தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்

Go down

ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்  Empty ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:36 pm

ஆலங்குடி, குருபகவானாம் தட்சிணாமூர்த்தி உறையும் தலம். மூர்த்தி-தலம்-தீர்த்தம் இவற்றால் மிகவும் உயர்ந்த புண்ணிய க்ஷேத்திரம் ஆகும். கலியுகத்தில் நாம் காலத்தை நலமாக கடத்துவது என்பது அத்துணை எளிதன்று என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் மூதாதையர்கள், சான்றோர்கள் ஞான வழி நின்று உணர்ந்து, வானில் உறையும் தேவர்களை, பூமியில் வீற்றிருந்து அருள்பரிபாலிக்குமாறு பிரார்த்தித்து, அவ்வாறே சித்தி பெற்ற பல்வேறு புண்ணிய க்ஷேத்திரங்களுள் உயர்ந்தது ஆலங்குடி குருபகவான் கோயில். பஞ்ச ஆரண்ய க்ஷேத்திரங்களுள் பிரம்மனால் போற்றப்படும் புண்ணியத் தலம் இது.

‘‘அயனும் அன்புற்று இரும்பூளை
இடங்கொண்டானை யேத்தும்’’
- என்கின்றார் அகத்தியர். ஆபத்துச் சகாய ஈசன் இங்கு கோயில் கொண்டிருக்கின்றார்.

இன்றும் சாயரட்சை பூஜையில், குறிப்பாக குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை அன்று இங்கு இறைவனை பூஜிக்கையில், பற்பல சித்தர்களும் முனிவர்களும் வந்திருந்து ஆசி கூறுவார்கள். எனவே எப்போதும் சாயரட்சை பூஜையில், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியாம் குருபகவானை வழிபடுதல் பெருத்த நன்மை பயக்கும். வித்தை தொழில் அபிவிருத்தி கூடும். அனுதினமும் சாயரட்சை பூஜையில் அகத்தியரும் விஸ்வாமித்திரரும் இன்றும் ஆபத்சகாய ஈசனை தொழுகின்றனர்.

அமுதோகர் என்ற சிவனடியார் எழுப்பிய இந்த கோயிலை மயனே கட்டித் தந்தார் என்கிறது நாடி.
‘‘ஆரூரமுதோகருக்கு மயனு
மண்டியிட்டு தோற்றின வலம்பலமிது
கோசிகனுங் குடமுனியுந் தொழ
யிரும்பூளை ஈசனுக்கு அடிமை
யன்றி போக்கிடமேது’’
- என்கிறார் அகத்தியர்.
இன்றும் அகத்தியர் அரூபமாகி ஆங்கு வீற்றிருப்பதினாலே, அகத்தியரை பூஜித்த பின்னர்தான் முருகப் பெருமானைத் தொழ வேணும் என்கிறது நாடி சாத்திரம்.

ஒருமுறை அமிர்தம் என்ற சாவா மருந்தை அடைய தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது தோன்றிய ஆலகாலம் என்ற கொடிய நஞ்சு, வழிந்து கொட்டியது இந்த இடத்தில்தான். ஆபத்து களையும் ஈசன், விநாயகப் பெருமான் வேண்டுதலை ஏற்று ஆலகால நஞ்சை எடுத்து உண்டார். ஆலகால நஞ்சைக் குடித்த இடமே ஆலங்குடி என வழங்கலாயிற்று.
நஞ்சு பூமியை நோக்கி வருகையில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் அஞ்சி கலக்கமுற்றன. அகத்தியனும் விஸ்வாமித்திர முனிவனும் விநாயகரை தொழ, விநாயகர் ஈசனை கொண்டு ஆலகால நஞ்சை உண்ணச் செய்து எல்லா உயிரினங்களின் கலக்கத்தையும் போக்கி அருளினார். எனவே இங்கு கோபுர வாயிலில் உள்ள விநாயகரை இன்றளவும் ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என தேவரும் கொண்டாடி வருகின்றனர் என நாடி கூறுகிறது.

‘‘கணநாதன் கலக்கஞ்சுட்டு
ஓம்பினான் உயிரினமெல்லாமிந்நாதனை
கலங்காது காத்தானென தொழ நிற்பரே’’
- என்றார் அகத்தியர்.

இன்றும் இந்த ஆலங்குடி ஊரில் விஷம் தீண்டி யாரும் உயிர் நீத்ததில்லை. அம்பாள் ஏலவார் குழலி, தெற்கு திருமுகம் கொண்டு சேவை சாதிக்கிறாள். எம பயம் இவரை தொழுபவருக்கு அண்டாது. மேலும் பெரும் விபத்து, நோய் போன்றவை பற்றாது. திருமணத் தடை நீங்கும்.

தாமரைத் தண்டு நூலில் நெய் கொண்டு தீபம் ஏற்றி, கடலை மாலை சாத்தி, வில்வார்ச்சனை செய்தால் குருவால் ஏற்படும் தோஷம் பூர்ணமாக விலகும். இங்குள்ள முருகன் சந்நதி மிகவும் சக்தி வாய்ந்தது. குடமுனியாம் அகத்திய முனிவரை நெஞ்சாரத் தொழுது ஒரு முகமாய் முருகனை வழிபடுவோருக்கு பேய், பிசாசு போன்றவைகளால் ஏற்படும் உபாதை நீங்கும். கொடிய நோய்கள் விலகி உடல் சுகம் காணும்.

‘‘நாகனை நின்றேத்துவார்
தம் பீடை கலைய கண்டோமே-
பெருஞ் செல்வமொடு மேனி
மெருகு கூடவுஞ் செயுமே’’
- என்ற அகத்தியர் தம் செய்யுளில் இருந்து நாகர் சந்நதியின் மகிமையை உணர
முடிகின்றது.

ஞானசம்பந்தருக்கு வியாழ பகவான் காட்சி அருளிய தலம், கடன் உபாதைகளை முற்றிலும் கலைய நிற்கும் மூர்த்தி இந்த ஆலங்குடி நாதன். சரும ரோகம், ஈரல், கண், எலும்பு போன்றவற்றில் வரும் பீடைகளை முற்றிலும் களையும் மூர்த்தி இங்குறையும் தட்சிணாமூர்த்தி. இவரே குருபகவான். எளிதில் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் புண்ணிய மூர்த்தி.

‘‘ஈடொன்றுமில்லை சொன்னோம்
வெந்த மேனியும் மெருகேறும்
நைந்த அகமும் ஆனந்தக்
கூத்தாடும். நெஞ்சாரத்
தொழுது ஆலங்குடி அணைபவர்
தம் இல் பொன்னாகும்
பொய்யன்றே’’
- என்கிறார், முனிவர்.
குருபகவானே, திருமணம், தொழில், கல்வி, ஆரோக்யம், நட்பு, கௌரவம், கீர்த்தி, செல்வம் இவற்றிற்கெல்லாம் ஆணிவேர் போன்றவர். ஜாதகத்தில் 3, 6, 8, 10, 12ம் இடங்களில் இவர் சற்று தோஷப்படுவார். கேது, ராகு போன்ற சாயா கிரஹ சேர்க்கையால் சோதனை பல தருவார். மூர்க்க கிரகங்களின் பார்வையாலும் வியாழன் துர்பலனைத் தருவார். வியாழன் அன்று நீச ஸ்திரீ போகம், துர் ஸ்வப்பனம், கருமாதி உண்டி, தீட்டு சாப்பாடு, கோடி வஸ்திரம் உடுத்தல் போன்றன தோஷம் ஆகும்.

அறியாது செய்யும் அபசாரத்தால் ஏற்படும் தோஷத்தில் இருந்து விடுபட, வியாழன் தசை பெருத்த நன்மை தர, சந்திரனுக்கு மறைவான வீட்டில் குரு இருந்தால் ஏற்படும் விக்கினங்கள் விலக, நாம் ஒதுங்கி நின்று தொழுது விமோசனம் பெற, இக்கலியில் உள்ள ஒரு புண்ணிய க்ஷேத்திரமே இந்த ஆலங்குடி கோயில்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum