ஆஸ்துமாவிற்கும் பேரசிட்டமால் மாத்திரைகளுக்கும் தொடர்பு!
Page 1 of 1

நாம் பொதுவாக காய்ச்சல் வந்தால் நாமாகவே பேரசிட்டமால் (Paracetamol) மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்கிறோம். அப்படி நமக்கு தெரியா விட்டாலும் மருத்துவர்கள் காய்ச்சலுக்கு இதையே கொடுக்கின்றனர். வேறு சிலர் மருந்துக் கடைக்குச் சென்று "அய்யா ரொம்ப காய்ச்சலா இருக்கு" என்று கூறுவார். உடனே மருந்துக் கடைக்காரர் பேரசிட்டமால் 650 மிகி மாத்திரையை எடுத்துக் கொடுப்பார்.
காய்ச்சல் மட்டுமல்ல தலைவலி அல்லது பொதுவான வலி என்று வந்து விட்டாலே பேரசிட்டமால் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு நம் அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்ட பேரசிட்டமால் மாத்திரைகளுக்கு ஆஸ்துமா நோயை உருவாக்கும் தன்மை இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சாதாரணமாக ஆஸ்துமா நோய் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களைக் காட்டிலும் பேரசிட்டமால் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படும் சாத்தியம் மும்மடங்கு அதிகம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மூச்சுக்குழல் தொடர்பான ஆய்வுகளை வெளியிடும் ஐரோப்பிய பத்திரிக்கை ஒன்றில் இதுபற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. அதாவது குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது பேரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டாலே ஆஸ்துமா தொந்தரவு உண்டாகிறது என்று கூறப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வெளியீடுகளில் பேரசிட்டமால் மருந்திற்கும் ஆஸ்துமா நோய்க்குமான தொடர்பு பேசப்பட்டு வந்திருக்கிறது. எந்த நாட்டில் பேரசிட்டமால் அதிகம் விற்பனை ஆகிறதோ அங்கெல்லாம் ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் இருப்பதை காணலாம் என்று அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.
நமது மூக்கிலும், மூச்சுக்குழாயிலும், பிராண வாயு உற்பத்தி பொருட்களின் எதிர் விளைவைக் கட்டுப்படுத்த பயன்படும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் (antioxidants) பொருளான குளுடாதியோன் (glutathione) உள்ளது. பேரசிட்டமால் மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால் இதன் அளவு குறைகிறது.
இந்த பொருள்தான் நம் மூச்சுகுழலையும் நுரையீரலையும் சிகரெட் புகை மற்றும் தூசு போன்றவற்றிலிருந்து காக்கிறது. இதன் அளவு குறையும்போது ஆஸ்துமா ஏற்படுவதாக இந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் பேரசிட்டமால் மருந்திற்கு இத்தகைய தன்மை இருப்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உறுதியாக தெரிய வருமேயானால் ஆஸ்துமா நோயால் அவதியுறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்று இந்த ஆய்வை செய்து வரும் பிரிட்டன் மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆஸ்துமாவிற்கும் பேரசிட்டமால் மாத்திரைகளுக்கும் தொடர்பு!
» ஆஸ்துமாவிற்கும் பேரசிட்டமால் மாத்திரைகளுக்கும் தொடர்பு
» கிறிஸ்தவர்களுடன் தொடர்பு
» காதலுக்கும், பாலுறவுக்கும் உள்ள தொடர்பு
» தொழிலாளருடன் தொடர்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum