வீட்டுத்தோட்டத்தில் சாலட் செடிகளை வளர்க்கலாம்!
Page 1 of 1

Grow Salad Greens At Home
வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. ரசாயன உரங்கள் சேர்க்காமல் இயற்கை உரங்களால் அவை வளர்வதால் அஞ்சாமல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சாலட் செடிகளில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றை சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம். பசுமையான சாலட் செடிகளான லெட்டூஸ், முட்டைக்கோஸ், வெள்ளரி போன்றவை சாலட் தயாரிப்பில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றை கடைகளில் வாங்குவதை விட நாமே வீட்டுத் தோட்டங்களில் விளைவித்துக்கொள்ளலாம்.
சிறிய இடம் போதும்
வீட்டுத்தோட்டத்தில் சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும் சாலட் செடிகளை வளர்க்கலாம். அவைகள் சிறிய அளவிலான வேர்களை மட்டுமே கொண்டிருக்கும் என்பதால் சின்ன பாத்திரங்களில் இவற்றை எளிதாக வளர்க்கலாம். வளர வளர அவற்றை கட் செய்து சாலட் செய்து சாப்பிடலாம்.
லெட்டூஸ்
சாலட் செய்வதற்கு பயன்படும் பட்டர் லெட்டூஸ் உயர்தர வைட்டமின்களை கொண்டுள்ளது. குளுமையான சூழலில் 6 முதல் 7 வாரங்களில் இது வளரும்.
வெள்ளரிச் செடி
வீட்டுத்தோட்டத்தில் வெள்ளரிச் செடிகளை எளிதாக வளர்க்கலாம். அதிக அளவில் உரமோ, அதிக அளவில் சூரிய ஒளியோ தேவையில்லை. விதைத்து நன்கு பராமரித்தால் இரண்டரை மாதங்களில் அறுவடை செய்யலாம். வெள்ளரியில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், வைட்டமின் ஏ, சி, டி, இ போன்றவை காணப்படுகின்றன.
முட்டைக்கோஸ்
முட்டைகோஸ் தாவரத்தில் உயர்தர வைட்டமின் இ, வைட்டமின் சி, கால்சியம் போன்றவை காணப்படுகின்றன. தோட்டத்தில் முட்டைக்கோஸ் பயிரிட ஜூன் மாதம் ஏற்ற பருவமாகும். இவற்றோடு, புதினா, ரோஸ்மேரி போன்றவைகளை உடன் பயிரிடலாம்.
கீரைகள்
கீரைகளில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி போன்றவை காணப்படுகின்றன. வீட்டுத்தோட்டத்தில் பாத்தி கட்டியோ சின்னச் சின்ன பாத்திரங்களிலோ அழகாய் கீரைகளை வளர்க்கலாம். வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளை வளர்ப்பதன் மூலம் செலவில்லாத ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை அவ்வப்போது பறித்து சமைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தரமான தக்காளி செடிகளை தோட்டத்தில் வளர்க்கலாம்!
» மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....
» ரோஜா செடிகளை பராமரிப்பது எப்படி?
» கண்ணாடி தொட்டிகளிலும் பசுமையாய் செடி வளர்க்கலாம்!
» வீட்டுத் தோட்டத்தில் பப்பாளி மரம் வளர்க்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum