கடவுளுக்கு செய்யும் சேவை
Page 1 of 1
கடவுளுக்கு செய்யும் சேவை
ஒரு பெரிய மன்னர் இருந்தார் , அவருக்கு ஆன்மிகத்துல ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார் , வருவார் . வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார் .கடவுளை வேண்டினார் , அதுக்கப்பறம் திரும்பி வந்தார் , கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார் , அவர் கண்ணை , மூடிகிட்டு தியானத்துல இருந்தார் .
மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய் நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார் . இவரு அவர் கால்ல விழுந்தார் . அவர் ஆசிர்வாதம் பண்ணினார் .
அதுக்கப்றம் இந்த மன்னர் தன்கிட்டே இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை எடுத்தார் . அந்த சன்னியாசிக்கு போர்த்தினார் . அப்புறம் , விடை பெற்றார் .
மறுநாள் காலைல அந்த மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்துல நின்னுகிட்டு இருந்தார் . அப்போ தெருவுல ஒரு பிச்சைக்காரன் போய்கிட்டு இருந்தான் , அவனை பார்த்ததும் மன்னருக்கு அதிர்ச்சி ...காரணம்
நேற்று அந்த சன்யாசி கிட்டே ஒரு விலை உயர்ந்த சால்வையை போத்தினாரே அதே சால்வையை சால்வையை இப்போ அந்த பிச்சைகாரன் போர்த்திகிட்டு போறான்
மன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு அந்த பிச்சைக்காரனை கூட்டிகிட்டு வர சொன்னார் . அவன் வந்தான்
" உனக்கு எப்படிஎப்படி இந்த போர்வை வந்தது- னு விசாரிச்சார் . அவன் " கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார் - னு விபரம் சொன்னான்
உடனே போய் அந்த சன்யாசியை இங்கே கூட்டிகிட்டு வாங்க - னு உத்தரவு போட்டார்
சன்யாசி வந்து சேர்ந்தார்
என்ன நடந்ததுன்னு விசாரித்தார் மன்னர் .
மன்னா ! நீ இந்த போர்வையை எனக்கு போர்த்திட்டு போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த பிச்சைக்காரன் அந்த பக்கமாக வந்தான் . ஒரு கிழிஞ்ச துண்டை கட்டியிருந்தான் , உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது . பார்க்க பரிதாபமா இருந்தது . அதான் உடனே இதை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டேன் - அப்படீன்னார் .
" என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதை ... அது மிகவும் விலை உயர்ந்த சால்வை ... மன்னர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது . அதை உங்களுக்கு கொடுத்தேன் , அதை போய் நீங்க ஒரு பிச்சைகாரனுக்கு கொடுத்திருக்கீங்க ...! என்றார்
மன்னருக்கு கோபம் குறையவே இல்லை .சன்யாசி சிரித்தார் . மன்னருக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு , விளைவு அந்த சன்யாசி சிறையில் அடைக்கப்பட்டார் .
அன்றிரவு மன்னர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் . அந்த கனவில் - மன்னர் மறுபடியும் அந்த கோவிலுக்கு போகிறார் . ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார் . அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார் .
மன்னர் " கடவுளே ! என்ன ஆச்சு உனக்கு ?"
கடவுள் " குளிர் தாங்க முடியலே "
உடனே மன்னர் தன்னிடமிருந்த விலையுர்ந்த சால்வையை எடுத்துக்கொண்டு கடவுளை நெருங்கினார் .
கடவுள் பயத்தில் கத்தினார் " என்ன அது ? உன்னுடைய சால்வையா ? வேண்டாம் எனக்கு ".
மன்னர் " கடவுளே ! இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் ? நான் என்ன பாவம் செய்தேன் ?
கடவுள் " நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய் ! அதை கொண்டு வந்தவனுக்கு நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் ! என்ன பரிசு தெரியுமா ? சிறை தண்டனை !"
மன்னரை யாரோ தலையில் தட்டுவது போல இருந்தது . திடீர் என்று விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது . ஓடிபோய் அவரே சன்யாசியின் சிறையின் கதவுகளை திறந்து விட்டார் . சன்யாசியின் கால்களில் விழுந்தார் .
" சுவாமி நான் அறியாமல் செய்துவிட்டேன் , தாங்கள் ஒரு மகான் ! என்னை மன்னித்து கொள்ளுங்கள் !" என்றார்
" மன்னா ! கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு ! அதை புரிந்து கொள் .." என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தார் .
----------------------------------------------------
இரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது , " நல்ல முத்துன தேங்காயா கொடுங்க ! என்று கேட்டு வாங்கினான் ஒருவன் .
" அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா ?" என்று கேட்டான் நண்பன் .
" இல்ல - இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது ! " என்றான் அந்த பக்தன் !
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
» கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?
» கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?
» கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?
» இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? – பாலா
» கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?
» கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?
» கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?
» இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? – பாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum