தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்களோடு சில வார்த்தைகள் ....

Go down

உங்களோடு சில வார்த்தைகள் ....  Empty உங்களோடு சில வார்த்தைகள் ....

Post  ishwarya Fri Feb 15, 2013 11:55 am

"பக்தி யுகத்தி"ற்கு வருகை தரும் அனைவரையும் அன்போடு வணங்குகிறேன் .

இன்றைய அறிவியலின் புரட்சியால் நாளும் புதிய கண்டுபிடிப்புகளும் , காலத்தைக் கடக்கும் வேகமும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்தின் அதி வேகத்தாலும், வளர்ச்சியாலும் தகவல் பரிமாற்றம் அபரிமிதமாகி உள்ளது.

இன்டர்நெட்டில் , நாம் பெற முடியாத தகவல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். கடுகு முதல் கடவுள் வரை நாம் எதை குறித்துத் தேடினாலும் , நமக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

குறிப்பாக ஆன்மிக தகவல் தளங்களும், ப்ளாக் - களும் நாளும் பெருகி வருகின்றன. இவை எல்லாமே உண்மையில் ஆன்மிகத்தினை வளர்ப்பதற்க்காகத்தான் செயல் படுகின்றனவா என்பது கேள்வி குறியே !

சில தளங்கள் சிறப்பாகவும் , நேர்மையான தகவல்களுடனும் ஆன்மிகக் கருத்துக்களை வெளியிடுகின்றன. ஆனால் , தங்களது தளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வருகைத் தர வேண்டும் எனும் குறிக்கோளை மட்டுமேக் கொண்டு , சில தளங்கள் ஆன்மிகக் கவர்ச்சியினை மேற்கொண்டு வருகின்றன. அவை எவை என்பது நமக்கு இங்கே தேவை இல்லை.

புதிய புதிய மந்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும் வெளியிடுவதும் , இன்று இணையத்திலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படும் "சித்தர்கள்" எனும் சொல்லை மையப்படுத்தியும் , மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுவது போல பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றன.

ஆனால் அவர்கள் வெளியிடும் , அனைத்து "மந்திர-தந்திர" முறைகளுக்கு , எது ஆதாரமாக விளங்குகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். அந்நாட்களில் மந்திரங்கள் மறைபொருளாக வைக்கப் பட்டதன் நோக்கம் , அது சரியான முறையிலே , சரியான நபரிடம் சென்று அடைய வேண்டும் என்பதற்காகவே.

ஒரு குரு , தன்னிடம் உள்ள எல்லா சீடர்களுக்கும் , ஒரே மாதிரியான மந்திரத்தை அளிப்பது இல்லை. மாறாக ஒவ்வொருவரின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏற்ற , மந்திரங்களையே உபதேசிப்பார். அதையும் கூட ரகசியமாக அந்த குருவும் சீடரும் மட்டுமே அறியும்படி செய்வார்.

மந்திர பிரயோகங்களில் , ஒரு அக்ஷரம் மாறினாலும்,அல்லது ஒலி அமைப்பு மாறினாலும் , அல்லது அதனை ஜபிக்கும் முறைகளில் சிறு பிசகு ஏற்ப்பட்டாலும் கூட அதன் விளைவுகள் விபரீதமாக மாறிவிடக் கூடவாய்ப்பு உள்ளது.

இன்று பல்வேறு , தளங்கள் இதைக் கருத்தில் கொண்டு செயல் படுகின்றனவா என்பது தெரியவில்லை. சில மந்திரங்கள் எளிமையாக , அனைவரும் இயல்பாக ஜெபிக்கும்படி அமைத்துள்ளன.

உதாரணமாக " ஓம் சிவ சிவ ஓம் " என்பதனைச் சொல்லலாம். அதையுமே ஜபிக்கும் போது எந்த நியமங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்பதனை அவர்கள் தெளிவாகக் "ஆன்மிகக் கடல் " தளத்தில் கூறியுள்ளார்கள்.

நம்முடைய நோக்கம் , யாரையும் தாக்குவது இல்லை. பார்வையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதே.

இன்று ஆன்மிகம் என்பது கடைச் சரக்காகி விட்டது. புற்றீசல் ஜோதிடர்களும் , கார்பரேட் சாமியார்களும் எதோ புதியதாக தாங்கள்தான் ஆன்மிக ரகசியங்களை வெளியிடுவதாகவும் , உலக மொத்த துன்பங்களை எல்லாம் தங்களால் தீர்த்து விட முடியும் என்பதாகவும் , தங்களை பிரபல்யப் படுத்திக் கொள்கின்றனர். ஆனால் நாம் "நிறை குடம் தளும்பாது " என்பதனை என்றும் மறந்து விடக் கூடாது.

குருவே சரணம் !

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum