தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள் !

Go down

எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள் ! Empty எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள் !

Post  ishwarya Tue Feb 12, 2013 1:45 pm

Things you should never say to your hubby
குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்தல் இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை கூடும். ஆனால் எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்டு கணவரை எரிச்சல் படுத்தும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு சில கேள்விகளை கேட்பதினால் கணவர் வெறுப்பின் உச்சக்கட்டத்திற்கே செல்கின்றனராம். கணவரிடம் எந்த மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்று உளவியல் எழுத்தாளர் ‘ஜூடி போர்ட்’தனது ‘எவ்ரிடே லவ்’ என்னும் நூலில் என்ற எழுதியுள்ளார். கணவரை காயப்படுத்தும் விசயங்கள் எவை எவை என்று பட்டியல் இட்டுள்ளார் உளவியல் நிபுணர் படித்துப் பாருங்களேன்.

பொய்யான ஆர்கஸம்

தாம்பத்ய உறவின் போது சரியாக செயல்படவில்லை என்று பொய் சொல்வது ஆண்களை எரிச்சல் படுத்தும்.

உங்க அப்பாவைப் போல அதே குணம் உங்களுக்கு இருக்கு என்று மட்டம் தட்டுவது ஆண்களுக்கு பிடிக்காது

எப்ப புதுவேலை தேடப்போறீங்க?

இது எல்லா மனைவிகளும் கேட்கும் கேள்விதான் என்றாலும் எரிச்சலான கேள்வி. இந்த வேலையை விட நல்ல வேலை எப்ப கண்டுபிடிக்கப் போறீங்க? என்பதுதான் அது.

உங்களோட நடவடிக்கைகளை கண்காணிக்கச் சொல்லி எங்கம்மா எனக்கு எச்சரிக்கை செய்திருக்காங்க என்று கணவரிடம் கூறுவது அவரை காயப்படுத்திவிடும்.

எல்லாம் எனக்குத் தெரியும்

கணவர் ஏதாவது ஒரு விசயத்தில் மனைவிக்கு உதவி செய்ய வரும் பட்சத்தில் எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க அதை விட்டுடுங்க. நான் பாத்துக்கிறேன் என்று கூறுவது தவறானது.

இதயத்தை நொறுக்கிவிடும்

ஏதாவது ஒரு செயலை செய்வதில் சிறு தவறு நேரும் பட்சத்தில் நீங்க எதுக்குமே லாயக்கில்லை, பைசாவுக்கு பிரயோசனமில்லை என்று கூறுவது கணவரின் இதயத்தை நொறுக்கிவிடுமாம்.

கணவரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்கிறேன் என்ற எண்ணத்தில் அவரது உடை அணியும் விதத்தை விமர்சனம் செய்யக்கூடாது.

நண்பர்களை இழிவுபடுத்துவது

உங்கள் கணவரின் நண்பர்களை மதிக்காமல் இருப்பதும். அவர்களின் முன்னிலையிலேயே கணவரை அவமானப்படுத்துவதும் அவருக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துமாம்.

இறுதியாக ஆனால் இதுவே கடைசியானதில்லை. தயவு செய்து குழந்தைகளை பாத்துக்கிறீங்களா? அவர்களை பத்திரமா பாத்துக்கங்க அப்படியே

அப்பனை உரிச்சி வச்சிருக்காங்க என்று கூறக்கூடாதாம். இதுபோன்ற நடவடிக்கைகளினால் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்கின்றார் உளவியல் நிபுணர்.

என்ன பெண்மணிகளே உங்கள் கணவரின் மனதை காயப்படுத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டீர்கள்தானே?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
»  ‘அதுக்கு இவர் லாயக்கில்லை!’ – பிரபல பாடகர் மீது பாடகி புகார்… விவாகரத்து கேட்டு வழக்கு!!
» மனைவி கணவரிடம் எதிர்பார்ப்பது
» கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
» கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum