செல்லப்பிராணிக்கு உடல் பருமன் இருக்கா? செக் பண்ணுங்க!
Page 1 of 1

Cat
அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற மிக அதிக எடை கொண்ட பூனை தன்னுடைய அதீத உடல் பருமனால் மரணமடைந்து விட்டது. இத்தகவலை அமெரிக்காவில் உள்ள சான்டா விலங்குகள் மற்றும் மனிதர்கள் பாதுகாப்பு நல பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ளது.
கொழு கொழு என காண்பவரை வியக்கவைக்கும் அந்த பூனை ஆரஞ்சும் வெண்மையும் கலந்த நிறத்தை கொண்டது. டாபி என்ற அந்த பூனைக்கு இரண்டு வயது மட்டுமே நிரம்பியுள்ளது. அந்த பூனையை செல்லப்பிராணியாக வளர்த்தவருக்கு 87 வயதாகிவிட்டதால் அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் விலங்குகள் நல பாதுகாப்பு சங்கத்தில் அதை ஒப்படைத்து விட்டார்.
டாபி புகழ்பெற காரணமே அதன் உடல் எடைதான். இரண்டு வயதில் அந்த பூனை 39 பவுண்ட் எடை இருந்தது. ஒரு வளர்ந்த பூனை சராசரியாக 7 முதல் 12 பவுண்ட் எடை மட்டுமே கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் டாபி 5 மடங்கு கூடுதலாக அதாவது 39 பவுண்ட் எடை கொண்டிருந்தது. இதுவே அதன் மரணத்திற்கு காரணமாகிவிட்டது என்கிறார் சான்டா விலங்குகள் பாதுகாப்பு மையத்தின் கால்நடை மருத்துவர்.
கடந்த வாரம் புதன்கிழமையன்று டாபி வழக்கம்போல உற்சாகமாக இல்லாமல் சற்றே மூச்சுத்திணறல் இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக அதிகரித்து அதுவே பூனையின் மரணத்திற்கும் காரணமாகிவிட்டது என்கின்றனர் விலங்குகள் நல பாதுகாப்பாளர்கள். பிரசித்தி பெற்ற கொழு கொழு பூனையில் மரணம் பற்றி, பேஸ்புக், டுவிட்டர் என அனைத்திலும் தகவல் பகிரப்பட்டுள்ளது.
உடல்பருமனை தடுக்க செல்லப்பிராணிகளுக்கு உடல் பருமன் ஏற்பட்டால் அவைகளால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. இதை தவிர்க்க பிராணிகளுக்கு அதீத கொழுப்பு சத்துள்ள உணவுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒரே இடத்தில் அடைத்தே வைத்திருக்காமல் வெளியிடங்களுக்கு வாக்கிங் கூட்டிச்செல்லவேண்டும். சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாட பழக்கவேண்டும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
அதன் எடை அதிகரிக்காமல் கண்காணிக்க வேண்டும். சிறிது அதிகரித்தாலும் அவைகளுக்கு கொடுக்கும் உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தாலும் அவைகளின் உடல் எடை அதிகரிக்கும். எனவே விலங்குகளை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று செக் அப் செய்யவேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகம் எண்ணெய் பசையா இருக்கா? ஸ்கரப் பண்ணுங்க...
» உங்கள் செல்லங்களை செக் பண்ணுங்க!
» மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க...

» கண்கள் வறண்டு இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum