தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விநாயகரே வணங்கிய வேலவன்

Go down

விநாயகரே வணங்கிய வேலவன் Empty விநாயகரே வணங்கிய வேலவன்

Post  ishwarya Sat Feb 16, 2013 1:34 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - விராலிமலை

‘‘எமைப் புகழ்ந்து போற்றி பாடிட விராலிமலைக்கு வருக. யாம் உறையும் இத்தலம் மிகவும் புண்ணியமானது, புனிதமானது’’ என்றான், முருகப் பெருமான், அருணகிரிநாதரிடம். ஏதோ சிந்த னையில் மூழ்கி, வயலூர் முருகன் சந்நதியில் கிடந்த அருணகிரிநாதரிடம் இவ்வாறு அசரீரி கணீர் என ஒலித்தது. இருளில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அதனைப் பின்பற்றி ஓடினார் துறவி. எந்த சலிப்பும் சோர்வும் இன்றி விராலிமலையை அடைந்தார். மயில்கள் ஆரவாரம் செய்து நடனமாட, மைக்கண் ணுடைய அன்னை அருணகிரியை வரவேற்றாள் என்கிறது நாடி.

‘‘வான் வழி வந்த ஆணை தன்னை
யேற்று புகழ்பாடி நின்றான்
மயில் மேவும் விராலியூரடைய கருங்
கண்ணாள் தன் அருள் தன்னால்
ஆவிகுதூகலிப்ப நின்றான் கிளி
வடிவேந்திய வேதியனே’’

-என்று புலம்புகின்றார், கொங்கணச் சித்தர். விராலிமலையில் மயில்கள் ஏராளமாக கூடி முருகப் பிரானை கண்டு, களித்து, நடனமிடும். ‘கருங்கண் ணாள்’ என்ற தேவமாதா, பார்வதி தேவியின் அம்சம். இன்றும் விராலிமலை அடிவாரத்தில் இருந்தபடி, பக்தர்களின் குறைகளை அறிந்து, ஷண்முகநா தரிடம் எடுத்து உறைத்து, விமோசனம் கோருகின்றார்.

‘‘பிணி பல போக்குவான் இவ்
விராலிச் சலத்தான். பன்னிரு
கரத்தால் ஆசி ஈந்து வினை
அறுப்பான். முனி தரிசனம் வேண்டு
வோருக்கு விரும்பிய வண்ணமே
காட்டித் தருபவன் இவனன்றோ.
சுருட்டை படைத்து நிற்ப, புற்றொரு
மூச்சுக் கோளறுப்பான் மெய்யே.’’

-எனப் பேசுகின்றார் பாம்பாட்டி தேவர். ‘‘பற்பல நோய்களுக்குத் தானே மருந்தாகி நிற்பவன் இந்த விராலிமலை ஷண்முகன். தனது பன்னிரண்டு கரங்களினாலும் அள்ளி வழங்குவான், இந்த வள்ளல் வள்ளி மணாளன். பலவித நிவேதனப் பொருள்களுடன், சுருட்டு என்ற புகையிலையையும் படைத்து தொழுதால், ஏவல், சூன்யத்தால் ஏற்படும் கொடிய நோய்கள் விலகும். ஆக, காலசந்தி, சாயரட்சை வேளை மகா நைவேத்யத்தில் சுருட்டு படைத்து தொழ, நன்மை உண்டு’’ என பேசுகின்றார் அழுகணிச் சித்தர்.

‘‘புகைக்கும் இன்பம் கொண்டோர்
தமக்கு வருமின்னல் நீங்க
புகைக்கட்டை படைப்பீர்
அறுமுகனுக்கே. ஏவலும் சூனிய
மும் தந்த இடும்பை தன்னை
விலக்கிடுவனிவனல்லால், மறைந்து
திரியும் மகேச கணங்களையுங்
கண்ணில் காட்டுவன் கண்டீர்.’’

-என்றார். ‘வள்ளி-தேவயானை சமேதராய், பன்னிரு கரங்களும் ஆறுமுகமும் கொண்டு மயில் வாகனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களை ரட் சிக்கும் இந்த திருமுருகனை, ஷண்முகனை, கார்த்திகைப் பெண்டிருள் ஒருவரான அருந்ததியே விரதமிருந்து, தொழுது, தனது சாபத்திலிருந்து விடுபட் டார்’ என்கிறது, அகஸ்தியர் நாடி. நாரதர் திரிலோக சஞ்சாரி என பெயர் பெற்றவர். சரஸ்வதி தேவியின் புதல்வர். காஸ்யப மகரிஷி, ஈடு இணையற்றவர். இவர்கள் அறியாது செய்த பிழைகளினால் ஏற்பட்ட சங்கடங்களை நிவர்த்தி செய்தவன் இந்த விராலிமலை முருகன்.

‘‘நாரதன் தேவரிடையே நன்மை
பல நாடிச் செய்த கலகமும்
பீடையாயவனை பற்ற, கச்சியப்ப
முனி தன துயரையுஞ் சாபத்தையும்
போக்கியவன் தமை நாடிவரும்
பக்தரின் துயரதனை துடைப்பன்
வய்யமிலை கண்டீரே.’’

-எனக் கூத்தாடுகின்றார் போகர் என்னும் சித்தர். ‘பழநிமலையில் நவபாஷாண விக்கிரகத்தை வடிக்குமுன், விராலிமலை வந்து தங்கி, ஒரு மண்டல காலம் காற்றை புசித்து, தவமிருந்து, பின் முருக பிரானிடமிருந்து ஒப்புதல் பெற்று, ஈண்டு கிடக்கும் நாகத் தீர்த்தமாம் சரவணப் பொய்கையில் நீரெ டுத்துச் சென்றே நவபாஷாணத்தைக் கட்டி, பழநி முருகனை உருவாக்கினார்’ என்கிறது, கோரக்கர் நாடி. ஆக, ‘‘இங்கு உறையும் தீர்த்தம் நாக தீர்த் தம். இது தமது முன்வினைப் பயனை அறுக்க வல்லது. கர்ம வினையினால் வரும் கொடிய நோய்களை சுட்டு எரிக்கும்’’ என்கின்றார், இடைக்காடர்.

‘‘போகனு மிந்திரிய மடக்கி குகை
யிருந்து தியானித்தே அறுமுகனவன்
தம் இசைவுடனே அரவ தீர்த்த
மெடுத்து காசிவில்வங் கலந்தே
நவபாசானங் கட்டக் கண்டேன்
சிவனே’’

-என்ற பாடல் இந்த உண்மையை மெய்படுத்துகின்றது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில், இத்தலம் பற்றி பதினாறு பாடல் பாடியமை போற்றுதற்குரியது; விராலிமலை ஷண்முக நாதரின் கருணையை பறை சாற்றுகின்றது. ஷண்முக மூர்த்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார் அருணகிரிநாதர்.
நாவன்மை பெற ஒருவன் சரணமடைய வேண்டிய தெய்வம் இவர். நோய்கள் வராமலும் இந்த நோய்கள் விலகவும் நாக தீர்த்தத்தில் நீராடி, ஷண்மு கனை தொழுவது அவசியம். மகாவிஷ்ணுவாம் ஸ்ரீநிவாசப் பெருமாளே, திருமலையிலிருந்து தமது பிராட்டியருடன் இங்கு எழுந்தருளி ஷண்முகநாதரை தொழுது தமது பக்தர்களை சோதித்து துன்புறுத்திய பாவம் போக்கி சென்றார் என்றால் வள்ளி மணாளனின் பெருமையை என்ன சொல்ல!

எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், விநாயகர் பூஜை செய்து ஆரம்பிப்பது மரபு. ஆனால் விநாயகரே, நவகிரக நாயகர்களுடன் சேர்ந்து, இந்த ஷண்முகநாதரைத் தொழுதே தனது பணிகளைத் துவக்கினார் என்பது வியப்புக்குரியதன்றோ! ஆம்! விபீஷண ஆழ்வார், திருவரங்க விமானத்தை எ டுத்து இலங்காபுரி நோக்கி செல்லுகையில், அதனை தடுக்க, ஒரு இடையனாக வேடம் பூண்டார், விநாயகர். அப்படி உரு எடுக்குமுன், மாணிக்க விநா யகனாய் ஸ்ரீநிவாசப் பெருமாள் உடன் இருக்க ஷண்முக நாதனை மனமுருகி தொழுதே தனது நாடகத்தை அரங்கேற்றினார்; திருமுருகன் அருளால், வெற்றியும் பெற்றார். அந்த மாணிக்க விநாயகர் இன்றும் விராலிமலையில் இருக்க, உச்சிப் பிள்ளையாரை காணும் முன் இன்றும் மாணிக்க விநாயகர் மலைக் கோட்டையின் அடிவாரத்தில் இருப்பது நமக்கு சாட்சியாக கிடக்கிறது.

‘‘கணபதி தொழ அருள் தந்த
விராலிவேந்தன் சுந்தரன், இடைய
னாயேகி ரங்க விமானத்தை
காவிரிக் கரை கிடக்க செய்தான்-
முன்னோனுக்கும் முயன்ற முக்கண்
ணனுக்குமே ஆசானான அச்சண்முகனை
தொழுவார் தாம்
அடைய பேறு ஏது இயம்பு’’

-என்றான் அகத்தியன் தனது நாடியில். காஸ்யபமுனியும் நாரதனும் அகத்தியனும் திருப்பதி வெங்கடாஜலபதியும் அருணகிரிநாதரும் விநாயகப் பெருமா னும் தொழுது பெற்ற பேற்றை நாமும் பெற, ஒருமுறை விராலிமலை சென்று, முருகனை தொழுது நிற்போமே. திருச்சி-மதுரை வழித்தடத்தில், திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இத்தலம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum