வீட்ல நாய் வளர்க்குறீங்களா!!! சுத்தமா வெச்சுக்கோங்க!!!
Page 1 of 1

Dog
வீட்டில் செல்லப் பிராணிகளை ஆசைக்காக வாங்கி, வளர்ப்பது என்பது கடினமான விஷயம் இல்லை. ஆனால் அதனை பராமரிப்பதில் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆசையாக வளர்க்கும் நாய்களோடு தான், நாம் நீண்ட நேரத்தை செலவழிக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது, அதனுடன் ஒட்டி, செல்லமாக கொஞ்சி, கட்டிப் பிடித்து என்றெல்லாம் விளையாடுவோம். அப்போது நாய்கள் சுத்தமாக இல்லையென்றால் தேவையில்லாத நோய்கள் தான் வரும். ஆகவே அவ்வாறு நோய்கள் வருவதை தடுக்க, அந்த செல்ல நாய்களை சுத்தமாக, ஆரோக்கியமாக வைக்க சில டிப்ஸ் இருக்கிறது. அதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
செல்லமாக வளர்க்கும் நாய்களை தினமும் குளிப்பாட்ட வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால், அவற்றை சுத்தமாக எந்த ஒரு அழுக்கும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும். ஆகவே குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது நாய்களை குளிப்பாட்ட வேண்டும். அதனால் எந்த ஒரு நோயும் நாய்க்கும் வராது, நமக்கும் வராது. நிறைய நாய்கள் தண்ணீரைப் பார்த்தால் பயந்து, குரைக்க ஆரம்பிக்கும். ஆகவே அப்போது அதனை ஒரு குழந்தையை எப்படி சமாளித்து, குளிப்பாட்டுகிறோமோ, அப்படி அதன் சிந்தனையையும் திசை திருப்ப வேண்டும். இதனால் அதன் பயம் போய்விடுவதோடு, அதற்கு ஒரு தன்னம்பிக்கையும் வரும்.
நாய்களின் மீது இருக்கும் முடிகளை தினமும் சீப்பை வைத்து சீவ வேண்டும். அதனால் நாய்களின் மீது இருக்கும் அழுக்குகள் நீங்கி விடுவதோடு, நாய்களுக்கும் ஒரு மசாஜ் போன்று இருக்கும்.
தினமும் எப்படி வாய் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் பற்களை தேய்க்கின்றோமோ, அப்படி தான் நாய்களுக்கும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று தேய்க்காமல், தினமும் ஒரு முறை பற்களை தேய்க்க வேண்டும். அதனால் அதன் பற்களில் எந்த ஒரு நோயும் வராமல் தடுப்பதோடு, அதற்கு பிற்காலத்தில் வரும் பிரச்சனையையும் தடுக்கலாம். ஆகவே அதற்கு கடைகளில் விற்கும் நாய்க்கான மென்மையான பிரஸ்களை வாங்கி, நல்ல பேஸ்ட் பயன்படுத்தி தேய்க்கலாம். ஆனால் அதை விட சிறந்தது பேக்கிங் சோடாவுடன், சிறிது உப்பு மற்றும் தண்ணீரை விட்டு கலந்து தேய்த்தால், அதன் பற்களில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.
அனைவருக்குமே நகங்கள் என்று இருந்தால், அதில் அழுக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதிலும் நாய்களுக்கு சொல்லவா வேண்டும். அது அங்கம் இங்கும் செல்லும் போது, மண் தரையில், எதையேனும் புதிதாக இருப்பது போல் தோன்றினால், தன் கால்களை வைத்து, தோண்டும் குழிகளில் அதன் நகங்களில் கோடிக்கணக்கில் கிருமிகள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும். ஆகவே நம் செல்ல நாய்கள் ஆரோக்கியமாக இருக்க, அதன் நகங்களை அடிக்கடி வெட்டி விட வேண்டும். நகங்கள் சற்று கடினமாக இருந்தால், நாய்களுக்கு குளிப்பாட்டியவுடன், ஈரமாக இருக்கும் போது வெட்டினால், ஈஸியாக வெட்டலாம்.
இவ்வாறெல்லாம் கவனித்து வந்தால், நம் வீட்டு செல்ல நாய்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூந்தல் உதிருதா? முடித்துளைகளை ஆரோக்கியமா வெச்சுக்கோங்க!!!
» பெண்களே எப்போதும் பெப்பர் ஸ்ப்ரே வெச்சுக்கோங்க...
» குட்டி நாயை வளர்க்க போறீங்களா! இதெல்லாம் மனசுல வெச்சுக்கோங்க!!!
» கிச்சன் சுத்தமா இருக்கணும்!
» மனதை சுத்தமா செய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum