தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டெங்குவையும் விரட்டிடுவாள் புன்னை நல்லூர் ஆத்தாள்

Go down

டெங்குவையும் விரட்டிடுவாள் புன்னை நல்லூர் ஆத்தாள் Empty டெங்குவையும் விரட்டிடுவாள் புன்னை நல்லூர் ஆத்தாள்

Post  ishwarya Sat Feb 16, 2013 1:41 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - புன்னைநல்லூர்

அம்மன் கோயில்களில் அதிக சக்தி வாய்ந்ததும் சித்தர் பெருமக்கள் இன்றும் அரூபமாய் வந்து ராத்திரிப் பொழுது தங்கி, ஆராதித்து நிற்பதுமான பூலோக சக்தி பீடம், புன்னை நல்லூர் உறை மாரியம்மன் கோயில். உயிரோட்டமுள்ள பீடமும் விக்ரகமும் கொண்ட அம்மன், எப்படிப்பட்ட நோய்க ளையும் விரட்டி அடிக்கும் வரப்பிரசாதி என்கின்றனர் சித்தர்கள். சதாசிவ பிரம்மேந்திரர் சித்தரில் தனி வகை. அவர் இம்மாதாவை,

‘‘எட்டு வகை சத்தியுங் கூட்டிச்
சமைத்தோம் அன்னை
தன் உயிரோட்டங்கண்டு களித்தோம்.
மேனி வியர்க்கும் மெய்கண்டீர்
சரும ரோகமொடு கொடு ரோகத்தையுங்
கருக்கும் வேப்பிலைக் காரி யிப் புன்னை
வனமுறை அம்மையே’’

-என கொண்டாடுகின்றார். எட்டு சக்தி என்றால் அஷ்ட சக்தி என்று பொருள். கஜலட்சுமி, வீரலட்சுமி, சௌபாக்கிய லட்சுமி, சந்தான லட்சுமி, தனலட் சுமி, தானிய லட்சுமி, வித்யாலட்சுமி மற்றும் காருண்ய லட்சுமி என்பதாம். இந்த அஷ்ட சக்திகளும் ஒருவனுக்கு சித்தியாக வேணுமாயின் புன்னை ந ல்லூர் உறையும் மாரியம்மனை சரணமடைய நன்மை என்று சதாசிவ பிரமேந்திரர் பேசுகின்றார். விருப்பு, வெறுப்பு அற்ற சித்தர்கள் கொண்டாடும் மாதா இந்த புன்னை நல்லூர் மாரியம்மன்.

“அம்மையென்றும் ஆத்தா வென்றும்
துறவியர் துவளும் கன்னிமாரி
புன்னைவனப் புற்று கண்டு
நிற்பாள்
தமை ரேணுவென்றும் வெள்ளம்மை
சௌடேஸ்வரி யென்றும் பற்பல
நாளுஞ்
சொல்லி போற்ற யாவையு
மிவளே’’

-என்கிறார், குதம்பை சித்தர். ‘‘அம்மா என்றும் ஆத்தாள் என்றும் துறவியர் கொண்டாடும் கன்னி மாரியம்மை, புன்னை வனத்தில் அடர்ந்த கரையான் புற்றில் மறைந்து நின்றாள்; பல பல இனத்தோருக்கு இந்த சௌடேஸ்வரி குல தேவதையும்கூட ஆகின்றாள்’’ என்கிறார், சித்தர்.

‘‘வெங்கோஜி தம்முறக்கத்தில் தோன்றி
இருப்பிடமுறைத்து நிற்க கிட்டய
இல் இது தேவரும் போற்றியதே’’

-என்கின்றார் தியாக பிரம்மம். வெங்கோஜி மகாராஜா சத்ரபதி என்ற மராட்டிய மன்னனின் கனவில் சென்று, ‘புற்றில் மறைந்து வாழ்கின்றேன். எமை எடுத்து கோயில் கட்டு’ என்று புன்னை நல்லூர் அன்னையே சொல்ல, புன்னை மரங்கள் அடர்ந்த காட்டினுள், கரையான் புற்றில் இருந்த அம்மையை எடுத்து கோயில் கட்டினார் மன்னர். சதாசிவ பிரம்மேந்திரர் ஸ்ரீ ஆகர்ஷ்ண யந்த்ரம் செய்து அன்னையை ஸ்தாபிதம் செய்தார். சக்திபீடம் அமைக்க அவர் வானுலகிலிருந்து பாரிஜாதம் என்ற தேவ மலரையும் அமிர்த ஆற்றின் நீரையும் கொணர்ந்தார் என்கின்றார், அகத்தியர்.

‘‘சிவனாம மேந்துமடியானுங்
கூடு
அகன்று உருமாறி தேவருக்குற்ற
மலருமமிர்த மாற்று நீருமெ
டுத்து
அன்னை மாரியை யாரா
தித்து கலி
மங்கையர் தம் மங்களந் நீடு
நிலைக்க நிறுவினனிது
சத்யமே.’’

சதாசிவ பிரம்மேந்திரர் அஷ்டமாசித்தி பெற்றவர். கூடுவிட்டுச் சென்று வானுலகிலிருந்து பாரிஜாத பூ எடுத்து, தேவர்கள் நீராடும், அமிர்தம் என்ற ஆற் றின் நீரையும் கொண்டு வந்து, சுயம்புவாய் தோன்றிய புன்னை நல்லூர் மாரியம்மனை, அந்த அம்மனை கண்டெடுத்த இடத்திலேயே நிறுவினர். இந்த அம்மனைத் தொழுதால் மங்களம் பெருகும். பெண்களுக்கு வளையல், மஞ்சள், புஷ்பம், பட்டு வஸ்திரம், தாலி பாக்யம், சந்தான விருத்தி என்பன எந்தக் குறையுமின்றி சேரும். தட்டம்மை, பெரிய அம்மை, விளையாட்டு அம்மை, முத்து அம்மை போன்ற கொடுமை நிறைந்த அம்மை நோய்கள் வம்சத்தில் வராது தடுப்பாள். டெங்கு போன்ற கொடிய நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பவள் என்றால், ஆச்சரியம் கலந்த உண்மை இது என்பதில் சந்தேகம் இல்லை. கண் நோய்க்கு கண் கண்ட மருந்தாய் அருள்பாலிப்பவர் புன்னை மாரியம்மன். ஒருமுறை தஞ்சை மன்னர் துளஜா மகாராஜாவின் இரண்டாவது புத்திரிக்கு பார்வை பறிபோனது. சிறு மூளையில் சிறுகட்டி. பார்வை போனது மட்டும் அன்றி, தீராத தலைவலியும் வந்தது. வைத்தியர்கள் கைவிட, நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரை மனதில் ஆராதித்த மன்னர், புன்னை மாரியம்மன் ஆலயத்தில் பன்னிரண்டு நாட்கள் தங்கி, வழிபாடு மேற்கொண்டார். கற்றோர் வியக்க, மற்றோர் போற்ற, இளவரசி கண் பார்வை முழுமையாக பெற்றார். சிறுமூளையில் தோன்றிய கட்டி சட் டென மறைந்தது.
இது நடந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை. அன்று தொட்டு புன்னை மாரியம்மனை ஞாயிறுதோறும் மன்னர் குலம் போற்றி தொழுது ஆராதித்தது.

‘‘அருணன் நின்ற கதியில்
நின்று வேப்பிலைக் காரியை
போற்ற மந்த பார்வை
மறையுந் திண்ணமே - கபால
பீடை கருகு மய்யமென்ப
தேது.’’

என்று பேசுகின்றார், பாம்பாட்டி சித்தர்.போகர் தாம் வானுலகு சென்று நவபாஷாணத்தில் பழநி முருகனை சமைக்க எண்ணி, தன் எண்ணம் தடையின்றி நடக்க, எடுத்த காரியம் விரைந்து முடிந்திட, அன்னை புன்னை மாரியை புற்றில் கண்டு தொழுத பின்னரே ககன மார்க்கமாய் வான் உலகு சென்று அரிய பெரிய மூலிகைகளை கொணர்ந்தான் என்கின்றார், புலியை வாகனமாகக் கொண்ட புலிப்பாணி சித்தர்.

‘‘போகனுந் நவ பாசனங்
கட்ட வருந் தடையொரு
வந்த விக்கினமு மோடிட
புன்னையன்னையை
புற்றில் ஏறி
தொழுது ஓராயிரத்
தட்டம் பூஜித்து
நிற்க, அன்னை யவள்
தாமே
மகா மாதா வலை மலை
கலை மகளான
வரமகா லச்சிமி என்றாளே.’’

-புன்னை மாரியம்மனே மகாலட்சுமி. அவளே சரஸ்வதி தேவி- அவளே பரமேஸ்வரியாம் வரமகாலச்சுமி என்று புலம்புகின்றார், புலிப்பாணி. ஆடி, ஆவணி மாதங்களில நடைபெறும் பிரம்மோற்சவத்தில், இன்றும் சித்தர்கள் பலருடன் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் கலந்துகொண்டு இன்பம் அனுபவிக்கின்றார் என்றால் மெய் சிலிர்க்கிறதன்றோ! புரட்டாசி மாத தெப்பத் திருவிழாவை சிவனே, நந்தி உள்ளிட்ட கணங்களுடன் வந்து நின்று களிக்கின்றார் என்கின்றார் கொங்கணர்.

‘‘கன்னி தெப்பத்து திரிச
டையனும்
தம்பூத கணங்களை நந்தி
தேவரை
கொண்டடக்கி நின்று
களிக்க
கண்டு களித் தோமிக்
கொங்கண னுமிருந்தே.’’

இப்படி சக்தியுடைய அன்னையை ஆராதித்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum