தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்!

Go down

கடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்!  Empty கடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்!

Post  meenu Tue Feb 12, 2013 1:29 pm

ஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புரிந்து, இறந்தும் வாழ்பவர்கள் சிலரே.

அதுபோன்று சாதனை புரிந்து மறைந்த ஒருவரைத் தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

webdunia photo FILE
இதய அறுவை சிகிச்சை என்பது இன்றைய காலத்தில் வெகுசுலபமானதாகவும், சாதாரணமாக நிகழ்வாகவும் மாறிவிட்டது. ஆனால் அதன் பின்னணியில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.

டாக்டர் மைக்கேல் டிபே‌‌க்கியின் திறமையால் ஈர்க்கப்பட்டு பலர் இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களாகி இருப்பதாக அமெரிக்காவின் மெத்தடிஸ்ட் மருத்துவமனையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதய அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தக்கூடிய எண்ணற்ற உபகரணங்களை கண்டுபிடித்தவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.

கடந்த 1932ஆம் ஆண்டில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றிய மைக்கேல் ‘ரோலர் பம்ப்’ என்ற உபகரணத்தை கண்டுபிடித்தார்.

webdunia photo FILE
அறுவை சிகிச்சையின்போது இதயத்தையும், நுரையீரலையும் இயக்கக்கூடிய கருவியாக இந்த பம்ப் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தக் கால கட்டத்தில் திறந்த இதய அறுவை சிகிச்சை (Open heart Surgery) அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில், இந்தக் கருவியே முன்னோடியாகத் திகழ்ந்தது.

தனது ஆயுட்காலத்தில் அவர் கண்டுபிடித்த ஏராளமான உபகரணங்களில் இந்த கண்டுபிடிப்பே முதல் துவக்கமானது. ஆனால், இன்று மருத்துவ உலகில் அதுவே சாதாரண நடைமுறையாக இருந்து வருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum