கணபதியே வருவாய்.. அருள்வாய்!
Page 1 of 1
கணபதியே வருவாய்.. அருள்வாய்!
விரதங்கள், பண்டிகைகள், வழிபாடுகள், ஜெயந்திகள் கொண்டாடுவது இந்துக்களின் பாரம்பரியமிக்க வழக்கமாகும். நட்சத்திரத்தின்படியும், திதிகளின் படியும் தமிழ் மாத கணக்கை அனுசரித்து விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் சங்கடங்கள் போக்கும் சதுர்த்தி நாயகன் விநாயகப் பெருமான் ஜெயந்தி இந்த வருடம் புரட்டாசி 3-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பலம் பெற்றுள்ள நேரத்தில்தான் விநாயகர் சதுர்த்தி வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருகிறது. காரணம்.. ஆவணி மாதத்தில் இந்த முறை இரண்டு அமாவாசை வருவதால், 2-வது அமாவாசையில் இருந்து 4-ம் நாளான சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி வந்திருக்கிறது.
விநாயக பெருமானுக்கு ஆகம சாஸ்திரப்படி மிகப் பெரிய ராஜ கோபுரங்களுடன் தனி கோயில்கள் இருக்கின்றன. ஆனாலும், எல்லா கோயில்களிலும் தனி சன்னதியுடன் வீற்றிருப்பவர். மூத்தவன், முதல்வன், முழுமுதற் கடவுள் என்று பல பெருமைகள் இருந்தாலும் எளிமையே உருவானவர். சலவைக் கல் பதித்து இழைக்கப்பட்ட கோயில்களில் வைர, வைடூரிய, நவரத்தின ஆபரணங்களுடன் காட்சி தருவார். அதே நேரம், தெருமுனையில் இருக்கும் சின்னஞ்சிறு கூடாரத்திலும் காட்சி தருவார். ஆலயங்களில் கற்சிலையாக, ஐம்பொன் திருமேனியாக காட்சியளிப்பார். அதே நேரம், மஞ்சள், களிமண்ணில் பிடித்து வைத்தாலும் அதில்கூட எழுந்தருளி விக்னங்களை அகற்றுவார்.
முற்சந்தி, நாற்சந்தி, தெருமுனை, தெருக்குத்து என்று எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். அரசமரம், ஆலமரம், வேப்பமரம், ஆற்றோரம் என்று நினைக்கும், பார்க்கும் இடத்தில் எல்லாம் எளிமையாக அமர்ந்து அருள் தருபவர். 108 திவ்ய தேசங்கள் உள்பட எல்லா பெருமாள் கோயில்களிலும் ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்ற திருநாமத்தில் இவரை வழிபடுவார்கள். வாஸ்து குறைபாடு உள்ள இல்லங்களிலும், சந்து குத்து வீடுகளிலும் சுவரில் மாடப் பிள்ளையாராக இருந்து தோஷத்தை போக்குவார். வீட்டில் நடக்கும் சிறிய நிகழ்ச்சிகள், பெரிய விழாக்கள், பண்டிகைகள், சுபகாரியங்கள் எதுவானாலும் முதல் பூஜை விக்னேஸ்வரனான விநாயகருக்குதான். ‘எந்த விக்னங்களும் (தடை, தடங்கல்) வராமல் காப்பாற்று பிள்ளையாரே’ என்று வேண்டிக்கொண்டு கணபதி பூஜை செய்தே ஆரம்பிப்பார்கள்.
கோயில் உற்சவங்கள், திருவிழாக்கள், பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் இப்படி எது நடந்தாலும் முதல் பூஜை, முதல் ஹோமம் கணேசருக்குத்தான். எந்த ஒரு செயலைத் தொடங்கும்போதும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது இந்துக்களின் வழக்கமாகும். இத்தகைய சர்வ வல்லமை பொருந்திய விநாயகருக்கு சதுர்த்தி உற்சவம் என்றால் கேட்க வேண்டுமா.. வீடும், நாடும் களைகட்டி விடுகிறது.விநாயகர் சதுர்த்தியன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து, வீட்டையும் பூஜை அறையையும் சுத்தமாக கழுவி, வாசலில் மாவிலைத் தோரணம், வாழைமரம் கட்டி, பசு மாட்டு கோமியத்துடன் மஞ்சள் கலந்து வீடெல்லாம் தெளித்து, ஒரு பலகையில் கோலம் போட்டு, அவரவர் வசதிக்கேற்ப களிமண் பிள்ளையார், கற்சிலை, சிறிய பெரிய விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து, புஷ்பங்கள் சாற்றி முக்கியமாக அருகம்புல் மாலையும், எருக்கம்பூ மாலையும் அணிவித்து, அவருக்கு பிடித்த கொழுக்கட்டை, பொங்கல், பொரி, அவல், பழவகைகள், கரும்பு, நாவல்பழம், விளாம்பழம் போன்றவற்றை படைப்பார்கள்.
வீட்டில் மகிழ்ச்சி பொங்கவும், தடைகள், சங்கடங்கள் நீங்கி சர்வ மங்களம் உண்டாகவும், விநாயகரை மனதார வேண்டி பூஜைகள் செய்வது காலம் காலமாக உள்ள வழக்கம். விநாயகர் காயத்ரி மந்திரம், அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டோத்திரம் சொல்லி பூஜைகள் முடிக்கலாம். மாலையில் பிள்ளையார் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்யலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். சந்திரன் மூலம் ஏற்படும் தோஷங்களை நீக்கக் கூடியவர். லக்னம், ஏழாம் இடம், எட்டாம் இடம் ஆகியவற்றில் கேது இருப்பதால் திருமண தடை உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று பிரார்த்தனை செய்துகொள்ள நல்வழி பிறக்கும். சந்திர திசை நடப்பவர்கள், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபட சகல யோக பாக்யங்கள் விருத்தியாகும். விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு வழிபாடுகள் செய்து முழுமுதற் கடவுளான விநாயகர் அருள் பெறுவோமாக!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேளாண் வருவாய் பெருக சில சிந்தனைகள்
» வேளாண் வருவாய் பெருக சில சிந்தனைகள்
» கருணைக் கணபதியே வருக!
» சபரிமலை வருவாய் 39 நாட்களில் ரூ.95 கோடி
» ஆட்டிப் படைக்கும் ஐந்தாவது வருவாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum