கர்ப்பிணிகளே சத்து மாத்திரை அதிகம் சாப்பிடாதீங்க!
Page 1 of 1

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் அதிகமாக சத்துமாத்திரை உட்கொள்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே மாத்திரைகளுக்கு பதிலாக காய்கறிகள் பழங்களை அதிகம் உண்ணவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கர்ப்பிணிப்பெண்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து மருத்துவர்களின் ஆலோசனைக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தாயான பெண்களுக்கு சத்தான உணவு அவசியம். நாளொன்று 2000 கலோரி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜங்க் புட், பாஸ்ட் புட் உண்பதை தவிர்க்கவேண்டும். அனைத்து வகை சத்துக்கும் சரிவிகிதமாக கிடைக்கும் வகையிர் பழங்கள், காய்கறிகள், தானியவகைகளை உணவில் சேர்க்கவேண்டும். குறைந்த கொழுப்பு சத்துமிக்க பால், வெண்ணெய் போன்றவைகளை உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
கீரைகள் உணவில் அவசியம்
கர்ப்பிணிகள் தினசரி ஒரு கீரையை உண்ணவேண்டும். அதில் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம். அன்னாச்சி பழம், கொய்யா, பப்பாளி இது ரொம்ப சூடு, இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.
அதிகம் சத்து மாத்திரை ஆபத்து
கர்ப்பிணி பெண்கள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே மாத்திரைக்கு பதில் அதற்கு ஈடான காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
குங்குமப்பூ நல்லது
குங்குமப் பூவானது கர்ப்ப சூடு எனும் உடல் சூட்டை சமப்படுத்தும் எனவே கர்ப்பிணிகள் 5 ஆம் மாதம் முதல் இரவில் நாள் தோறும் பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர, பிறக்கப்போகும் குழந்தை கர்ப்ப சூடும், நோயும் இன்றி அழகுடன் விளங்கும். பாலைக் காய்ச்சும்போதே ஒரு சிட்டிகை குங்குமப் பூவை போட்டு நன்கு காய்ச்சிக் குடிப்பது கர்ப்பிணிகளுக்கு நல்லது.
வாந்தி வயிற்றுவலி குறையும்
லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொண்டு குடிக்க கொடுக்க கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி குறையும். 20 கிராம் சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி அத்துடன் 20 கிராம் பசு வெண்ணெயைக் கலந்து கொடுக்க வயிற்றுவலி குறையும்.
தொலைக்காட்சி தவிர்க்கவும்
கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எளிதில் பிரசவமாக
நடைப் பயிற்சியும்,வீட்டு வேலைகளை குனிந்து நிமிர்ந்து செய்வதும், கர்ப்பப்பைக்கு தளர்ச்சியைக் கொடுத்து சுகப் பிரசவம் ஆக வழி வகுக்கும் . சோம்பை நீர்விட்டு காய்ச்சி கஷாயமாக்கி அதில் 5 கிராம் குங்குமப் பூவை கரைத்துக் கொடுக்க பிரசவம் எளிதாகும். குழந்தை பிறந்த பின்னர் 3 கிராம் குங்குமப்பூவை பாலில் காய்ச்சி இரு வேளை குடித்து வர அதீத ரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பிணிகளே கண்ட மாத்திரை சாப்பிடாதீங்க...
» நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்து உணவுகள்
» கர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்து
» கர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்து!
» கர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்துகர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum