கருட பஞ்சமி நோன்பு
Page 1 of 1
கருட பஞ்சமி நோன்பு
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி அன்று கருட பஞ்சமி நோன்பு செய்ய வேண்டும். அன்று கௌரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும் அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்யவும்.
விரத கல்பத்தில் பணி கௌரி என்று பூஜை இருக்கிறது. அதைச் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்கவும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு சாத்தவும். பூஜை முடிந்த பிறகு யாவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளவும்.
அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்யவும்.
இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்யவும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி விரதம்
» கருட பஞ்சமி நோன்பு
» பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)
» கருட பஞ்சமி வழிபாடு
» கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி விரதம்
» கருட பஞ்சமி நோன்பு
» பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)
» கருட பஞ்சமி வழிபாடு
» கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum