தினந்தோறும் சுத்தம் செய்தால் இல்லம் கோவிலாகும்!
Page 1 of 1

House Cleaning
வீடு சுத்தம் என்பது மிகப்பெரிய வேலையாக தெரியும். மாசடைந்த சூழல் காரணமாக வீடுகளில் படியும் ஒட்டடை, தூசி போன்றவைகளை அடித்து எடுக்கவே பெரிய வேலையாக இருக்கும். அன்றாடம் வீடு கூட்டும் போதே அதற்கென சில மணித்துளிகள் ஒதுக்கி வீடுகளை சுத்தம் செய்யவேண்டும் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள். இதனால் வீடு சுத்தமாவதோடு தூசு அலர்ஜி போன்றவைகளில் இருந்தும் உடல்நிலை பாதுகாக்கப்படும்.
படுக்கையறை சுத்தம்
காலையில் எழுந்ததும் முதலில் படுக்கையறையில் படுக்கையை உதறி மடித்து வைக்கவேண்டும். பின் இரவு படுக்கையில் கழற்றிப் போட்ட துணிகள், சாக்ஸ், புத்தகங்கள் ஆகியவற்றை எடுத்து அதனதன் இடத்தில் வைத்தலே படுக்கையறை சுத்தமாக அழகாகிவிடும். வாரத்திற்கு ஒருமுறையாவது பெட்டை நகர்த்தி உதறிப் போடவேண்டும். அப்பொழுதுதான் பூச்சிகள் எதுவும் குடித்தனம் புகாமல் இருக்கும்.
சமையலறை சுத்தம்
அடுத்ததாக அதிகம் புழங்கும் இடம் சமையலறை. இங்கு எண்ணெய் கறை அதிகம் படியும். எனவே அதற்கென உள்ள சுத்தம் செய்யும் பொருட்களை வைத்து சமையல் முடிந்தவுடன் துடைத்துவிட்டால் பளிச் என்று ஆகிவிடும். தேவையற்ற சாமான்களை சமையல் அறையில் இருந்து அப்புறப்படுத்துங்கள் எதையும் சேர்த்து வைத்தால்தான் குப்பை சேரும்.
பாத்ரூம் சுத்தம்
சுகாதாரம் பேண வேண்டிய மற்றொரு இடம் குளியலறை, கழிவறைகள். இவற்றுக்கென்று உள்ள ஆசிட், கிளீனிங் பொருட்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். இதனால் தொற்றுக் கிரிமிகள் அழிக்கப்பட்டுவிடும். குளியலறையும் சுத்தமாகும்.
வரவேற்பறை சுத்தம்
வரவேற்பறையில் குப்பை சேருவதற்கு பஞ்சம் இருக்காது. ஏனெனில் எல்லா பொருட்களும் அங்கேதான் கடைசியில் குவித்து வைக்கப்படும். நமக்குத் தேவையான பொருட்களை உபயோகப்படுத்திய பின்னர் அதை குப்பைத் தொட்டியில் போடுவதைப் போல தேவையில்லாத கடிதங்கள், பில்கள் போன்றவற்றை உடனடியாக குப்பையில் போடுவது நல்லது இதனால் வீட்டில் குப்பை சேராது எளிதாக சுத்தம் செய்யலாம்.
பளிச் தரைகள்
தரையைப் பெருக்குகிற போது தினந்தோறும் சுவர்கள் இணையும் இடங்களிலும் ஒட்டடை அடித்தால் வலை கட்டிய சுவர்களைக் காணவே முடியாது. பளிச்சென்று இருக்கும். அறைகளை துடைக்க நாம் ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை விட
பயன்படுத்தாத பழைய ஷாம்பு இருந்தால் அதை வைத்து வீட்டை துடைக்கலாம். வீடு பளிச் என்று ஆகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதியோர் இல்லம் கட்டப்போகிறாராம் ஹன்சிகா!
» நோயை விரட்ட தினந்தோறும் செக்ஸ்!
» நோயை விரட்ட தினந்தோறும் செக்ஸ்!
» சென்னை அல்லது ஹைதராபாதில் முதியோர் இல்லம் கட்டுகிறாராம் ஹன்சிகா!
» தினந்தோறும் பத்தாயிரம் – ஒஸ்தியை மகிழ வைக்கும் சிம்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum