நலம் தரும் நவராத்திரி நாயகியர்
Page 1 of 1
நலம் தரும் நவராத்திரி நாயகியர்
காசி மாநகரில் துர்க்கை, காளி, அம்மன் கோவில்கள் பல உள்ளன. காசிக்கு யாத்திரை செல்பவர்கள், நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் ஒவ்வொரு துர்க்கை அல்லது அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நவராத்திரியின் முதல் நாள் காசி வருணை நதிக்கரையில் உள்ள மலைமகள் `சைலபுத்ரி' கோவிலுக்குச் செல்கிறார்கள்.
பார்வதி தேவியே இங்கு சைலபுத்ரியாக அருள்புரிகிறாள். இத்தேவியை வழிபட்டால் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. இரண்டாம் நாள் கங்கைக்கரையோரம் உள்ள துர்க்கா காட்படித்துறையருகே உள்ள பிரம்மசாரிணி கோவிலுக்குச் சென்று வழிப்படுகிறார்கள். இந்த தேவியை வழிபட மனதில் உறுதி பிறக்கும்; எதையும் சாதிக்கும் சக்தி கிடைக்கும்.
மூன்றாம் நாள் காசி சௌக் கடைத்தெருவில் உள்ள சித்திரகாண்டா துர்க்கை கோவிலுக்குச் செல்கிறார்கள். தங்கமயமான அழகிய தோற்றம் கொண்டவள் இந்த தேவி. இந்த தேவியை வழிபட்டால், சகல இடர்களையும் களைந்து மனதிற்கு தைரியத்தை அளிப்பாள். நான்காம் நாள் காசியின் தென் எல்லையாகக் கருதப்படும் கூஷ்மாண்டா நவதுர்க்கை கோவிலுக்குச் செல்வது வழக்கம்.
இந்த தேவியின் புன்சிரிப்பு உலகத்தை வாழ வைக்கும் சக்தி கொண்டது. ஐந்தாம் நாள் காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் உள்ள ஸ்கந்தமாதா கோவிலுக்குச் செல்வார்கள். சைலபுத்ரி, பிரம்மசாரிணியாகத் தவமிருந்து சிவனை மணந்து, முருகப் பெருமானை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றவள் இந்த தேவிதான்.
ஆறாம் நாள் ஆத்மவிசுவேசுவரர் கோவிலில் எழுந்தருளியுள்ள காத்யாயிணி தேவியை வழிபட வேண்டும். இத்தேவியை வழிப்பட்டால் எதிரிகள் அழிவர். ஏழாம் நாள் காசியில் காளிகாகலி என்ற இடத்திலுள்ள காளராத்திரி கோவிலுக்குச் சென்று துர்க்கையைத் தரிசனம் செய்ய வேண்டும். இந்த தேவியின் தோற்றம் சற்று வித்தியாசமானது. உடலின் நிறம் கருப்பு, தலைமுடி பறந்து கொண்டிருக்கும்.
கழுத்தில் மின்னல் போன்ற ஒளி உமிழும் மாலை அணிந்தவள். இத்தேவியை வழிபட, தீயவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போவார்கள். எட்டாம் நாள் பார்வதியின் அம்சமான மகா கவுரியை வழிபடுவார்கள். இக்கோவில் ஸ்ரீ அன்னபூரணி கோவிலுக்கு அருகில் உள்ளது. இவளை வழிபட பசிப்பிணி நீங்கும்;
மனதில் அமைதி நிலவும். ஒன்பதாம் நாள் காசி சித்தாத்திரி சங்கடா கோவிலுக்கு அருகேயுள்ள சித்திதாத்திரி (சித்திமாதா) எனப்படும் துர்க்கை கோவிலுக்குச் செல்வார்கள். இவள் தாமரை மலர்மீது அமர்ந்திருப்பாள். இவளின் திருமுகத்தைத் தரிசிதத்தாலே முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை.
கடைசியாக பத்தாம் நாள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ காசி விசாலாட்சியை வழிபட வேண்டும். அருகிலுள்ள ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்குச் சென்று வழிபாடு முடித்து பிரசாதம் பெற்று அல்லது அன்னதானத்தில் கலந்துகொண்டு, பிறகு காலபைரவரையும் தரிசித்து, தங்களுக்கு உள்ள தோஷங்களைக் களைந்து, கையில் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டு வேண்டுதலை நிறைவு செய்யலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நலம் தரும் நவராத்திரி நாயகியர்
» நலம் தரும் நவராத்திரி நாயகியர்
» நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி
» நலம் தரும் நவ திருப்பதிகள்
» நலம் தரும் நற்சிந்தனை
» நலம் தரும் நவராத்திரி நாயகியர்
» நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி
» நலம் தரும் நவ திருப்பதிகள்
» நலம் தரும் நற்சிந்தனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum