தெர்மாஸ் ஃப்ளாஸ்க் சுத்தமா இருக்கணுமா? இதப்படிங்க!
Page 1 of 1

Tips for Thermos flasks Maintenance
பெரும்பாலோனோர் வீடுகளில் தெர்மாஸ் ஃப்ளாஸ்க் உபயோகிக்கின்றனர். ஆனால் அதை சரியாக பராமரிக்காமல் விடுவதாலேயே துர்நாற்றம் வீசுகிறது. சரியாக கையாளத் தெரியாமல் எளிதில் உடைத்தும் விடுகின்றனர். தெர்மாஸ் ஃப்ளாஸ்க்கினை எப்படி பராமரிப்பது என்பது குறித்த இந்த டிப்ஸ் படித்துப் பாருங்களேன்.
பேக்கிங் சோடா
3 ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு சிறிதளவு வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும். பின்னர் ஃப்ளாஸ்க்கை நன்றாக குலுக்கி கழுவலாம். வெதுவெதுப்பான நீர் ஊற்றி கழுவ துர்நாற்றம் எதுவும் இருக்காது.
கறைகள் போக
ஃப்ளாஸ்கில் காபி, டீ கரைகள் இருந்தால் அவற்றை டிஷ்வாஸ் பவுடரில் ஊறவைக்கவும். பின்னர் நன்றாக பிரஸ் வைத்து தேய்த்து கழுவ ஃப்ளாஸ்க் கரை இன்றி பளிச் தோற்றம் தரும்.
முட்டை ஓடு
முட்டை ஓடு வீட்டில் இருந்தால் நன்றாக உலர்த்தி சேகரித்து வையுங்கள் இதனை பொடியாக்கி ஃப்ளாஸ்க் கழுவ உபயோகிக்கலாம். முட்டை ஓடுகளை நன்றாக ஃப்ளாஸ்கில் போட்டு ஊறவைத்து குலுக்கலாம். அழுக்குகள் இருந்தால் வெளியேறிவிடும். இதேபோல் சிறு மணல்துகளை பயன்படுத்தலாம். ஆனால் ஃப்ளாஸ்க் உடைந்து விடாமல் ஜாக்கிரதையாக பயன்படுத்தவேண்டும்.
வெந்நீர் ஊற்றுங்கள்
ஃப்ளாஸ்க்கைக் கழுவும்போது வெந்நீரைப் பயன்படுத்துங்கள். ஃப்ளாஸ்க்கைப் பயன்படுத்தாத பொழுது கப், மூடி ஆகியவற்றைத் திறந்து வையுங்கள். அப்பொழுதுதான் துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும்.
கெட்டுப்போகாமல் இருக்க
ஃப்ளாஸ்கில் எதை ஊற்றினாலும் ஓர் அங்குலத்திற்குக் கீழ் நிற்கும் வரை ஊற்றினால்தான் நல்ல பாதுகாப்பு இருக்கும்.
பாலைப் பாதுகாப்பதற்கு, கொதிக்கும் நிலையிலோ அல்லது குளிர்ந்த நிலையிலோ ஊற்றி வையுங்கள். அப்போதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும். சூடான பானம் வைப்பதற்கு முன் ஃப்ளாஸ்கை வெந்நீரால் கழுவுங்கள். அவ்வாறே ஐஸ் வாட்டர் வைக்கும் பொழுது குளிர்ந்த நீரால் கழுவுங்கள். ஃப்ளாஸ்கை கையில் சற்று சாய்வாகப் பிடித்து கொண்டு சூடான திரவத்தை ஊற்றினால் ஃப்ளாஸ்க் உடையாது தவிர்க்கலாம்.
துர்நாற்றம் போக
உபயோகிக்காமல் இருக்கும் ஃப்ளாஸ்கில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால் துர்நாற்றம் அடிக்காது. காலியாக உள்ள ஃப்ளாஸ்கில் சிறிதளவு உப்பு போட்டு அதில் சில ஐஸ் துண்டுகளை போட்டு நன்றாக குலுக்கவும். ப்ளாஸ்க் பளிச் சுத்தமாகும். துர்நாற்றம் எதுவும் வீசாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிளைமேக்ஸ் சூப்பரா இருக்கணுமா? இதப்படிங்க!
» மனதை சுத்தமா செய்
» கிச்சன் சுத்தமா இருக்கணும்!
» மேக் அப் போட்டா சுத்தமா இருக்கணும்!
» ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !
» மனதை சுத்தமா செய்
» கிச்சன் சுத்தமா இருக்கணும்!
» மேக் அப் போட்டா சுத்தமா இருக்கணும்!
» ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum