தீராத தலைவலியைப் போக்க...
Page 1 of 1
தீராத தலைவலியைப் போக்க...
தலைவலி ஏன் வருகிறது என்பதை யாராலும் உறுதியாகக் கூறி விட முடியாது. பல்வேறு தருணங்களில், பல காரணங்களினால் தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு.
`ஒரே சாரிடான், தலைவலி நீங்கி விடும்' என்ற ரைமிங்கான விளம்பரத்தைப் பார்த்து நீங்கள், மாத்திரை வாங்கி போட்டீர்களானால், தலைவலி நீங்க எவ்வித உத்தரவாதமும் கிடையாது. சில நேரங்களில், மாத்திரை போடுவதற்கு முன்பு இருந்த தலைவலியைக் காட்டிலும் வலி அதிகரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
தூக்கமின்மை, பசி, உடல் களைப்பு, இரவில் கண்விழித்துப் படித்தல், கண்பார்வையில் குறைபாடு போன்ற பல காரணங்களினால் தலைவலி ஏற்படலாம்.
ஒருசில தலைவலியானது, காலையில் தூங்கி எழுந்திருக்கும் போதே இருக்கக்கூடும். 24 மணி நேரத்திற்கும் மேலாகக் கூட தலைவலி நீடிக்கலாம்.
காலையில் வழக்கமான நேரத்தில் சாப்பிடுவோர், குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடா விட்டால், தலைவலி ஏற்படும். தாமதமாகச் சாப்பிட்டாலும் கூட த்லைவலி நிற்பதில்லை.
சிலருக்கு குளிர்பானம் குடித்தாலோ அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட்டாலோ தலைவலி ஏற்படும்.
எனவே தலைவலிக்கான காரணங்களாக ஏராளமானவற்றைக் கூறலாம்.
தலைவலியைப் பற்றிக் கூறுகிறேன் என்ற பெயரில், இதனைப் படிப்பதால் உங்களுக்கு தலைவலியை உருவாக்க விரும்பவில்லை.
முதலில் தலைவலி என்று வந்தவுடன், மருந்துக் கடைகளில் நீங்களாகவே சென்று மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிருங்கள்.
தூக்கமின்மையால் தலைவலி என்று உணர்வீர்களானால், உடனடியாக போதிய நேரம் தூங்கி எழுங்கள். அப்போதும் தலைவலி தொடருமானால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
சாப்பிடுவது தாமதமானதால், தலைவலி எனில் சாப்பிட்டு முடித்து சிறிது ஓய்வெடுங்கள். மீண்டும் தலைவலி தொடர்ந்தால், மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
சிலர் மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் காபி அல்லது தேநீர் அருந்தி வழக்கப்படுத்திக் கொண்டிருப்பர். உரிய நேரத்தில் காபியோ, தேநீரோ பருக முடியாமல் போனாலும் தலைவலி ஏற்படக்கூடும்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அவ்வப்போது தலைவலி ஏற்படும் பட்சத்தில், கண் டாக்டரிடம் உரிய பரிசோதனைகளைச் செய்வது மிகவும் உசிதமானது.
ஒரு நாளுக்கு மேல் தலைவலி நீடிக்குமானால், கண்டிப்பாக டாக்டர் ஆலோசனை அவசியம் என்பதை மறவாதீர்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தீராத தலைவலியைப் போக்க...
» தீராத தலைவலியைப் போக்க...
» தீராத தாகம் குறைய
» தீராத பாவமும் தீர்ப்பார் திருக்காமீஸ்வரர்
» தீராத விளையாட்டுப் பிள்ளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum