாறு கண்களை இழந்ததால் தான காதலுக்கு கண் இல்லை என்று வழக்கு தோன்றியது.

இத்திருத்தலம் மாங்காட்டில் உள்ளது. குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் மாங்காடு அமைந்துள்ளது.

இறைவனின் திருப்பெயர் : வெள்ளீஸ்வரர்

ஆலய தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 1 மணிவரை | மாலை 4.30 முதல் 9 மணிவரை

சுக்கிர துதி

சுக்கிர மூர்த்தி சுபமிகத் ஈவாய் வக்கிர மின்றி வரமிகத்
தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக்
கொடுப்பாய் அடியார்க் கருளே

காதல் ஈடேறி விரும்பியவரை மணமுடிக்க விரும்புகிறவர்கள் வெள்ளிதோறும் சுக்கிர காயத்ரி கூறி சுக்கிரனுக்கு வெண் தாமரை மலர்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

சுக்கிர காயத்ரி

ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்

பட்டாடை, மொச்சை பயிர், தயிர், பாலாடை கட்டி, வாசனைப் பொருட்கள், சர்க்கரை,, சூடம், ஆடை, அரிசி போன்றவற்றை வெள்ளியன்று மாலை வேளையில் ஏழைப் பெண்ணுக்கு தானம் செய்தல் வேண்டும். பசுவுக்கு அகத்திக் கீரை கொடுப்பது சாலச் சிறந்தது.

காதல் கைகூட – விரும்பியவருடன் மண வாழ்க்கை அமைய – மேலும் சில எளிய பரிகாரங்கள் :

வெள்ளிக்கிழமை தோறும் மகாலக்ஷ்மி வழிபாடு செய்தால் காதலில் மகத்தான வெற்றி கிடைக்கும். மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் ஆகியவற்றை சொல்லவேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்வது காதலர்களை சேர்த்து வைக்கும்.

காதல் கைகூட சுந்தர காண்ட பாராயணம்

ராமாயணத்தில் மிகுந்த விசேஷம் அனுமனின் பராக்கிரமங்களை கூறும் சுந்தர காண்டம் தான். சுந்தர காண்டத்தை படித்துவந்தாலே வீட்டில் சுபகாரியங்கள் சீக்கிரம் நடந்து தரித்திரங்கள் விலகி ஓடும்.

காதல் கைகூடி விரும்பியவரை கரம் பிடிக்க எண்ணுபவர்கள் சுந்தரகாண்டத்தில் உள்ள 36 வது ஸர்க்கத்தை காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தியுடன் படித்து வந்தாலும் காதலில் வெற்றி கிடைக்கும். அனுமன் சீதைக்கு கணையாழி கொடுத்த சம்பவத்தை விவரிக்கும் ஸர்க்கம் இது. (சுந்தர காண்ட பாராயணத்துக்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. கூடுமானவரை அவற்றை பின்பற்றி பாராயணம் செய்தால் முழு பலன்கள் கிடைக்கும்.)

மேலும் சில சுக்கிர பரிகாரத் தலங்கள் :

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

* சூரியனார் கோயில் அருகில் உள்ள கஞ்சனூர். சூரியனார் கோயிலில் சுக்கிரனுக்கு தனி சந்நிதி உள்ளது.

* பண்ருட்டி அருகில் உள்ள திருநாவலூர்

* திருத்தணி முருகன் கோயில் ஆகியவை சுக்கிரனுக்கு உரியவை.

* சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் என்ற கோயில் சுக்கிரனுக்கு உரிய ஸ்தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

ஜாதகத்தில் சுக்கிரன் பாதகமாக அமைந்தவர்கள், சுக்கிரப் பரிகாரத் தலங்களை வெள்ளிக்கிழமை தரிசிப்பது நல்லது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்களும் சுக்கிர வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடுவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தடைகளை தகர்த்து விரும்பியவரை கரம் பிடிக்க…. (உண்மை) காதலர் தின ஸ்பெஷல் 1
» யார் காதலில் வெற்றி பெறுவார்?
» ‘போதை விவகாரத்தில் நடிகைகள் மாட்டியிருப்பது உண்மை உண்மை உண்மை!!’
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
» காதல் மணத் தம்பதிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum