இதய நோயைத் தடுக்கும் ஆஸ்பிரின்
Page 1 of 1
இதய நோயைத் தடுக்கும் ஆஸ்பிரின்
ஆஸ்பிரின் மாத்திரையை நடுத்தர வயதுடையவர்கள் அன்றாடம் எடுத்துக் கொள்வதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் ஏற்படுவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளில் தடை (Block) ஏற்படுவதாலேயே மாரடைப்பு ஏற்படக் கூடும். ஆஸ்பிரின் மாத்திரையானது இதய நரம்புகளில் தடை ஏற்படுவதை தடுப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தினமும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால், ஆண்களில் 48 வயதுக்கு மேற்பட்டவர்களும், பெண்களில் 57 வயதுடையவர்களும் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து தப்பி விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிங்ஹாம், ஷெப்பீல்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் 12 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்திய சோதனையின் அடிப்படையில் இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
சோதனைக்குட்படுத்தப்பட்டவர்கள் 30 வயதில் இருந்து 75 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இவர்களில் இதய நோய் ஏற்படுவது 10 விழுக்காடு அளவுக்கே இருந்ததாகவும், அதுவும் குணப்படுத்தக்கூடிய நோயாகும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
என்றாலும் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வோரில் வயிற்றுப் புண் (ulcer) போன்ற பக்கவிளைவுகள் சிலருக்கு ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தவிர சர்க்கரை நோய் இருப்பவர்கள், அதிகளவு இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரை சிகிச்சை பலனளிக்கவில்லை என்றும் தெரிய வந்ததாக அவர்கள் கூறினர்.
மேலும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர்கள் கூறினர்.
என்றாலும், அவரவர் உடல் நிலைக்கேற்ப, தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனைப்படி ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதே சிறந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதய நோயைத் தடுக்கும் ஆஸ்பிரின்
» இதய நோயைத் தடுக்கும் தாய்ப்பால்
» உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!!
» பக்கவாத நோயைத் தடுக்கும் வாழைப்பழம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum