குடும்பத்தோட அடிக்கடி என்ஜாய் பண்ணுங்க!!!
Page 1 of 1
குடும்பத்தோட அடிக்கடி என்ஜாய் பண்ணுங்க!!!
இன்றைய காலக்கட்டத்தில் சந்தோஷமான வாழ்க்கை அமைய வீட்டில் இருப்போர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு செல்வதால், அவர்களால் சரியாக தன் குடும்பத்தோடு அதிகமான நேரத்தை செலவழிக்க முடிவதில்லை. ஏன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே, அது அதிசயம் தான். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான். மேலும் இத்தகையவற்றால் அவர்கள் மன அழுத்தம் மற்றும் உளைச்சல் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். எனவே குடும்பத்தோடு அவ்வப்போது சந்தோஷமாக நேரத்தை எப்படியெல்லாம் செலவழிக்கலாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர் என்று படித்து பாருங்களேன்...
Family
அதிக வேலையின் காரணமாக வீட்டில் இருப்போர் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் இருப்பதால், வேலையில் மட்டும் கவனத்தை செலுத்தாமல், சற்று குடும்பத்தின் மீதும் கவனத்தை செலுத்த வேண்டும். அதற்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஒன்றாக இரவு நேரத்தில் அமர்ந்து சாப்பிட ட்ரை பண்ண வேண்டும். அதுவும் அப்போது தன் குழந்தை மற்றும் கணவருக்கு பிடித்த வகையில் சுவையாக சமைத்து, உண்டாலே அந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இதனால் குழந்தைகளும் சற்று, சந்தோஷப்படுவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், சந்தோஷமாக இருப்பதற்கு சற்று வெளியே அவுட்டிங் செல்லலாம். இவ்வாறு செல்வதால் குழந்தைகளுக்கு, தங்கள் பெற்றோர்கள் தங்களுக்காக நேரத்தை செலவிடுகின்றனர் என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கும். அதிலும் அவுட்டிங் செல்லும் போது குழந்தைகளுக்கு பிடித்த பார்க், போட்டிங் என்று வாரத்திற்கு ஒரு முறை செல்வது, குடும்பத்தை மகிழ்ச்சியாக வைக்கும்.
அடிக்கடி குடும்பத்துடன் விளையாடும் ஏதேனும் ஒரு விளையாட்டை சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் விளையாடலாம். இல்லையென்றால், பைக் ரைடிங், கார் ரைடிங் என்று எங்காவது செய்யலாம். அல்லது நண்பர்கள் குடும்பத்தை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கும் உங்களுக்கும் ஏதேனும் ஒரு போட்டியை வைத்து, விளையாடி மகிழலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால், சந்தோஷமாக இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
* குடும்பத்தோடு மாதத்திற்கு ஒரு முறை எங்கேனும் கேம்ப் செல்லலாம். அதிலும் இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு விளையாட்டு கிளப்பில் சேர்ந்து கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எங்காவது விளையாட்டு போட்டியை நடத்துவார்கள். அப்போது அந்த கேம்ப்பிற்கு குடும்பத்துடன் சென்று அவர்களை உற்சாகப்படுத்தலாம். இதனால் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு சற்று பாசம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் கணவனும், மனைவியும் நல்ல ரொமான்ஸ் கூட செய்யலாம்.
முக்கியமான ஒன்று குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க முடிவெடுத்தப் பின்பு, அப்போது தான் அவற்றை கெடுக்கும் வகையில் டெக்னாலஜி என்ற பெயரில் உள்ள போன் வந்து கெடுக்கும். ஆகவே அப்போது மறக்காமல், போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட வேண்டும். மேலும் முடிந்த அளவு தினமும் குழந்தைகளிடம் சற்று நேரம் பேசினால், அவர்கள் மிகவும் நெருக்கமாவார்கள். இல்லையென்றால் அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும்.
ஆகவே மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றி வந்ததால், குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதோடு, குழந்தைகளையும் ஆரோக்கியமாக வளர்க்கலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூந்தலை வீட்டிலேயே அடிக்கடி ரிலாக்ஸ் பண்ணுங்க!!!
» குடும்பத்தோட சேர்ந்து சாப்பிடுங்க ! குழந்தைகளுக்கு நல்லது !!
» குழந்தைகள் அடிக்கடி அழுவது ஏன்?
» அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது!
» அடிக்கடி விக்கல் வருகிறதா?
» குடும்பத்தோட சேர்ந்து சாப்பிடுங்க ! குழந்தைகளுக்கு நல்லது !!
» குழந்தைகள் அடிக்கடி அழுவது ஏன்?
» அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது!
» அடிக்கடி விக்கல் வருகிறதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum