தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏழுமலையான் கோயிலில் 3 மணி நேரத்தில் தரிசனம்

Go down

ஏழுமலையான் கோயிலில் 3 மணி நேரத்தில் தரிசனம் Empty ஏழுமலையான் கோயிலில் 3 மணி நேரத்தில் தரிசனம்

Post  ishwarya Sat Feb 16, 2013 2:05 pm

திருமலை: ‘நிலம்’ புயல் காரணமாக ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாக உள்ளது. வழக்கமாக விடுமுறை நாட்களில் திருமலையில் கூட்டம் அலைமோதும். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கும் நிலை ஏற்படும். ஆனால், விடுமுறை நாளான நேற்று திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 44,400 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6 மணி நிலவரப்படி இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 8 அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் 3 மணி நேரத்தில் அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மலைபாதை வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களும், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்களும் காத்திருக்காமல் நேரடியாகவே சென்று அரை மணி நேரத்தில் பெருமாளை தரிசித்தனர். இன்று காலையும் இதே நிலை காணப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
»  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
»  ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum