பாட்டி வைத்தியம்
Page 1 of 1
பாட்டி வைத்தியம்
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாட்டி கை வைத்தியம்
» பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்
» வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருந்தால்
» மன அழுத்தம் குறைய துணைவரை கட்டிபிடியுங்கள்
» ஹரியானாவில் துப்பாக்கியால் மிரட்டி பெண் கற்பழிப்பு!
» பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்
» வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருந்தால்
» மன அழுத்தம் குறைய துணைவரை கட்டிபிடியுங்கள்
» ஹரியானாவில் துப்பாக்கியால் மிரட்டி பெண் கற்பழிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum