தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபத்துகள் அகற்றும் அக்னீஸ்வரர்

Go down

ஆபத்துகள் அகற்றும் அக்னீஸ்வரர்  Empty ஆபத்துகள் அகற்றும் அக்னீஸ்வரர்

Post  ishwarya Sat Feb 16, 2013 4:53 pm

தமிழகத்தில் உள்ள ஜீவ நதியாம் காவிரி நதியின் இரு கரைகளிலும் உள்ள ஆலயங்கள் பற்பல. அவற்றில் போற்றத்தக்கதும் மிகுந்த சிறப்பு வாய்ந்த துமானது ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம். காவிரி நதியின் வடகரையில் எழில்மிகு தோற்றத்துடன் அழகுற அமைந்துள்ள இறைவனை சித்தர்களும் முனி வர்களும் விருச்சாரண்யேஸ்வரர், அக்னீஸ்வரர், பாண்டதவேஸ்வரர், ரதீஸ்வரர் என்றெல்லாம் போற்றுவர். இந்த எல்லா பெயர்களையும் உள்ளடக்கி சிவனடியார்கள், ஆபத்சகாயேஸ்வரர் என்ற சொல்லால் பக்திப் பெருக்கில், துள்ளிக் குதிப்பர்.

‘‘பேராயிரமுடையான் தம்மை தேவருஞ்
சித்தருமக்னீசனென்றும் பாண்டதவே
சனென்றும் ரதீயீசுவரனென்றேயும்
விருசாரண்யனெவும் போற்ற ஆபத்சகா
யன் இவன்தனக்கு யீடுஉண்டோ
வோர் யிறை யிதையோது’’
-என்கிறார் கொங்கண முனிவர்.

அகத்தியனோ, ‘‘அன்னை பெரிய நாயகியாம் ப்ருஹந் நாயகி உலகுறை பெண்ணிறையெலாம் வொன்றாக்கி கலந்து நிற்ப’’ என்று போற்றுகின்றார். உலகில் உள்ள அனைத்து கோயில்களில் உறையும் சக்திகள் அனைத்தும் கூட்டி நிறுத்தி ஒரு இறைவியை காட்டு என்றால், அது ப்ருஹந் நாயகி யாம், பெரிய நாயகியே என்கிறார்.

‘‘ஊரும் பொன்னாகும் பின்னே
புவி தழைக்கும் பொய்கை குன்றா
தனங் குவியுந் தீர்த்தமாம்
அக்னியும் வருணமுங் கூடிய யிவ்
வம்பலமே’’

-என்கிறார், போகர். இந்த அன்னியூர், காலப்போக்கில் பொன்னூர் என்றாகும். பொன் விளையும் பூமி இது. இந்த கோயிலில், அக்னி தீர்த்தமும் வருண தீர்த்தமும் இருப்பது மிகச் சிறப்பானது. ஆதிமூல லிங்கம் இங்கு உண்டு. அக்னி பகவானுக்கு காட்சி தந்த மூர்த்தி இவர். ஒருமுறை குளம் ஒன்றில் இறங்கி கஜேந்திரன் என்ற தேவயானை ஒன்று, நீர் அருந்தி நின்றது. அப்போது ஒரு முதலை அதன் காலை கவ்வி இழுக்க, தன்னைக் காக்க, ‘‘ஆதிமூலமே’’ என்ற ஓலமிட்டு அலறியது. அதன் துயர் தீர்க்க, சிவன் பிரசன்னமானார். அதுவே ஆதிமூல லிங்கம். ஆதிமூல லிங்கனானவன், மகாவிஷ்ணுவை வேகமாக சென்று யானையை காக்க சொல்ல, அவரும் கருடன் மேல் ஏறிச் சென்று தன் சக்ராயுதத்தால் முதலையை பிளந்து யானையை காத்தார்.

பின் அக்னி பகவான் தொழும் ஆதிமூல லிங்கத்தை மகாவிஷ்ணு தொழ, ‘வரத, வா’ என்றார், சிவன். அன்று முதல் மகாவிஷ்ணுவிற்கு வரதன், கரி வரதன், வரதராஜன் என்ற பெயர் வழங்கலாயிற்று. கரி என்பது யானையைக் குறிக்கும் சொல். இங்குள்ள மூலவர், ஆபத்சகாயேஸ்வரர், லிங்க வடிவில், தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி. பாண்டவர்கள் தவம் செய்த பூமி இது. பாண்டவர்கள் தங் கள் இருப்பிடத்தை அமைத்து தங்கிய தலம் இன்றும் பாண்டூர் என்று வழங்கப்படுகின்றது.

கௌரவர்களின் தரப்பில் இருக்கும் ஆபத்துகளை பகவான் கிருஷ்ணன் வாயிலாக உணர்ந்த தருமன், இந்த ஆபத்சகாயேஸ்வரரை தொழுது ஒரு மண்டலம் பூஜை புரிந்து வென்றனர். தல விருட்சம், எலுமிச்சை மரம். இந்தத் தலத்து பகவான் எலுமிச்சை ரசத்தை தொட்டுக் கொண்டு திரௌபதி மாதா தந்த தயிர் சாதத்தை உண்டார் என்கிறார், அகத்தியர்.

‘‘சக்தி கனிச் சாறுடன் தயிர் அன்னம்
இட்ட பாஞ்சாலிக் கிறங்கி
பொன்னீந்து பொருளீந்து
சிரம் முடித்தானிப் பெரிய
நாயகியிறை’’.

எலுமிச்சை மரம், திரௌபதி மாதா நட்டது. தயிர் அன்னம் படைத்த பாஞ்சாலிக்கு நாடு, நகரத்தை அளித்ததுடன், அவிழ்ந்த கூந்தலையும் கட்டினான் இந்தப் பெரிய நாயகியின் பதியாம் ஆபத்சகாயேஸ்வரன். ஒருமுறை மன்மதனை சிவன் தனது நெற்றிக் கண்ணால் சாம்பலாக்கி, அவன் மனைவி ரதியை கைம்பெண்ணாக்கி கலங்க விட்டார். அச்சமயம், ரதி யின் அழகில் மயங்கி, அவள் தனிமையை தனக்கு சாதகமாக்கிட எண்ணி சூரிய பகவான் ரதியை அண்டினான். சூரிய குமாரனான சனி, தர்மம் தவ றாதவர். குற்றமற்றவர். சஞ்சலமில்லாதவர். தான் அண்டிய பேரை பேராபத்துக்குள்ளாக்குவார். முடக்குவார்.

சூரியனின் செய்கையை கண்ணால் ஒரு நொடி பார்த்தார். உடனே சூரிய பகவான் தனது வலது கரத்தை இழந்து துடித்தான். சனிபகவானை சனீஸ்வரன் என்பர். சனீஸ்வரனால் வந்த தீங்கை ஈஸ்வரன் ஒருவனால்தான் போக்க முடியும் என வசிஷ்ட மகரிஷியின் உபதேசத்தால் உணர்ந்து, வசிஷ்டர் தம்முடன் இந்த பொன்னூராம் அன்னியூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு வந்து, வருண குளத்தில் நீராடி, அக்னி தீர்த்தத்தால் அபிஷேகித்து, எலுமிச்சை பழம் கூடிய தயிர் சாதத்தை ஆபத் சகாயேஸ்வரர்க்கு படைக்க, இழந்த கரம் மீண்டும் வந்தது. சனிபகவானின் உக்கிரம் கரைந்தது. எனவே யாரொருவர் சனிபகவானின் உக்கிரத்தால் குஷ்டம் மற்றும் கை, கால்களில் உண்டாகும் பதினெட்டுவகை ரோகம் விலக, இந்த இறைவனை தொழுது, தயிர் சாத நைவேத்யம் செய்து விநியோ கித்தால், கண்டிப்பாக விமோசனம் உண்டு. இறைவனை அண்டினால் எதுவும்
சாதிக்கலாம் என்பது கண் கண்ட உண்மை. திடமான நம்பிக்கையுடன் பூஜை புரிய பலன் நிச்சயம் என்கிறார், அழுகணி சித்தர்.

‘‘அருணனை ஆட்டிய கலியை
அவித்த அண்ணல் ஆயிரம் இடரை
களைவான். அன்பொடு தயிரன்னம்
படைத்து விசாகத்து விரதமிருந்து
துதிப்போர் சர்வ வல்லமையொடு
சாதிக்கலாந் தானே’’.

வைகாசி விசாகம் மிகவும் சிறப்பானது என உணரலாம். பொய் பேசாத ஒருவன் இந்த பூமியில் வாழ்ந்தான் என்றால் அவன்தான் அரிச்சந்திரன். இந்த மகாராஜா கதை யாவரும் அறிந்ததே. இந்த அரிச்சந்திரன் ஒருமுறை வெண்குஷ்டத்தால் அவதிப்பட்டான். விஸ்வாமித்திர மகரிஷியின் போதனையால், இந்த ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் கால் மண் டலம் தங்கி பூஜித்து நோயின் கடுமையை வென்றான் என்கின்றார், விஸ்வாமித்திரர்.

‘‘பிணி யாயிரமதனில் குட்டங்
கொடிதே: அயோத்திக் கதிபனாமரிச்
சந்திரனும் அன்னியூர் ஆபத்சகாயே
சனை அண்டி மண்டலங்கால்
ஆராதித்து குட்டரோகங் குண
மாக்கி மகிழ்ந்தானே.’’

சூரிய தோஷம் கொண்டவர்கள் தொழ வேண்டிய கோயில். துன்பமில்லா மரணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அண்ட வேண்டிய அம்பலமிது. பங்குனி
மாதம் 25 முதல் 29 தேதி வரை சூரியனின் ஒளி மூலவர் மேல் விழும். பாஸ்கரனே இக்காலத்து பூஜை புரிகின்றார். எனவே இதனை ‘பாஸ் கர க்ஷேத்திரம்’ என்று மகரிஷிகள் போற்றுகின்றனர். கும்பகோணம்-காரைக்கால் பேருந்து வழியில், எஸ். புதூரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது அன்னியூர். கும்பகோணத்திலிருந்து பேருந்தில் வடமட் டம் சென்று, அங்கிருந்து ஆட்டோ மூலமும் இத்தலத்தை அடையலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum