தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நன்மைகள் எல்லாம் அருள்வார் நரசிம்ம சாஸ்தா

Go down

நன்மைகள் எல்லாம் அருள்வார் நரசிம்ம சாஸ்தா  Empty நன்மைகள் எல்லாம் அருள்வார் நரசிம்ம சாஸ்தா

Post  ishwarya Sat Feb 16, 2013 4:38 pm

தூத்துக்குடி, திருச்செந்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில், திருநெல்வேலி செல்லும் சாலையில் அங்கமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு, நரசிம்மர் தனது தங்கையான அன்னபூரணியுடன், மானிட வடிவில் அருள்பாலிக்கிறார். இப்படி ஒரு அபூர்வமான ஆலயம் வேறெங்கும் காணக்கிடைக்காது. 800 ஆண்டுகள் பழமையானது இத்தலம். மகாவிஷ்ணு பிரகலாதனின் துயர் துடைப்பதற்காக தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டு, இரண்யனை வதம் செய்தார். அப்போது இரண்யனின் குருதி நரசிம்மர் மீது பட்டதால் அவருக்குக் கோபம் இன்னும் அதிகமானது. மகா உக்கிரத்துடன் இருந்த அவரைக் க ண்டு தேவர்களும் முனிவர்களும் அஞ்சினர். அவரை சாந்தப்படுத்த பாமாலைகள் பாடினர்.

நரசிம்மரின் கோபம் குறையவில்லை. எனவே அவரைத் தம் பக்தியினால் வரவழைத்த பக்தப் பிரகலாதனிடமே சரணடைந்து அவரின் கோபத்தை தணிக்குமாறு வேண்டினர். பிரகலாதனும் நரசிம்மரைப் பலவாறு துதித்தான். பிரகலாதனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டார், அந்தக் கருணா மூர்த்தி! அப்போதும் அவர் கோபம் தணியவில்லை. இதுகண்டு அஞ்சிய எல்லோரும், சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள். அவரும் தன் தேவியான அன்னபூரணியை அனுப்பி வைத்தார். அன்னபூரணியும் ஹரியிடம் வேண்டுகோள் வைக்க, தங்கையின் சொல்லைத் தட்டாமல் சாந்தமானார் நரசிம்மர். பின் அன்னபூரணியின் விருப்பத்திற்கேற்ப அங்கமங்கலத்தில் உள்ள சரப தீர்த்தத்தில் நீராடி முழுவதுமாக சாந்தியடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினார்.

பின்னர் இங்குள்ள சிவபெருமானை நரசிம்மர் போற்றித் துதித்தார். நரசிம்மர் வழிபட்டதால் இங்குள்ள சிவனுக்கு நரசிங்கநாத ஈஸ்வரன் என்று பெயர். இந்த ஈஸ்வரன் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அம்பாள் ஆவுடைநாயகி கிழக்கு திசை நோக்கி, இறைவனுக்கு எதிரில் அருளாட்சி செய்கிறாள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். மிகவும் சிதிலமடைந்த, மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தைப் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தும் காலத்தை பக்தர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இங்குள்ள அன்னபூரணி ஆலயத்தில் சாஸ்தா குடியிருந்தாலும் மூலவராக நரசிம்மர் வீற்றிருப்பதால், இக்கோயில், நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

ஆலயத்தின் தலவிருட்சம் இலுப்பை மரம். தீர்த்தம், சரப தீர்த்தம். ஆலய முகப்பில் பிரமாண்ட தோற்றத்தில் ஆதிபூதத்தார் விளங்குகிறார். பிராகாரத் தில் ஆனந்த கணபதி, பாலசுப்ரமண்யர், மங்கள ஆஞ்சநேயர், பேச்சியம்மன், பிரம்மசக்தி, அகத்திய மாமுனிவர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். காவல் தெய்வமாக வீரமணி திகழ்கிறார். தீபாவளி அன்று அன்னபூரணிக்கு லட்டு அலங்காரம், ஆவணி மூலம் மற்றும் நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மருக்கு பானக அபிஷேகம் செய்யப்படு கின்றன. அரசுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக வித்யா கணபதி, ஹயக்கிரீவர், மூகாம்பிகை, சரஸ்வதி ஹோமங்களும் வியாபார அபிவி ருத்திக்காக லட்சுமி கணபதி, சௌபாக்கியலட்சுமி, குபேர லட்சுமி, லட்சுமி நரசிம்மர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

இங்கு மங்கள ஆஞ்சநேயர் வீற்றிருப்பதால் ராம நவமியும் அனுமன் ஜயந்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. நரசிம்மரின் உக்கிரம் தணிய வெட்டிவேர் மாலை சாற்றி வழிபடுகிறார்கள். அனைத்து திருவிழாக்காலங்களிலும் அன்னதானம் செய்யப்படுகிறது. 9443979794 என்கிற இந்த அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, மேலும் விவரங்கள் பெறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum