தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரிய வெளிக்காடு வெக்காளி அம்மன் கோயில் உருவான வரலாறு

Go down

 பெரிய வெளிக்காடு வெக்காளி அம்மன் கோயில் உருவான வரலாறு Empty பெரிய வெளிக்காடு வெக்காளி அம்மன் கோயில் உருவான வரலாறு

Post  ishwarya Sat Feb 16, 2013 5:23 pm

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முன்னோர் மொழி. அதனால்தான் ஒவ்வொரு ஊரிலும் கோவில் கட்டி இறைவனை வழிபடத் தொடங்கினர். அதேபோல் பிரசித்தி பெற்ற தலங்களில் எளிதில் சென்று தரிசிக்க முடியாத தெய்வங்களுக்கு தங்கள் பகுதியிலேயே கோவில் கட்டி வழிபாடு செய்வதும் மரபாக இருந்து வருகின்றது. தென்காசியில் காசி விஸ்வநாதருக்கு மன்னன் வரகுணபாண்டியன் எழுப்பிய திருக்கோவிலைப்போல், சரித்திர காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, எங்கோ இருக்கும் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே கோவில் கட்டி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. அப்படி ஒரு திருக்கோவில்தான் பெரிய வெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில்...

கோவில் உருவான வரலாறு...

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் சுந்தரவரதன் இவருடைய பெற்றோர் மேகநாதன்- கோகிலா, தம்பதியர் மேடவாக்கம் கிராமத்தில் கௌரவமாகவும், செல்வச் செழிப்புடனும் வாழ்ந்திருந்தனர். தீவிர மான விஷ்ணு பக்தரான மேகநாதன் அவர்கள் தம் பிள்ளைகளுக்கு அழகழகான வைணவப் பெயர்களையே சூட்டி, அன்புடன் ஒழுக்கத்தை யும் சேர்த்து கற்பித்து வளர்த்தார். அவருடைய ஒரு பிள்ளைதான் சுந்தரவரதன். அவர் உறையூர் வெக்காளி அம்மனிடம் அளப்பரிய பக்தி கொண்டிருப்பவர். இப்போதுதான் என்று இல்லாமல் நினைத்த போதெல்லாம் வெக்காளி அம்மனைத் தரிசிக்கக் கிளம்பி விடுவார். அவர் மட்டுமின்றி, அவருடைய குடும்பத்தினரும் வெக்காளி அம்மனிடம் அன்பும், பக்தியும் கொண்டிருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சுந்தரவரதன் அவர்கள் ஓர் ஊரில் நிலம் வாங்கச் சென்றார். அவரிடம் அந்த ஊர் மக்கள், தங்கள் ஊருக்கு ஒரு கோவில் கட்டித்தருமாறு வேண்டினர். சுந்தரவரதனும் அதற்கு சம்மதம் தெரிவித்து கோவில் திருப்பணிகளில் முனைப்புடன் இறங்கினார். ஆனால் வேறு சில நிர்ப்பந்தங்களின் காரணமாக அவரால் கோவில் திருப்பணியை தொடர முடியவில்லை. ‘சரி, நமக்கு கோவில் கட்டக்கூடிய ப்ராப்தம் இல்லை போலும்’ என்று அப்போதைக்கு அதை மறந்துவிட்டார். ஆனால் அதைவிடவும் பெரிய திருப்பணி அவருக்காக காத்திருப்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. 2007-ம் ஆண்டு ஒரு நாள் அதிகாலையில் அவருக்கு ஓர் உள்ளு ணர்வு தோன்றியது.

தன்னுடைய நிலத்தில் தன் இஷ்ட தெய்வமாம் வெக்காளி அம்மனுக்கு ஓர் ஆலயம் கட்டவேண்டும் என்பதே அந்த உள்ளுணர்வு. சற்றும் தாமதிக்காமல் தன் மனைவியுடன் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டு பெரிய வெளிக்காடு என்ற கிராமத்தில் இருந்த தன்னுடைய நிலத்திற்கு வந்தார். இப்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் ஒன்பது செங்கற்களை வைத்து பூமிபூஜை செய்தார். பிரம்ம முகூர்த்தத்தில் பூமி பூஜை செய்து தொடங்கப்பட்ட கோவில் திருப்பணி மிகக்குறுகிய காலத்திலேயே நிறைவு பெற்று, 14-07-2008 அன்று வெகு விமரிசையான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுராந்தகத்தில் இருந்து முதுகரை வழியாக கடலூர் கிராமம் செல்லும் சாலையில் வரும் விழுதமங்களம் கூட்டுச்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெரிய வெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோவில். பெரிய வெளிக்காடு என்ற பெயருக்கு ஏற்ப, பெரிய வெட்ட வெளியில் கம்பீரமாக அமைந்திருக்கிறது வெக்காளி அம்மன் திருக்கோவில். மேற்குப்புறம் அமைந்துள்ள சாலையில் இருந்து ஆலயத்திற்குள் செல்கிறோம். ஆலயத்தின் மையத்தில் முகப்பு மண்டபம் வண்ணமயமாக அமைந்திருக்கின்றது. சந்நிதியின் இருபுறமும் ஒரே கருங்கல்லினால் ஆன பதின்மூன்றடி உயரம் கொண்ட துவார சக்தியர் காவல் இருக்க, கருவறையில் அருள்மிகு வெக்காளிஅம்மன், பத்ம பீடத்தில் வலக்காலை மடித்து, இடக்காலை மஹிஷன் மீது வைத்து, சுகாசனக் கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.

மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம், கீழ் இருகரங்களில் சூலம், கபாலம் ஏந்தியவளாக சாந்தம் தவழும் திருமுகத்துடன் திருக்காட்சி தருகின் றாள். உறையூர் போலவே இங்கும் அம்மன் சந்நிதிக்கு விமானம் இல்லை. விண்ணும், மண்ணும் வியாபித்திருக்கும் இறைவிக்கு விமானம் எதற்கு? விதானம்தான் எதற்கு? ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ விஜய கணபதி, ஸ்ரீவள்ளி தேவயானி சமேத ஸ்ரீமுருகன், ஸ்ரீ அண்ணாமலையார், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீ காயத்ரி தேவி மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்திருக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum