குழந்தைகள் அதிக நேரம் டி.வி பார்க்கிறார்களா?
Page 1 of 1

தற்போதைய மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப குழந்தைகள் மத்தியில் விளையாட்டு என்பதே நீர்த்துப் போகும் நிலைதான் உள்ளது.
பெரும்பாலான குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே இருப்பதால், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது என்பதே மிகவும் குறைந்து விட்டது.
அடுத்தது தொலைக்காட்சிப் பெட்டி. குழந்தைகளுக்கென்றே தனியான நிகழ்ச்சிகள், கார்ட்டூன் காட்சிகள் போய் தற்போது தனியான சேனல்களே ஏராளமாக தொடங்கப்பட்டு விட்டன.
அண்மையில் ஒரு நண்பர் தனது டாக்டரிடம் கேட்டார். தனது 2 வயது குழந்தை சுமார் 6-7 மணி நேரம் வரை குறிப்பிட்ட இசை நிகழ்ச்சியை பார்ப்பதாகவும், டி.வியை அணைத்தால் அழத் தொடங்கி விடுவதாகவும், இதனைத் தடுக்க என்ன வழி? என்றும் வினவி ஆலோசனை கோரினார்.
பொதுவாக பெரியவர்களே 7 மணி நேரம் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பது உடல் நலத்திற்கும், கண்களுக்கும் தீங்கானது. அதிலும் 2 வயதுக் குழந்தை இவ்வளவு நேரம் பார்ப்பது அந்தக் குழந்தைக்கு மிகவும் தீங்கை விளைவிக்கக் கூடியது என்று டாக்டர் பதில் அளித்தார்.
மேலும் குழந்தைகளுக்கு பொம்மை போன்ற விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்தோ, அல்லது மற்ற குழந்தைகளுடன் விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்தியோ டி.வி. பார்ப்பதில் இருந்து குழந்தையின் கவனத்தை படிப்படியாக திருப்பி விடுங்கள் என்று நண்பருக்கு அந்த டாக்டர் அறிவுரை கூறினார்.
குழந்தைகள் டி.வி. பார்ப்பது என்பதே மிகவும் ஆபத்தான ஒரு விளைவு என்ற நிலையில், அதிகபட்சம் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை குழந்தைகளை டி.வி. பார்க்க அனுமதிக்கலாம்.
குழந்தைகள் விரும்புகிறதே என்பதற்காக பெற்றோராகிய நாம் அவர்களின் அனைத்து விருப்பங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட முடியாது.
வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப, பொது அறிவுடன் குழந்தைகளுக்கு தீங்கு என்று தெரிந்தால், நாம் அவற்றை கண்டிப்புடன் தவிர்த்தல் அவசியம்.
பின்னர் கண் பார்வை பாதிப்பு, கண்ணாடி அணிதல், உடல் பாதிப்பு என்று குழந்தைகளுக்கான நோய்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை மனதில் வைத்து பெற்றோர் செயல்படுதல் அவசியம்.
கூடிய வரை குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயது வரை டி.வி. பார்க்க அனுமதிக்காமல் இருப்பது உடல் நலத்திற்குச் சிறந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைகள் அதிக நேரம் டி.வி பார்க்கிறார்களா?

» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு
» அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் உட்காருகிறீர்களா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum