அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ்...
Page 1 of 1

வீட்டில் செல்லமாக வளர்க்கும் பிராணிகளில் நாய்களுக்குப் பிறகு பூனையை அனைவரும் விரும்பி வளர்ப்பார்கள். ஏனெனில் நாய்கள் சற்று உயரமாக இருக்கும், கடிக்கும். அதனால் நிறைய பேர் அதற்கு பயந்து அமைதியாக இருக்கும் பூனையை வளர்க்க விரும்புவார்கள். ஆனால் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. அதனை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். ஏனெனில் அவை மிகவும் சென்சிட்டிவ்வானவை. ஆகவே அதனை வளர்க்க ஒரு சில அடிப்படை டிப்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
* பூனை குட்டியை வளர்க்கும் போது, அதற்கு ஒரு நாளைக்கு பெரிய பூனைக்கு கொடுக்கும் உணவுகளில் இரண்டு மடங்கு அதிகமான அளவு ஊட்டச்சத்துக்கள் வேண்டும். ஏளெளில் அதன் வளர்ச்சிக்கு அதிகமான சத்துக்கள் வேண்டும். அதற்காக மிகவும் அதிகமான அளவு உணவுகளைக் கொடுத்துவிடக் கூடாது.
* பூனைக்குட்டி பிறந்து 5-6 வாரத்திற்கு பிறகு, தினமும் 4 முறை உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும் சிறுசிறு இடைவேளைக்குப் பிறகு தேவையான அளவு கொடுக்க வேண்டும். ஏனெனில் அதற்கு இருப்பது மிகவும் சிறிய வயிறு. ஆகவே அதிகமாக கொடுத்தால், அதற்கு இம்சையாக இருக்கும்.
* பூனைக் குட்டிகளுக்கு நாய்களின் உணவுகளை கொடுக்க கூடாது. ஏனெனில் பூனைகளுக்கு டாரின் என்னும் ஊட்டச்சத்துப் பொருள் வேண்டும். இதனால் அதற்கு இதய நோய் வராமல் இருப்பதோடு, கண்களும் நன்கு தெரியும். ஆகவே அதற்கு சரியாக பூனையின் உணவை மட்டும் கொடுக்க வேண்டும்.
* 8-10 மாதத்திற்குப் பிறகு, வெறும் பால் மற்றும் பூனை உணவைக் கொடுக்க வேண்டாம். அப்போது அதற்கு சற்று சாதம், தயிர், பால் என்று கலந்து கொடுக்க வேண்டும். இதனால் பூனைக்குட்டிகள்கள் விரைவில் வீட்டில் சமைக்கும் மற்ற உணவுகளை சாப்பிட பழகிவிடும்.
* தினமும் பூனைக் குட்டிகளை குளிப்பாட்ட வேண்டாம். எப்போது அதன் மேல் துர்நாற்றம் வருகிறதோ, அப்போது மட்டும் குளிர்ந்த நீரால் குளிப்பாட்ட வேண்டும். ஏனெனில் சுடு தண்ணீர் அதன் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.
* தினமும் பூனைக்குட்டியின் மயிர்களை சீவ வேண்டும். இதனால் அதன் மேல் இருக்கும் தூசிகள், அழுக்குகள், கிருமிகள் போன்றவை உதிர்ந்துவிடும். பூனைக்குட்டியும் சுத்தமாக இருக்கும்.
* ஏதோ சில நாட்கள் வேண்டுமென்றால், பூனைக்குட்டிகளை நம்மோடு பெட்டில் படுக்க வைக்கலாம். ஆனால் அப்படியே பழக்கிவிடக் கூடாது. ஏனெனில் பின் அது எப்போதுமே உங்களுடனேயே படுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.
* பூனைக்குட்டிகளை மாலை நேரத்தில் விளையாட வைக்க வேண்டும். இதனால் அதன் எலும்புகள் நன்கு வலுபெறுவதோடு, நல்ல வளர்ச்சி ஏற்படும்.
* பூனைக்குட்டிகள் படுப்பதற்கு, சாப்பிடுவதற்கு என்று ஏதேனும் ஒரு கூடையை அழகாக அமைத்து, அதனை பராமரித்து வந்தால், பூனைக்குட்டியும் சமத்துக் குட்டியாக அந்த பழக்கத்திற்கு பழகிவிடும்.
* பூனைக்குட்டிகள் வளர்வதற்கு ஆரம்பித்ததும், அதன் பற்கள், காதுகள் மற்றும நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அது அங்கும், இங்கும் ஓடி விளையாடுவதால், அதன் நகங்களில் கிருமிகள் எளிதில் வந்துவிடும். பின் அது மட்டும் நோயால் பாதிக்கப்படுவதோடு, வீட்டில் இருப்போரும் பாதிக்கப்படுவர். ஆகவே அதன் நகங்களை சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.
எனவே, பூனைக்குட்டியை வளர்க்க வேண்டுமென்பவர்கள மேற்கூறியவற்றையெல்லாம், நினைவில் வைத்து, பின் வளர்த்து பாருங்கள். உங்கள் வீட்டு பூனையும் அழகாக, சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அழகான சருமத்தை பெற அழகான டிப்ஸ்...
» கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…
» அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!
» கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்...
» அழகான கரடி பொம்மைகள் புதுசு போல மின்ன டிப்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum