படிக்கும் மேசையை எப்படி அலங்கரிக்கலாம்?
Page 1 of 1
படிக்கும் மேசையை எப்படி அலங்கரிக்கலாம்?
குழந்தைகள் படிக்கும் அறையானது மிகவும் அமைதியாக சத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். படிக்கும் அறையில் இருக்கும் மேசை அழகாக அலங்கரித்து இருந்தால், அது மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். அதுவும் அந்த அறையையே நமக்கு பிடித்தவாறு அலங்கரித்து இருந்தால், சொல்லவே வேண்டாம் அந்த அறையிலேயே கூட தங்கி விடுவோம். அந்த அளவுக்கு அறையையும், மேசையையும் அலங்கரிக்க சில எளிமையான வழிகளை வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Study Table
1. மேசையில் வைக்கும் விளக்கோ அல்லது சுவற்றில் மாட்டும் விளக்கோ சரியான இடத்தில் பொருத்த வேண்டும். அப்படி பொருத்தும் விளக்கை வேண்டிய டிசைனில் பொருத்தலாம். முக்கியமாக டிசைனாக வாங்கும் விளக்கிலிருந்து வரும் வெளிச்சமானது படிக்கவும், எழுதவும் ஈஸியாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். மேலும் விளக்கானது அறையில் அடித்திருக்கும் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
2. பேனாவை வைக்கும் ஸ்டான்டானது பல வகைகளில் மரக்கட்டை, கண்ணாடி, பிளாஸ்டிக் என்றெல்லாம் உள்ளது. வேண்டுமென்றால் அந்த ஸ்டான்டை கலர்கலரான பேப்பரில் செய்து வைக்கலாம். பெரும்பாலும் கண்ணாடி/பிளாஸ்டிக் ஸ்டான்ட் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் கண்ணாடி என்றால் அதில் பெயிண்டிங் செய்து அழகுபடுத்தலாம். பிளாஸ்டிக் என்றால் அதில் ஏதேனும் குழந்தைகளைக் கவரும் ஸ்டிக்கரை ஒட்டலாம்.
3. புத்தகங்களை அழகாக அடுக்கி வைக்கலாம். கதை புத்தகங்களை ஒரு ரேக்கிலும், பள்ளி புத்தகங்களை ஒரு ரேக்கில் என்று தனித்தனியாக அடுக்கி வைத்தால், புத்தகங்களை தேட அவசியம் ஏதும் இல்லாமல், சீக்கிரமாக எடுக்கலாம்.
4. மேலும் படிக்கும் அறையில் கலர்கலரான ஸ்டிக்கரை ஒட்டலாம். அந்த ஸ்டிக்கரானது படிப்பிற்கு சம்பந்தப்பட்டதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். மேசையின் மீதும் அழகான ஸ்டிக்கரை ஒட்டலாம். குழந்தைகளுக்கு எழுதுவது மிகவும் பிடித்தால், சுவற்றில் வெள்ளை அல்லது கறுப்பு போர்டை மாட்டி விடலாம்.
5. முக்கியமான ஒன்று அறையில் இருக்கும் நாற்காலி. படிக்கும் அறையில் பயன்படுத்தும் நாற்காலியானது குழந்தைகளுக்கு முதுகு வலி வராமல் இருக்க வேண்டும். அந்த நாற்காலியையும் அழகாக குஷன் போட்டு, அந்த நாற்காலிக்கு கவர் போட்டும் அலங்கரிக்கலாம்.
இவ்வாறெல்லாம் செய்தால் படிக்கும் அறையானது அழகாக, குழந்தைகளுக்கு படிக்கும் ஆசையையும் தூண்டும் என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள். நீங்களும் செய்து பாருங்களேன், உங்கள் குழந்தையும் விருப்பத்தோடு ஆவலாக படிக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வரலட்சுமி ஸ்பெஷல்!!! பூஜை அறையை எப்படி அலங்கரிக்கலாம்!!!
» கண்ணாடியை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்!!!
» ஆல்கஹால் பாட்டிலை வெச்சு சூப்பரா வீட்டை அலங்கரிக்கலாம்!!!
» மந்திரம் படிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறை
» எந்திரனில் அரசியல் ‘படிக்கும்’ ரஜினி!!
» கண்ணாடியை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்!!!
» ஆல்கஹால் பாட்டிலை வெச்சு சூப்பரா வீட்டை அலங்கரிக்கலாம்!!!
» மந்திரம் படிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறை
» எந்திரனில் அரசியல் ‘படிக்கும்’ ரஜினி!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum