செடிகளுக்கு எப்படி தண்ணீர் ஊற்றலாம்?
Page 1 of 1
செடிகளுக்கு எப்படி தண்ணீர் ஊற்றலாம்?
Water Your Plant
மனிதர்களால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. அது போல் செடிகளாலும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. ஏனெனில் உயிர் வாழ்வதற்கு மற்றும் செழிப்பாக வளர்வதற்குத் தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றினால் செடிகள் அழிந்துவிடும். ஆகவே தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு செடிகளுக்கு தண்ணீர் எப்படி விட வேண்டும், எவ்வாறு விட வேண்டும் என்று ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
1. முதலில் செடியின் அளவை பொறுத்தே தண்ணீரை ஊற்ற வேண்டும். செடியானது சிறிதாக இருந்தால், அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதன் மேல் தண்ணீரைத் தெளித்தோ அல்லது அதை வைத்துள்ள இடம் ஈரமாக இருந்தாலே போதுமானது.
2. காலநிலையைப் பார்க்க வேண்டும். வெப்பம் அதிகமாக இருந்தால், செடியில் உள்ள தண்ணீரானது முற்றிலும் வற்றிவிடும். ஆகவே செடியின் வேரானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க தினமும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதிலும் தண்ணீரானது செடியின் அளவைப் பொறுத்ததே. ஆகவே தரையானது வற்றாமல் இருக்குமளவு தணணீரானது வேண்டும்.
3. செடிக்கு தண்ணீரை காலை அல்லது மாலையிலே ஊற்ற வேண்டும். அது செடியின் உறிஞ்சும் தன்மையைப் பொறுத்தே ஊற்ற வேண்டும். காலையில் ஊற்ற வேண்டும் என்றால் அதிகாலையிலே ஊற்ற வேண்டும். ஏனெனில் செடியானது தண்ணீரை உறிஞ்ச வேண்டும். இல்லையென்றால் தண்ணீரானது சூரியனால் உறிஞ்சப்பட்டு, செடிக்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும். ஆகவே தண்ணீரை ஊற்ற சிறந்த நேரம் அதிகாலையில் அல்லது மாலையிலே சிறந்தது.
4. சில செடிகள் இயற்கையிலேயே நிலங்களில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சி வாழும். அத்தகைய செடிகள் தண்ணீர் இல்லாமல் கூட சில நாட்கள் வாழும். ஆகவே அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றாமல், வாரத்திற்கு இருமுறை ஊற்றினாலே போதுமானது.
5. நிலத்தின் தன்மையை பார்க்க வேண்டும். தோட்டமண் அல்லது களிமண் உள்ள நிலமானது தண்ணீரை சேகரித்துக் கொண்டு, ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட நிலமே செடிகள் வளர ஏற்றது. வறண்ட நிலத்தில் செடிகளை வைத்தால், அவை செடிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, பின் இலைகள் கொஞ்ச காலத்தில் மஞ்சளாக மாறிவிடும்.
6. செடிகளை வைத்துள்ள இடத்தைப் பொறுத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். வீட்டின் வெளியே வைக்கக் கூடிய செடி என்றால், அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுவே வீட்டின் உள்ளே வைக்கக் கூடிய செடி என்றால் அதற்கு தினமும் தண்ணீரானது ஊற்ற தேவையில்லை. மேலும் வீட்டின் உள்ளே இருக்கும் செடிகளுக்கு காலநிலையைக் பொறுத்தும் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதுவும் கோடைகாலம் என்றால் தினமும் ஊற்ற வேண்டும்.
இவ்வாறெல்லாம் தண்ணீர் விட்டு செடிகளைப் பராமரித்தால், செடிகள் வண்ண வண்ண மலர்களில் பூத்து குலுங்குவதோடு, செழிப்போடு நன்கு வளரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்
» ஆறு குவளை (1 1/2 லிட்டர்) தண்ணீர் செய்யும் அற்புதங்கள் தண்ணீர் சிகிச்சை (Water therapy)
» நத்தைகளை வெளியேற்றுங்கள் செடிகளுக்கு ஆபத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum