குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!
Page 1 of 1
குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!
மணம் கமழும் மல்லி, மதுரை மல்லி என்றெல்லாம் தெரியும். ஆனால் மருத்துவ மல்லியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
தலையில் சூடுவதற்கும், மாலை அலங்காரங்களுக்கும் பயன்படும் மல்லிகையின் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம்.
சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.
புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.
பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு நீங்கும்.
இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு !!!
» முற்றத்து மல்லிகை
» மஞ்சள் மல்லிகை
» சிவந்த மல்லிகை
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு !!!
» முற்றத்து மல்லிகை
» மஞ்சள் மல்லிகை
» சிவந்த மல்லிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum